நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 16, 2022

ரோக நிவாரணி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி
பட்டீஸ்வரம்

நேற்று எங்கள் பிளாக்கின் வழியே
அன்புக்குரிய ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களும் அவர்களது பேத்தியும் கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டதை அறிந்து மிகவும் வேதனையாயிற்று..

அவர்களைப் பீடித்துள்ள விஷக் காய்ச்சல் விலகி ஓடிடவும் விரைவில் நலம் பெற்றிடவும் பிரார்த்தித்துக் கொண்டு இன்றை பதிவினில் ஸ்ரீ துர்கை சித்தர் வழங்கிய ரோக நிவாரண அஷ்டகத்தை வழங்கியுள்ளேன்..

மேலும் இத்துடன்
ரோக, கிரஹ, திருஷ்டி நிவாரணத்திற்கான  யூட்யூப் - கேட்பு ஒலி ஒன்றின் இணைப்பினைக் கொடுத்துள்ளேன்...

அனைவரும் கேட்டு நலம் பெறுவீர்களாக!..

கேட்பு ஒலியின் இணைப்பு :-


அம்பிகையின் அருளால் இன்னல் விலகிட மீண்டும் வேண்டிக் கொள்கின்றேன்..

ஸ்ரீ வராஹி - தஞ்சை

பகவதி தேவி பர்வத தேவி 
பலமிகு தேவி துர்கையளே
ஜெகமது யாவும் ஜெய ஜெய எனவே 
சங்கரி உன்னைப் பாடி டுமே 
ஹந ஹந தகதக பசபச எனவே 
தளிர்த்திடு ஜோதியானவளே 
ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்கா!.. 1

தண்டினி தேவி தக்ஷினி தேவி 
கட்கினி தேவி துர்கையளே
தந்தன தான தனதன தான 
தாண்டவ நடன ஈஸ்வரியே 
முண்டினிதேவி முனையொளி சூலி 
முனிவர்கள் தேவி  முன்னவளே
ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்கா!.. 2

தஞ்சை ஸ்ரீ மகமாயி

காளினி நீயே காமினி நீயே 
கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி நீயே 
நீர்நிதி நீயே நீள்ஒளியே 
மாலினி நீயே மாதினி நீயே 
மாதவி நீயே மான் விழியே 
ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்கா!.. 3

நாரணி மாயே நான்முகி நீயே 
நாகினி யாயே துர்கையளே
ஊரணி மாயே ஊற்று  நீதாயே 
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே 
காரணி மாயே காருணி தாயே 
கானக யாயே காசி னியே
ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநிவாரணி ஜெய துர்கா!.. 4

ஸ்ரீ பகவதி - ஆற்றுக்கால்

திருமகள் ஆனாய் கலைமகள் ஆனாய்
மலைமகள் ஆனாய் துர்கையளே
பெருநிதி ஆனாய் பேரறிவானாய் 
பெருவலி வானாய் பெண் மையளே
நறுமலர் ஆனாய் நல்லவள் ஆனாய் 
நந்தினி ஆனாய் நங்கையளே
ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்கா!.. 5

வேதமும் நீயே வேதியள் நீயே 
வேகமும் நீயே துர்கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே 
நாணமும் நீயே நாயகியே 
மாதமும் நீயே மாதவம் நீயே 
மானமும் நீயே மாயவளே 
ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்கா!.. 6

ஸ்ரீ சமயபுரத்தாள்

கோவுறை ஜோதி கோமள ஜோதி 
கோமதி ஜோதி துர்கையளே
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி 
நாட்டிய ஜோதி நாச்சியளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி 
பூதநற் ஜோதி பூர ணியே
ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்கா!.. 7

ஜெய ஜெய சைல புத்திரி ப்ரம்ம 
சாரிணி சந்திர கண்டினியே 
ஜெயஜெய தேவி கூஷ் மாண்டினியே
ஸ்கந்த மாதா காத்யா யனி
ஜெயஜெய கால ராத்திரி கௌரி 
ஸித்திதா ஸ்ரீ நவ துர்கையளே
ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்கா!.. 8


ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***

12 கருத்துகள்:

  1. அருமை.  கமலா அக்காவும் அவர் பேத்தியும் விரைவில் பூரண நலம்பெற பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி ஸ்ரீராம்..

      நலம் விளைவதற்கு வேண்டிக் கொள்வோம்..

      நீக்கு
  2. கமலா ஹரிஹரனும் அவர் குடும்பத்தாரும் விரைவில் பூரண நலம் பெறப் பிரார்த்தனைகள். இப்போதைய நிலைமைக்கு அனைவருக்கும் தேவையானது இந்த ரோக நிவாரணி ஸ்தோத்திரம். அனைத்து அம்பிகையரின் தரிசனத்துக்கும் நன்றி. உலகம் முழுவதும் நோய்க்கொடுமையிலிருந்து முற்றிலும் நீங்கிப் பிரச்னைகள் இல்லாமல் வாழவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி அக்கா..

      நலம் விளைவதற்கு வேண்டிக் கொள்வோம்..

      நீக்கு
  3. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி தனபாலன்..

      நலம் விளைவதற்கு வேண்டிக் கொள்வோம்..

      நீக்கு
  4. நல்ல விஷயம் அண்ணா. கமலாக்காவும் அவர் பேத்தியும் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம். எல்லோருமே நலமுடன் இருக்கப் பிரார்த்திப்போம், ஏன் இந்த உலகம் முழுவதற்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி சகோ..

      நலமே விளைவதற்கு வேண்டிக் கொள்வோம்..

      நீக்கு
  5. இப்பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூல்மாக மறுபடியும் காணும் வாய்ப்பு கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கமலா ஹரிகரன் அவர்களும், அவர்களது பேத்தியும் விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள். நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    நாமும் பிரார்த்திப்போம்
    நன்றி வெங்கட்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..