நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

நலம் வாழ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நலம் வாழ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 21, 2026

முருகா சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 செவ்வாய்க்கிழமை

மனித உடலில்
குருதிக்கு அதிபதி செவ்வாய்..
செவ்வாய்க்கு அதிபதி ஸ்ரீமுருகப்பெருமான்


வயதானோர் தம் பிரச்னைகளுள் ஒன்று இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவது...

சரி... இதனை எப்படி எதிர் கொள்வது?!..


முருகா காப்பாற்று!... - என்று செவ்வேள் குமரனைச் சரணடைந்து செவ்வாய்க்கிழமை களில் விரதம் இருப்பது...

வாரத்தில் இரண்டு நாட்கள் உணவுடன்
முருங்கைக் கீரை ரசம் அருந்துவது.. 

அத்திப் பழம் சாப்பிடுவது..
இதனுடன் 
சுட வைத்த பால்
பனங்கற்கண்டு  அவரவர் விருப்பம்..

சமையலில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வது..

அவ்வப்பொழுது
பேரீச்சம் பழங்கள் தின்பது..

வாரத்தில் இரண்டு நாட்கள்
பீட்ரூட் சாறு அருந்துவது..

வாரத்தில் மூன்று நாட்கள்
முளை கட்டிய பாசிப்பயறு எடுத்துக் கொள்வது.

மாதுளம் பழம் கருப்பு திராட்சை இவற்றை அவ்வப்பொழுது சாப்பிடுவது...

இவற்றால் 
இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பெருகி பிரச்னை தீர்கின்றது என்பது வைத்தியக் குறிப்புகள்...

தக்க மருத்துவரது ஆலோசனையும் மேற்பார்வையும் அவசியம் தேவை...


(இயற்கை வழி குறிப்புகளில் இருந்து)

வாழ்க நலம்
***

சனி, ஏப்ரல் 11, 2026

கோடை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 சனிக்கிழமை

இன்னும் சில நாட்களில் சித்திரை... 
 
கோடை வந்து விட்டது....

வாட்டி வதைக்கும் வெயிலில் நாட்களைக் கடந்தாக வேண்டும்... சில ஒழுங்குமுறைகளை மேற்கொண்டு நமது பொழுதையும் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்...

வெயிலை வீணாக்காமல் உழைப்பவரும் அலைபவரும் பலர்.. 
அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப
தற்காத்துக் கொள்ளல்  வேண்டும். சீரான நிழலை உடன் பேண வேண்டும்...

ஆரோக்கியமானவற்றைப் பருக வேண்டும்... உண்ண வேண்டும்...

இந்த அளவில் இன்றைய பதிவு..


இளநீர் - இயற்கையின் கொடை... உடல் சூட்டைக் குறைத்து நலம் பல சேர்க்கும்... (வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுவதால் இவற்றின் விலை தாறுமாறாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது..)

பதநீர் /நுங்கு - 
இவையும் இயற்கையின் கொடையே... உடல் உஷ்ணத்தைக் குறைத்து நலம் பல சேர்ப்பவை..

தர்பூசணி  -  நீர்ச் சத்து மிக்கது... உடல் வறட்சியைத் தவிர்க்கும்.. முலாம் பழமும் உகந்ததே...

எலுமிச்சை - கனி வர்க்கத்தில் தலை சிறந்தது... உடலுக்குப் பல வகையிலும் சிறந்தது... நாரத்தையும் ஏற்புடையதே... பழத்தைப் பிழிந்து நீருடன் கலந்து பருகுவதே சாலச் சிறந்தது... வேறு கலப்பு எதுவும் வேண்டாம்...


சாத்துக்குடி - எலுமிச்சம் பழத்துக்கு இணையானது... நா வறட்சியைத் தவிர்க்கும். ஆரஞ்சும் இதன் வகையே..

வெள்ளரி - நீர்ச் சத்து மிக்கது.. உடல் வறட்சியைத் தவிர்க்கும்.. உப்பு, மிளகாய்த்தூளில் புரட்டித் தின்பதைத் தவிர்க்கவும்..

மோர்
வீட்டில் தயாரிக்கப்படுகின்ற தயிரும் மோரும் தலை சிறந்தவை..
இயற்கையாகத் தயாரிக்கப்படும் இவற்றுக்கு ஈடு இணையில்லை.. 

மோரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிவது, பச்சை மிளகாய்களை நறுக்கிக் கொட்டுவது,  வற மிளகாயுடன் தாளிதம்  செய்வது போன்ற சேட்டைகளைத் தவிர்ப்பது நலம்...

தண்ணீர் - மண் பானையில் வெட்டி வேர் துணுக்குகளுடன் வைக்கப்பட்ட சுத்தமான நீர் அமுதத்திற்குச் சமம்...

கோடையில் மா, பலா போன்ற பாரம்பரிய பழங்களுடன் இதர பழங்களும் சரியான அளவில் நல்லவையே..

குச்சி ஐஸ்,  கோன் ஐஸ்,  குலுப்பி ஐஸ் மற்றும் ஐஸ்க்ரீம் -  இவற்றோடு கூடிய உடன் பங்காளிகளான  ரோஸ் மில்க், பாதாம் கீர் இவற்றை விட்டு நீங்குவார்  எவரும் இலர்... 

