நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 25, 2022

உங்களுடன்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

காற்றினிலே!...

நன்றி : சித்திரச் செல்வர்

கடந்த ஆறு வாரங்களாக எங்கள் பிளாக்கில் வெளியிடப்பட்ட குறுந்தொடர்..

அதற்கு முன்பு வெளியாகிய ஏணிமலைத் தொடருக்கு கவிதையாக ஒரு கருத்தினை வழங்கிட - அத்தகைய கதையினை எழுதும்படிக்கு நானும் உந்தப்பட்டேன்..

முதலில் - என் மனதில் உதித்த கதை இதுவல்ல.. அதன் முதல் பகுதியை எழுதி முடித்த இரவில் - 

" என்னைப் பற்றி எழுது!.. " - என, ஒரு   குரல்..

இது மாதிரியான அமானுஷ்யங்கள் ஏற்கனவே பழக்கம் என்றாலும்,
" எழுது என்றால் எதை எழுதுவது!.. " என சந்தேகம்..

அந்த அளவில் ஒளியுருவம் காட்டி ஒற்றை வரியில் சொல்லப்பட்டது அறுநூற்று வருடங்களுக்கு முந்தைய சம்பவம்..

இமயமலைச் சாரல், ஷிவானி கங்கா, திலக புரி, அவந்திகா, மித்ரா, மூர்க்கன் -  என, கண்களில் விரிந்தனர்..

அந்தப்புரத்தில் இசைக்கருவி ஒன்று வேண்டுமே என்று தேடி இணையத்தில் இருந்து பிரதர்ஷன வீணையை (தில்ரூபா) கண்டெடுத்தேன்..

இனி வரும் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டால் சில சந்தேகங்கள் அப்போதே தீர்ந்து விடும்..

அவந்திகா ஸ்ரீஷாந்தினி - திலகபுரியின் இளவரசி..
ஸ்ரீ உஜ்ஜயினி மஹா காளீஸ்வரியின் பக்தை..
நாக உபாசனையால் இச்சாதாரி சக்தியையும் நாக ரத்தினக் கல்லையும் வரப்ரசாதமாகப் பெற்றவள்.. உஜ்ஜயினி இளவரசன் விக்ரமாதித்ய வருண்குமாரின் அன்புக் காதலி..

மித்ரா சுபாஷினி - இளவரசி
அவந்திகாவின் தோழி..

அவந்திகா  ஸ்ரீ காளீஸ்வரியிடம் பெற்ற வரத்தினாலும் உபாசனையால் தான் பெற்ற சித்திகளாலும் அவ்வப்போது - தன் தோழியையும் காதலனையும் தன்வயம் ஆக்குவாள்..

நம்மிடையே - மானஸ தீட்சை (நினைத்தல்), நயன தீட்சை (பார்த்தல்), ஸ்பரிச தீட்சை (தொடுதல்) என்று உள்ளதையும் நினைவில் கொள்க..

இவர்கள் மூவரும் அவ்வப்போது மக்களுடன் கலந்து அநீதியை அழித்து விட்டு ஸ்ரீ உஜ்ஜயினியில் நித்ய வாசம் கொள்வர்..

இம்முறை இவர்களது இலக்கு பாரதத்தின் வங்கத்தினுள் கள்ளத் தனமாகப் புகுந்த  குடியேறி.. இளம் பெண்களை வீழ்த்துவதே இவனது தொழில்..

இவனது இப்போதைய விருப்பம் - நீலு..

நீலுவைக் காப்பாற்றி இவனை அழிப்பதற்கு பருவுடல் வேண்டும்.. ஒளி உருவாய் இருக்கும் மூவரும் தங்கள் நினைவுகளுடன் உட்கலந்து இயங்குவதற்காகத் தான் -
மித்ரா - நீலுவுடன் கலந்து காத்திருந்தாள்..
வருண், அவந்திகா இருவரும் - விஜய், ஆர்த்தியுடன் வந்து சேர்ந்தனர்..

அன்றைக்குப் பறிபோன ரத்தினக்கல் - கள்ளக் குடியேறியிடம்  இருப்பதை தியானத்தினால் உணர்கின்றாள் அவந்திகா..

சில்லரை வித்தைகள் சிலவற்றை அறிந்திருந்த
அவனை அழித்து ரத்தினக் கல்லை மீட்டாள்.. நீலுவையும் காப்பாற்றினாள்.. 

நீலு சாதாரணப் பெண்.. அவளை அடைவதற்கு முயன்ற வங்காளி அழிந்து போகின்றான்..


தீயவன் ஆகிய அவனது உடலையும் மண்ணுக்குள் அடக்கி விடாமல் முண்டத் தலை பொம்மைக்குள் குடியிருந்த ஆவிக்கும் பேய் பிசாசுகளுக்கும் இரையாக்கி விடுகின்றாள் அவந்திகா..

மிச்சம் என்று எதுவும் இல்லை.. எப்பேர்ப்பட்ட கொம்பன் வந்தாலும் இனிமேல் கண்டறிய முடியாது.. துப்பறிவதற்கு நிஜப் புலியே வந்தாலும் ஒரு தடயமும் கிடைக்காது.. ஆகையால் துப்பறியும் வேலை மிச்சம்..

அவன் கள்ளக் குடியேறி ஆனதால் அவன் எந்த ஆதாரங்களையும் விடுதியில் சமர்ப்பிக்க வில்லை..

இப்படியான ஒருவன் இந்த விடுதியில் பணி செய்கின்ற விவரம் எவரிடத்திலும்  கிடையாது.. மேலும் அவனைத்
தேடி யாரும் வரப் போவதும் இல்லை.. அப்படியே யாரும் வந்து கேட்டால்,
" அன்றைக்கு இருந்தான்.. வேலை வேண்டாம் - என்று சொல்லி விட்டு நேற்றைக்கு போய் விட்டான்!.. "  - என்று சொல்லி கணக்கை நேர் செய்து விடலாம்..

இவை எதுவும் நீலுவுக்குத் தெரியாது.. வழக்கம் போல தேவ காரியங்கள் யாருக்கும் விளங்குவது இல்லை.. விளக்கப் படுவதும் இல்லை..

வங்காளியை அழித்ததும்
வந்த வேலை முடிந்ததென - அவந்திகா, வருண், மித்ரா மூவரும் புறாக்கள் என்றாகி விண்ணேறிப் பறந்தனர்..
***

@ கீதா சாம்பசிவம்
// நீலுவைப் பற்றி எதுவுமே சொல்லலையே?.. நான் ஏதோ எதிர்பார்த்திருந்தேன்..//

// இங்கே பறக்கும் புறாக்களில் ஒன்றான மித்ரா தானே நீலு என முதல் அத்தியாயத்தில் வருது? அவள் எப்படி அதே நேரத்தில் வரவேற்பறையில் இருக்க முடியும்? ரொம்பக் கேள்வி கேட்டுக் குழப்பறேனோ? ::( .. //

அவந்திகாவுடன் இணைந்து செயலாற்ற மித்ராவுக்கு ஒரு உடல் வேண்டும்.. அதனால் தான் நீலுவுடன் கலந்து இளவரசிக்காக காத்திருக்கின்றாள்.. மித்ரா வேறு.. நீலு வேறு.. 

அதனால் தான்,  நீலு மறு நாள் காலையில் விடுதியின் வரவேற்பறையில் இருக்கின்றாள்.. மித்ரா புறாவாகி  பறந்து கொண்டிருக்கின்றாள்..

இதேபோல -  
ஆர்த்தி விஜய் இருவரும் - 
" நேற்றிரவு தூங்கி விட்டோமே.. பொழுது வீணாகி விட்டதே!.. - என்று, நினைத்துக் கண் சிமிட்டி புன்னகைத்துக் கொண்டபோது எங்கிருந்தோ அந்தப் பழைய பாடல் ஒலித்தது..