எனவே,
இவற்றைப் பற்றி  சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

நான் மேற்படி ஐஸ் விஷயங்களைக் கருத்தில் கொள்வதேயில்லை...

வண்ண மயமான இரசாயனத் திரவங்கள் உடலுக்கு ஊறு விளைவிப்பவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

தகுந்த
முன்னேற்பாடுகள் இருப்பின்
கோடையும் இனிதே!.
குதுகலிப்போம்..

வாழ்க நலம்
***

ஞாயிறு, மார்ச் 22, 2026

வேண்டும் வேண்டும்..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 ஞாயிற்றுக்கிழமை


இன்று
முன்னோர் வகுத்து வைத்த
அனுபவ மொழிகளில் சில..

தண்ணீர்க் குடத்தை மூடி வைத்தல் வேண்டும்..

அஞ்சறைப் பெட்டியை மூடி வைத்தல் வேண்டும்..

உப்பு புளி  இவற்றில் லக்ஷ்மி குபேரன் இருப்பதால் மூடி வைத்தல் வேண்டும்..

சோறு குழம்பு பாத்திரங்களை மூடி வைத்தல் வேண்டும்..

பணம், நகை, துணிமணி இருக்கின்ற பெட்டிகளை  மூடி வைத்தல் வேண்டும்..

ஒதுங்கும் இடத்தை  மூடி வைத்தல் வேண்டும்..

பூஜை மாடம்  பூஜையறை இவற்றையும் மூடி வைத்தல் வேண்டும்..

நலம் வாழ்க
***

செவ்வாய், மார்ச் 25, 2025

கோ மாதா

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 11
செவ்வாய்க்கிழமை


நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்  -  மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை..  

தமிழ் வளர்த்த ஔவை மூதாட்டியின் அமுத வாக்கு அது....

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக...
- என்று ஆழ்வார் உருகும் போது -


விறகில் தீயினன் பாலில்  படு நெய் போல மறைய நின்றுளான்... - என்று அப்பர் போற்றுகின்றார்...

பக்தனைப் பசு  என்கின்றது சைவ சித்தாந்தம்..

பசுவின் உடலில் சகல தேவர்களும் -  என்று சொல்கின்ற வேதம்,
காளையை தர்மத்தின் வடிவம் எனப் புகழ்கின்றது..

திருநெய்த்தானம் என்று தஞ்சைக்கு அருகில் சிவ ஸ்தலமே உள்ளது..

ஆண்டாள் நாச்சியார் பாடியபடி  - வாங்கக் குடம் நிறைத்த வள்ளல் பெரும் பசுக்களின் வம்சம் அழிந்து போயிற்று...

இன்றைக்கு எல்லாமே கலப்பினங்கள் தான்..

கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோயில் கோசாலையில் மட்டுமே பாரம்பரிய பசுக்களும் காளைகளும் காணக் கிடைக்கின்றன..


இன்றைக்கு
சுத்தமான நெய் ஆபத்தான உணவுப் பட்டியலில்!..

அன்றைக்கு உடல் உழைப்பும் அதற்கான வலுவான புறக் கூறுகளும் காரணிகளும் இருந்தன... இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை..

இன்றைக்கு இருக்கின்ற கலப்பின பசுக்களுக்கு செயற்கை கருவூட்டல் தான்..
காளைகளுடன் இயற்கையான கூடல் கிடையாது...

கலப்பின பசு என்றாலும் செயற்கைக் கருவூட்டல் என்றாலும் இரத்தமும் சதையும் எலும்புமாய் 
அதுவும்  ஒரு ஜீவன் தானே...

வணக்கத்துடன் ஏற்றுக் கொள்வோம்...

அன்றைக்கு மந்தை என்கிற
மேய்ச்சல் நிலமும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் காலாற மேய்தல் 
எனும் வழக்கம் இருந்தது.. 

ஆநிரை மேய்த்தல் எனும் வழக்கமும் இருந்தது.. 

இன்றைக்கு ஊர்ப் பசுக்களில் ஒன்றிரண்டு குப்பை மேட்டில் மேய்கின்றன என்றால் காலக் கொடுமை என்பது இதைத் தான்...

இதற்கிடையில்,
மயானத்தில் மேய்வதும்
கன்றை இழந்ததும் நோயுற்றதும்  முடமானதும் ஆன பசுக்களிடம் இருந்து பால் கறக்கவோ அந்தப் பாலை அருந்துவதோ கூடாது என்பார்கள் பழைய காலத்தில்..

இறைச்சி - 
பிரியாணிப் பிரியர்கள் அதிகமாகி விட்ட
இக்காலத்தில் அத்தகைய நடைமுறைகள் எதுவும் கிடையாது..

எங்கள் பிளாக்கில் வெளியாகின்ற சமையல் குறிப்புகளில் அடிக்கடி பசு நெய் குறிப்பிடப்படுவதால் அன்புக்குரிய நெல்லை அவர்கள் பெங்களூரில் பசுக்கள் குப்பையில் மேய்வதாக சொல்லியிருந்தார்.. அதை முன்னிட்டுத் தான் இந்தப் பதிவு..

பெங்களூருவைப் போலவே எங்களூரிலும் இப்படியான காட்சிகள் காணக் கிடைக்கின்றன..

நிதர்சனமாக கறந்த பாலுடன் ஏனைய பொருட்கள் வருங்காலத்தில் கிடைப்பது அரிது என்றே தோன்றுகின்றது..

இதற்கெல்லாம் யார் காரணம்?..


ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், மார்ச் 11, 2025

நலம் வாழ்க

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 27
 செவ்வாய்க்கிழமை


உடலில் நோயினை எதிர்க்கின்ற அமைப்பானது நமது உடலை பல்வேறு  பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கின்றது.. இதனால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.. 

நோய்க் கிருமிகளுக்கு எதிரான உணவுகள் உடலுக்கு கிடைக்காவிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வது அவசியமாகின்றது...

நோய்க்கிருமி ஒன்று உடலுக்குள் நுழையும் போது, ​​​​நமது நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு, எதிர்வினைகளை வெளியிட்டு  நோய்க் கிருமிகளைத் தாக்குகிறது. இந்த ஆன்டிபாடிகள் நோய்க் கிருமிகளை அழிக்கின்றன... 

நோய் எதிர்ப்பு சக்தி குறித்து இணையத்தில் தேடிய போது கிடைத்தவற்றில் இருந்து சுருக்கமான தகவல்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்ற உணவுகள் -
நன்றி : விக்கி

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற உணவுகளின்  மூலக்கூறுகள்  ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன



மஞ்சள் :
பாரம்பரிய மஞ்சள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.. தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கின்றது.. இதிலுள்ள குர்குமின் நோய் எதிர்ப்பில்  முன் நிற்கின்றது..

பழங்கள் :
வைட்டமின் C நோய் எதிர்ப்பில்  முக்கிய பங்காற்றுவதுடன்
- இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்  உற்பத்தியை அதிகரிக்கின்றது, இது தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியம்..  பெரும்பாலான  சிட்ரஸ் பழங்களில் புளிப்புச் சுவையே
நிறைந்துள்ளது.., 
நெல்லிக்காய், அரிநெல்லி,
எலுமிச்சை, நாரத்தை, ஆரஞ்சு முக்கியமானவை.. சளி மற்றும் இருமலுக்கு எதிரான சக்தியைத் தூண்டுகின்றன..

சீதாப்பழம்  செவ்வாழை மற்றும் பப்பாளிப் பழங்களும்  உகந்தவை..

ப்ரோக்கோலி
காலிஃப்ளவரைப் போன்றது..  பச்சை நிறமுடையது..
இதிலும் வைட்டமின் C அதிகம் உள்ளது.. 

தயிர் :
வைட்டமின் D மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ள தயிர் சிறப்பானது.. செரிமான மண்டலத்தைக் காப்பதுடன்..
உடலில் இயற்கையான பாதுகாப்பினை அதிகரிக்கின்றது..

இஞ்சி :
ஜலதோஷம் மற்றும் இருமலால் அவதிப்படுகின்றவர்களுக்கு சிறந்த வரப்பிரசாதம்.. தொண்டைப் புண்  தொற்றுகளை அழிக்கின்றது.. கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றது..

பூண்டு :
உணவுக்கு  தனித்துவமான சுவையைச் சேர்ப்பது பூண்டு.. இதிலிருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்திக்காக பண்டைய நாட்களில் இருந்தே சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது..

பசலைக் கீரை :
பசலைக் கீரை
மற்றொரு  அற்புதமாகும்.. இதில் பல அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.. வைட்டமின் A வைட்டமின் C வைட்டமின் E, பீட்டா கரோட்டின் மற்றும்  ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன.. கண் மற்றும் தோல் ஆரோக்கியத்தைக் காக்கின்றது..
இந்தக் கீரை நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த உணவாகும்..


சூரியகாந்தி விதைகள் :  
பல ஊட்டச் சத்துக்களை கொண்ட  சிறந்த ஒன்றாகும்..

சூரியகாந்தி விதைகளில்
வைட்டமின் B6, வைட்டமின் E, பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் செலினியம் ஆகியன நிறைந்துள்ளன..

இதனால், சூரியகாந்தி விதைகள்  நோய்களைத் தடுப்பதிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் சிறப்பிடம் பெறுகின்றன..

ஆரோக்கிய வாழ்வு
அவரவர் விருப்பம்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஜூலை 30, 2024

விழிப்பு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 14 
செவ்வாய்க்கிழமை


சிந்திக்கத்தக்க சிறப்பான கருத்துகள்..

நன்றி... நன்றி..


உடல் நலம் காக்க
உடல் நலம் காக்க

சிவாய நம ஓம்
***

வியாழன், ஜூலை 25, 2024

நலங்கு மாவு 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 9
வியாழக்கிழமை


மலர்ந்த முகமே 
வாழ்க்கையின் இன்பம்

1) தாமரை (இதழ்கள்)
தெய்வீக மூலிகை..

2) சந்தனம் 
 மிக உயர்ந்த நறுமணப் பொருள்..

3) ரோஜா மொட்டு 
சருமத்திற்குப் பொலிவு..

4) கஸ்தூரி மஞ்சள் 
 அரிப்பு, தேமலை நீக்குகின்றது..

5)  மஞ்சள் கிழங்கு
சிறந்த கிருமி நாசினி..
மங்கையரின் தோலில் முடி வளர்ச்சியைத் தடுக்கின்றது..

6) வசம்பு 
நோய்த் தடுப்பு, கிருமி நாசினி..

7) கடலைப் பருப்பு 
தோல் மினுமினுப்புக்கு உகந்தது..

8) பாசிப் பருப்பு 
தோலின் கருமை (கருந்தேமல்) நீக்குவது..

9) சீயக்காய் 
அரிப்பு, சொறி நீங்கும்.. 

10) வெட்டி வேர் 
வியர்வையினால் உண்டாகின்ற  அரிப்பிற்கு நிவாரணம்..

11) நன்னாரி வேர் 
வியர்வை நாற்றம் தீரும்..

12) கோரைக் கிழங்கு 
உடற்பொலிவு உண்டாகும்..

13) பூலாங்கிழங்கு
முகப்பரு குறையும்... இதைத் தனியாக அரைத்துப் பூசினால்
பெண்களின் சருமத்தில் தேவையற்ற முடிகள் நீங்கிப் பொலிவு உண்டாகும்..

14) ஆவாரம்பூ
தோலின் பாதுகாப்பு.. 

15) வெந்தயம்
வியர்வை வாடை நீங்கும்.. தோலுக்கு மினுமினுப்பு ஏற்படும்..

16) பூவந்திக்கொட்டை
நுரை பெருக்கி.. கேச பாதுகாப்பு..

17) எலுமிச்சைத் தோல்
இதில் இருக்கும் எண்ணெய் சருமத்தைச் சுத்தப்படுத்தி தசைச் சுருக்கங்களை குறைக்கின்றது..

18) புதினா இலை 
முகத்தின்  திசுக்களுக்குப் பொலிவூட்டுகின்றது.. 

பூவந்திக்கொட்டையின் தோலை  சீயக்காயுடன் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து  அரைத்து  தலைக்கு குளித்து வருவதன் மூலமாக தலைமுடி பளபளப்பாகும். இளநரை ஏற்படாது.. முடி உதிராது.. பொடுகுப் பிரச்னை தீரும்.

மலர்களுள் தெய்வீகமானது தாமரை.. இதனை விலை கொடுத்து வாங்கினாலும் நாம் நேரிடையாக
பயன்படுத்தக் கூடாது.. கோயிகளில் இருந்து நிர்மால்யமாகவே பெற வேண்டும்..

இப்படிப் பெறப்பட்ட தாமரை, சண்பகப் பூக்களோடு அல்லது பூக்களின் இதழ்களோடு மல்லிகை முல்லை மருக்கொழுந்து இவற்றைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவுவதாலும் குளிப்பதாலும் உடல் இயற்கையாகவே நறுமணம் அடைகின்றது.. புத்துணர்ச்சி பெறுகின்றது..

குளிக்கும் முன்பாக நமக்குத் தேவையான அளவு எடுத்து நீரில் குழைத்து உடம்பில் பூசி குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் வைத்திருந்து குளிக்க வேண்டும்..

சருமத்தை பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது..

பொதுவாக வெயில் காலத்தில் வியர்வையும் அரிப்பும்  பிரச்னையாக உள்ளது. 

இந்தப் பிரச்னைக்கு,   செயற்கை வாசனைப் பொருட்கள் உகந்தவை அல்ல... 

கை கால் இடுக்குகளில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் போது, 
சிலருக்கு -  கட்டிகள், கொப்புளங்கள் உருவாகி அதனால் புதிய தொந்தரவு ஆரம்பித்து விடும். 

நலங்கு மாவை உடலில்  தேய்த்துக் குளிப்பதால், வியர்வையின் துர்வாடையையும் நோய்க் கிருமிகளையும் அகற்றலாம்.. 

நலங்கு மாவினை உபயோகிப்பதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. 

அழகு நிலையங்களுக்கு சென்று, ஆயிரக்கணக்கில் செலவழிப்பதை விட,  
அதிக விலையும் ரசாயனமும் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை   பயன்படுத்துவதை விட 

முன்னோர்கள் காட்டிய வழியில்,  மூலிகைப் பொருட்களை கொண்டு நாமே தயாரித்த நலங்கு மாவு சிறந்தது.. 

அழகு மற்றும் ஆரோக்கியம் காக்கப்படும் என்பது உறுதி..
ஃஃ

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே..
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!..
-: கவியரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஜூலை 24, 2024

நலங்கு மாவு 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 8 
புதன் கிழமை


நமது பாரம்பரியங்களுள் ஒன்று நலங்கு மாவு..

இயற்கையின் மூலிகைப் பொருட்களைக் கொண்டு எளிய முறையில் செய்கின்றது தான்  நலங்கு மாவு..

மாவு எனப்பட்டாலும் இது உண்மையில் மூலிகைப் பொடி..

நலங்கு மாவுக் குளியலால்  வியர்வை நாற்றம் நீங்கும் . நலங்கு மாவினால்  எவ்வித தீமையும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

ஆயிரம்  காலத்திற்கும் மேலாக நமது நாட்டில் பயன்பாட்டில் இருந்த பாரம்பரியத்தை நாம் -  நமது மூடத்தனம் பிறத்தியாரது ஏமாற்று வேலை இவற்றால் இழந்தோம்...

ரசாயனச் செறிவுடைய இன்றைய பொருட்கள்
என்றைக்கும் நன்மையைத் தந்ததில்லை..

மேலும் ரசாயனச் செறிவுகளை உபயோகிக்கும் போது அவை சருமத்தில் பக்க விளைவை உண்டாக்கும் என்பது குறித்து பல ஆய்வுகள்.. 

வீட்டில் பொதுவாக அனைவருக்கும் பயன்படும் நலங்கு மாவினை  நாமே  நமக்காகத் தயாரிப்பது எப்படி என்று இந்தப் பதிவில்!..


தேவையான பொருட்கள் :
1) தாமரை இதழ்கள்
2) சந்தனம் 100 gr
3) கஸ்தூரி மஞ்சள் 100 gr
4) கிழங்கு மஞ்சள் 100 gr
5) வசம்பு 50 gr
6) கடலைப் பருப்பு 50 gr
7) பாசிப் பருப்பு 50 gr
8) ரோஜா மொட்டு 50 gr
9) சீயக்காய் 50 gr
10) வெட்டி வேர் 50 gr
11) நன்னாரி வேர் 50 gr
12) கோரைக் கிழங்கு 50 gr
13) பூலாங்கிழங்கு 50 gr
14) ஆவாரம்பூ 50 gr
15) வெந்தயம் 50 gr
16) பூவந்திக்கொட்டை 50 gr

17) எலுமிச்சைத் தோல் 50 gr
18) புதினா இலை 50 gr

மேற்சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் தனித்தன்மை உடையவை..

எலுமிச்சைத் தோல் புதினா இலை இரண்டையும் வீட்டிலேயே சேகரித்துக் கொள்ளலாம்..

மற்றவை அனைத்தையும் நல்ல வெயிலில் உலர்த்தி அரவை இயந்திரத்தில் அரைத்தெடுத்து இறுக்கமான கலத்தில் வைத்துக் கொண்டு 
ஒவ்வொரு நாளும் -  குளிக்கும் போதும் முகம் கழுவும் போதும் நீரில் குழைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியது..

இவை அனைத்தும் நமக்கானவை.. நம்முடையவை..

சிரமம் பாராமல் இதை இரண்டு விதங்களில் அரைத்து வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது..

என்னவெனில்,
இங்கு சொல்லப்பட்டுள்ள பதினெட்டுப் பொருட்களும் 
பெண்களுக்கு உகந்தவை..
(இவை பற்றிய குறிப்புகள் அடுத்த பதிவில்..)

ஆண்களுக்கான குளியல் பொடி எனில் -
1) கஸ்தூரி மஞ்சள் 
2) கிழங்குமஞ்சள் 
3) பூலாங்கிழங்கு ஆகியவற்றை மட்டும் தவிர்த்து விடவும்..

ஏனெனில் - 
மஞ்சளின் (1,2) பளபளப்பு  மேனியில் படியும்.. 

பூலாங்கிழங்கினால் (3)
தோலில் முடி வளர்ச்சி தடைப்பட்டு மினுமினுப்பு ஏற்படும்..

தேவையா ஆண்களுக்கு?..

வாழ்க நலம்!...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே..
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!..
-: கவியரசர் :-
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஜூலை 22, 2024

நீராடல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 6
திங்கட்கிழமை



எண்ணெய்க் குளியல்

நாளுக்கு இருமுறை
வாரத்திற்கு இருமுறை
பட்சத்திற்கு இருமுறை
வருடத்திற்கு இருமுறை 

- என்ற பழங்கணக்கில்
வாரத்திற்கு இருமுறை என்று எண்ணெய்க் குளியலை வகுத்துள்ளது  - 
பழந்தமிழ் சித்த மருத்துவம். 

கோடையில் வாரம் இருமுறை என்றால் மழைக் காலத்தில் வாரம் ஒருமுறை மட்டுமே எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும் - என்றும்  சொல்லி வைத்தனர் ஆன்றோர்..

ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் கண்டிப்பாக
எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும் அந்நாட்களில்...

இன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கமே  இல்லாமல் போய்விட்டது.. 

தீபாவளி எண்ணெய்க் குளியல் மட்டும் தான்..

எங்கள் வீட்டிலும் தீவளிக்குத் தீவளி தான்..

எண்ணெய்க் குளியலுக்கு  உகந்தது - நல்லெண்ணெய்..

கேரளத்தில் தேங்காய் எண்ணெய்க் குளியல் பிரதானம் என்று அறிந்திருக்கின்றேன்.. 

இன்று போல தொ.கா. நிகழ்ச்சிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில்  அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
எதிர்ப்புற வீடுகளும்,  பக்கத்து வீடுகளுமே உற்ற துணை..

விளம்பரங்களில் கும்மியடிப்பவர்கள் எவரும் நடு வீட்டுக்குள் வந்து 
பெரிய பெரிய அறிவுரை ஏதும் சொல்ல வேண்டிய அவசியம் - அப்போது இல்லாதிருந்தது..

பாரம்பரிய வைத்தியர்களின் அறிவுரையின் படி சிலர் -  மூலிகைகளைக் கலந்து சுட வைத்துத் தைலங்கள் தயாரித்து குளியலில்  பயன்படுத்திக் கொள்வர்.. 

எண்ணெய் வழி மருத்துவம் கேரளத்தில் பிரசித்தமானது..

இன்றைக்கு மீண்டும் எண்ணெய்க் குளியல் முன்னெடுக்கப்பட்டால்  
எண்ணெயில் இட்டுக் காய்ச்சுவதற்கு
பிரியாணி மசாலாப் பொடி தான் சிறந்தது!.. 
அதுவும் நாங்க தான் உங்களுக்காக தயாரிக்கிறோம்!.. ன்னு
விளம்பரத்திலும்   யூட்டீப்பிலும் கதறிக் 
கொண்டிருப்பார்கள்!.

நல்லவேளை.. தப்பித்தோம்!..

எண்ணெய்க் குளியலின் போது
முதல் துளியை பூமாதேவிக்கு அர்ப்பணம் செய்து விட்டு வலது உள்ளங்கையில் எண்ணெய் எடுத்து உச்சந்தலையில் அழுத்தமாக தேய்த்துக் கொள்வதும் தொடர்ந்து உந்திக் குழியில் தடவிக் கொள்வதும் மரபு..

அதன் பிறகே உடல் முழுக்க எண்ணெய் தடவிக் கொள்வர்.. 

உள்ளங்காலில்  எண்ணெய் தடவிக் கொள்வது அவசியம்..

ஆண்கள் வீட்டின் உள்ளிருந்து எண்ணெய் தேய்த்துக் கொள்வது கூடாது..

இடக்கையால் எண்ணெய் எடுப்பதோ தடவிக் கொள்வதோ கூடாது.. அது அமங்கலத்தைக் குறிப்பது..

எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளத்திற்குச் செல்லக் கூடாது.. 
எண்ணெய் தேய்த்துக் கொண்டு வீதியில் செல்வது அபசகுனம்..

உடல் முழுக்க நல்லெண்ணெய் வாசம் கமழ்ந்திருக்க - ஒரு நாழிகை வெயில் சார்ந்த நிழலில் இருந்து விட்டு கிணற்றடியில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே முறையான எண்ணெய்க் குளியல்...

திருமணம் நடந்த மறுநாள் காலையில் மாப்பிள்ளையை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் செய்து மோதிரம் அணிவிப்பது சில சமூகங்களில் வழக்கம்.. 

எண்ணெய்க் குளியலால் சிலருக்கு பிரச்னைகளும்  வந்து விடுகின்றன.. அவர்களுக்கு மட்டுமே விதி விலக்கு..

குளியலின் போது 
சீயக்காயே சிறந்தது!

ரசாயன நுரைகளைத் தவிர்த்து விட்டு சீயக்காய்  குளியலே சிறந்தது..

சாதாரணமாக
உடலுக்கு ஆரோக்கியம் தருபவை சீயக்காய்த் தூள் நலங்கு மாவு போன்றவையே.. ரசாயன நுரைப்புகள் அல்ல...

உடல் அழுக்கும் கிருமிகளும் நீங்குவதோடு சருமத்துக்கு பொலிவும் கிடைக்கும்..

எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு, பெண்கள் கூந்தலுக்கு சாம்பிராணி தூபம் (புகை) இட்டுக் கொள்வது வழக்கம்.. 


கூடலில் - 
செண்பகப் பாண்டியன் - பூங்குழலியின் கூடலில் - 


கொங்கு தேர் வாழ்க்கை வடிவத்தில்
நக்கீரரின் விதி வந்து விளையாடியது இப்படியான நேரத்தில் தான்!..

தலையில் சேர்ந்திருக்கும் நீரை சாம்பிராணிப் புகை அகற்றி நறுமணம் ஊட்டும்.

ஆனால், இப்போது எல்லாம் கலப்படம் என்ற நிலையில் நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான சாம்பிராணியாக பார்த்து வாங்கி தூபம் இட்டுக் கொள்வது நல்லது.. 

நல்ல சாம்பிராணியாக கிடைக்காத பட்சத்தில் நாமே தூபப் பொடி தயாரித்துக் கொள்ள வேண்டியது தான்..

சூரியன் உதித்ததில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக் குளித்திடல் வேண்டும்.. ஒன்பது மணிக்குப் பிறகு எண்ணெய்க் குளியல் கூடாது.. நடுப்பகலில்
அந்தியில் இரவில் கூடவே கூடாது..

ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அன்று மட்டுமே உதயாதி நாழிகைக்கு முன் எண்ணெய்க் குளியலுக்கு அனுமதி (தீபாவளி)..

எண்ணெய்க் குளியலால்
உடலில் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்...

முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், எண்ணெய்த் தேய்ப்பு  செய்து குளிப்பது நல்லது.

குளிர்ச்சியான எந்த உணவையும் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று மதியம் சோறும் மிளகு ரசமும்  தான் சிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது..

ஆயினும்,
எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளின் மதிய உணவுக்குள்  
கோழியும் ஆடும் மற்றதும் எப்படி
உள்ளே புகுந்தன என்பது தெரிய வில்லை..

புலால் உணவுகளைக் கூடுமானவரை எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று
உண்ண வேண்டாம்...

இங்கே நம்முடைய கபாலச் சூடு உடல் சூடு - குறையாதபடிக்கு  நுரைப்பி விளம்பரங்கள் கரடி ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கின்றன..

உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய எண்ணெய்க் குளியல் நமக்கே நமக்கான பாரம்பரியம் என்பதை மறவாது இருப்போம்..
புறந்தூய்மை நீரால் அமையும்..

சிவாய நம ஓம்
***

வியாழன், ஜூன் 13, 2024

நிறங்கள்


நாடும்  வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 31
வியாழக்கிழமை



" நிறங்களோர் ஐந்துடையாய் எம்பெருமான்.. " - என்று மாணிக்கவாசகர் போற்றுகின்றார்..

நாம் வாழ்கின்ற
வாழ்க்கையும் வண்ணங்களை உடையது.. 

இப்படியான வாழ்க்கையின்
வண்ணங்களுக்குள் இன்றைய அறிவியல் 
உணவின் வழியாக 
நுழைந்து அவற்றை ஆபத்தானவைகளாக மாற்றி விட்டது..


நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட  மசாலா பொருட்களுக்கு ஏதேதோ காரணங்களால் -

சிங்கப்பூர், ஹாங்காங்  
மற்றும் சில ஐரோப்பிய  நாடுகள் தடை விதித்துள்ளதெல்லாம் பழைய கதை.. 

அவற்றைப் பற்றி விவரமாக அறிந்திருப்பீர்கள்..


சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிறங்கள் - brilliant blue, indigo, green, erithroclne, red, tartrazine, sunset yellow, citrus red, orange..

வெளிநாடுகளில்  - இவை பல்வேறு நிலைகளில் தரப் பரிசோதனைக்கு உள்ளாகின்றன.. 

இவற்றுக்கும் பயன்பாட்டிற்கான கால அளவு நிர்ணயிக்கப்பட்டு  முழுமையாகக் கண்காணிக்கப்படுகின்றது.. 

நடைமுறை மீறப்படும் போது - மிகக் கடுமையான தண்டனைகள்..


இங்கே இப்படியெல்லாம் இருக்கின்றதா.. 
தெரியவில்லை.. 

தெருவோர உணவுக் 
கடைகளையும் -

Preservatives 
Bread Improvers, Artificial color, Smell & Essence நிறைந்த உணவுகளையும்,


பல்வேறு ரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ள உணவுகளையும்
சாப்பிடுவதை முழுதாக மறந்து விடுவதே சாலச் சிறந்தது..


Preservatives
Bread Improver
Artificial flavour (Aroma)
Synthetic food colours

- என்றெல்லாம் கூகிளில் தேடிப் பார்த்தால் நிறைய விஷயங்கள் காத்திருக்கின்றன..

பதிவில் சொல்வதற்கு மிகவும் தயக்கமாக இருக்கின்றது..

விரும்பினால் - அவரவரும் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்..



பாமரர்களும் உழைப்பாளிகளும் பசிக்கொடுமைக்காக உண்ணுகின்ற உணவுகளுக்குள் கெட்டுப் போன இறைச்சிகளையும் ஆபத்தை விளைவிக்கின்ற மசாலாக்களையும் கலக்கின்ற உள்ளூர் விஞ்ஞானிகள் நிறைந்த நாடு நம்முடையது..

இப்படியானவைகளில் இருந்து தெளிவு பெற்று,
உங்களை - நீங்களே காத்துக் கொள்ளுங்கள்.. 

இந்தப் பதிவு தொகுக்கப்பட்ட பின்னர் கிடைத்த காணொளி இது..


அனுப்பியவர்
திரு. நவநீதன்
ஸ்ரீ கோரக்கர் வழிபாட்டுக் குழு

உங்கள் நலம்
உங்கள் கையில்!..

இயற்கையே இறைவன்
இறைவனே இயற்கை..
***

திங்கள், ஜூன் 10, 2024

நறுமணக் குடிநீர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 28
திங்கட்கிழமை


நன்னாரி..

கிருஷ்ணவல்லி, நறு நெட்டி - என, வேறு பெயர்கள் விக்கியில் காணக் கிடைக்கின்றன..


கிருஷ்ணவல்லி எனும் நன்னாரியை தியாக வல்லி என்றாலும் தகும்.. 

நலம் தரும் இதர விருட்சங்களைப் போல தன்னையே நமக்களிக்கின்றது -
நமக்காக..

பாரதத்தின் பாரம்பரிய மூலிகை நன்னாரி..
இது கொடி இனத் தாவரம்.. சூழ்நிலையைப் பொறுத்து தரையிலோ  கொம்பிலோ படர்கின்ற இயல்புடையது.. இதன் வேர் நறுமணம் உடையது..

நன்னாரி நமது குருதியைத் தூய்மைப்படுத்துவதாக விக்கி புகல்கின்றது..

நன்னாரி நறுமணக் குடிநீர்..
நன்னாரி ஷர்பத் என்பது வழக்கம்..
ஷர்பத் என்பது அரபுச் சொல் ..

நன்னாரி ஊறிய தண்ணீர், பனை வெல்லம், எலுமிச்சைச் சாறு,  ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படுவதே ' நன்னாரி ஷர்பத் '..

இந்த  நன்னாரி ஷர்பத்திற்கு மெருகு சேர்ப்பது -  சிவதுளசி எனும் திருநீற்றுப் பச்சிலையின் (Basil) விதைகள்..

சிவதுளசி விதைகள்

நன்னாரி நறுமணக் குடிநீர், திருநீற்றுப் பச்சிலை விதை - ஆகிய இவற்றை நம்மிடமிருந்து  பாரசீக மருத்துவம் ஏற்றுக் கொண்டு நமக்கே திருப்பி வழங்கியதால் - சப்ஜா என்றும் ஷர்பத் என்றும் சொல் வழக்கத்தில் மாறி விட்டன..

திருநீற்றுப் பச்சிலை பித்தத்தைத் தணித்து உடல் சூட்டைக் குறைக்கின்றது.. 

நீர்க்கடுப்பினைத் தணிப்பதிலும், வயிற்றுப் புண்களை ஆற்றுவதிலும் சிறப்புடையது.

நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகின்றது..


திருநீற்றுப் பச்சிலை விதைகளை நீரில் ஊற வைத்தால் நீரை உறிஞ்சிக் கொண்டு வழவழப்பாக மாறுகின்ற தன்மை உடையவை..

ஒரு தேக்கரண்டி உலர்ந்த திருநீற்றுப் பச்சிலை விதைகளை நீரில் ஊற வைத்து, நன்னாரி நறுமணக் குடிநீருடன் சேர்த்து வெயில் நேரங்களில் அருந்தினால் ஆரோக்கியம் நம் கையில்..

நன்னாரி நறுமணக் குடிநீரில் வெள்ளைச் சீனியைப் பயன்படுத்துவது சரியல்ல. பாரம்பரிய பனங்கற்கண்டு ஒன்றே நல்லது - என்றொரு கருத்தும் இருக்கின்றது.

நன்னாரி சர்பத் என்ற பெயரில் சாலையோரத்தில் பற்பல வண்ணங்களில் விற்கப்படுகின்ற எதுவும் நம்பிக்கைக்கு உரியவை அல்ல.. தரமானவை அல்ல... உடல் நலனுக்கும் பணத்திற்கும் கேடானவை..  

சுத்தம் சுகாதாரம் இவற்றின் அடிப்படையில்  வீட்டிலேயே நன்னாரியின் பெருமையும் நறுமணக் குடிநீர் செய்து கொள்ளும் முறையும் இப்பதிவின் வாயிலாக பேசப்படுகின்றது..

உடலில் திசுக்களின் வளர்ச்சியை (Increases epithelisation) நன்னாரி தூண்டுவதாகக் குறிக்கப்படுகின்றது.. வயிற்றுப் புண் அழற்சி இவைகளை சரிசெய்வது நன்னாரியின் குணம் என்கின்றது சித்த மருத்துவம்..

பல்வேறு காரணங்களால் கல்லீரலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைத் தடுக்கும் வல்லமை நன்னாரிக்கு இருக்கின்றது..

நன்னாரியின் வேரை பெருவிரல் அளவுக்கு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, இரவு முழுக்க புத்தம் புதிய மண் பானைத் தண்ணீரில் போட்டு வைத்து, காலையில் வடிகட்டி அதனுடன் சிறிது கருப்பட்டி சேர்த்துப் பருகினால் உடலின் அதிகப்படியான  உஷ்ணம் குறையும்..

வெயிலில் அலைந்து திரிவோர்க்கு சிறுநீர் எரிச்சல் (நீர்க்கடுப்பு) ஏற்படலாம்.. இதற்கு உடனடி நிவாரணம் - நன்னாரி வேர்ப் பொடியுடன் பனை வெல்லம் கரைத்த நீர்..

நன்னாரி வேரை வெயிலில் உலர்த்தி  இடித்து வைத்துக் கொள்வதும் பொடி செய்து வைத்துக் கொள்வதும் நல்லது.. அவ்வப்போது நாமே நமக்காக நன்னாரிக் குடிநீர்  தயாரித்துக் கொள்ளலாம்..




நன்னாரி நறுமணக் குடிநீரில்
எலுமிச்சையுடன் -  
நாளுக்கொன்றாக நாரத்தை, சாத்துக்குடி, ஆரஞ்சு பழச் சாறுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.. எலுமிச்சைச் சாற்றினை அதிகமாகப் பருகுவது இளைஞர்களுக்கு நல்லதல்ல..

உடலின் உஷ்ணத்தை சமப்படுத்தினாலே நோய்கள் குறைந்து விடும்.. நோய் இன்றி  வாழ்வதற்கு நன்னாரி நறுமணக் குடிநீர் அவசியமானது..

இப்போது வெயில் காலம் ஆனதால் பலரும் சர்பத் கடைகளை நாடுகின்றனர்..  

செயற்கை வண்ணங்கள், சுவையூட்டிகள் - உடலுக்குக் கேடானவை என்று நிரூபணம் ஆகிக் கொண்டு இருக்கின்றன..

இவ்வேளையில், நமக்கு நாமே  நல்லனவற்றைத் தேடிக் கொள்ள வேண்டும்.. சிரமம் தான்.. 
ஆனாலும்,
முயற்சி திருவினை ஆக்கும்..

நமது நலம் நமது கையில்..

இயற்கையை நாம் வாழ வைப்போம்..
இயற்கை நம்மை வாழ வைக்கும்..

இறைவனே இயற்கை
இயற்கையே இறைவன்..
***