" துயிலாத பெண்ணொன்று கண்டேன்!.. "

" நானா?.. "

" ஆமாம்!.. "
*** *** ***
கீதா & கீதாக்கா
// மித்ரா புறாவாக உருமாறினவள் காத்திருக்கும் காதலன்.. இப்போது நீலுவாக வரவேற்பறையில்.. அவளின் காதலன் இப்பிறவியில் யார்? .. ஆர்த்தியும் விஜயும் மட்டும் புறாக்களாக மீண்டும் உஜ்ஜயினி நோக்கி போகின்றனர்.. அவர்கள் ஆர்த்தியும் விஜயுமாக அங்கு சென்றதும் மாறுவார்களா?.. //

மித்ராவின் காதல் புறா ஸ்ரீ உஜ்ஜயினியில் இருக்கின்றது..
அங்கு சென்று சேர்ந்ததும் புறா வடிவிலேயே கூடி வாழ்வார்கள்..

ஸ்ரீ காளீஸ்வரியின் அடுத்த ஆணை எதுவோ அதன்படி மாறிக் கொள்வார்கள்..

@ கீதா..
// வங்காளி உயிருடன் இல்லை என்பதால் தற்போதைய சூழலில் நீலு அதை அறியும் போது போலீசுக்குச் சொல்வாளா இல்லையா?.. //

சொல்ல மாட்டாள்.. சொல்வதால் ஆகப் போவது ஒன்றும் இல்லை.. விடுதியில் வேலையை முடித்துக் கொண்டதாக கணக்கு காட்டி - சரி செய்து விடுவார்கள்..

ஜீவி அண்ணா..
// ஸ்ரீ உஜ்ஜயினியை நோக்கி சிறகசைத்த புறாக்கள் நேரே போய்ச் சேர்ந்திருக்கக் கூடாதா?. வழியில் ஏன் தரையிறங்கின?..//

@ கீதாக்கா..
// உஜ்ஜயினியை நோக்கிச் சென்ற புறாக்கள் எங்கே தரையிறங்கியதாகத் தம்பி குறிப்பிட்டிருக்கார் என அலசி ஆராய்ந்தும் புலப்படவே இல்லை. :(.. //

குளிப்பதும் குளித்த பின் கோயிலில் வணங்குவதும் நமது மரபு..

மரணம் சம்பவித்த வீடு, மருத்துவமனை இங்கெல்லாம் சென்று திரும்பினால் குளிக்க வேண்டியது அவசியம்.. இங்கோ  குருதி கொப்பளிக்கக் கொலை நிகழ்ந்திருக்கின்றது..
எனவே அவந்திகாவும் அவளுக்குத் துணையாய் இருந்த  மித்ராவும் உடனிருந்த
வருணும் குளிக்க வேண்டியது அவசியமாகின்றது..
எனவே தான் புறாக்களின் வடிவில் இருக்கும் மூவரும் காவிரியில்  குளிக்கின்றனர்.. 

தவிரவும் இந்த சம்பவம் நடந்தது நிறைந்த வெள்ளிக்கிழமை.. நிறைநிலா நாள்.. 

இந்தக் கதையை எழுதியபோது வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் கோயில்கள் அடைப்பு..

காவிரியில் குளித்த பின் கோயிலுக்குள் செல்ல இயலாத சூழ்நிலையில்  கோயிலை  வலம் செய்து விட்டு ஸ்ரீ உஜ்ஜயினியை நோக்கிப் பறந்தன  காதல் புறாக்கள்..

பாழடைந்த மண்டபம் இருக்கும் ஊருக்கு அந்தப் பக்கம் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் கோயில்.. இந்த வடக்குப் பக்கம் காவிரியாறு.. அருகில் முருகன் கோயில்..

இது எந்த இடம் என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை!.. இரண்டாவது அத்தியாயத்தில் கோயில் குளத்தோடு கூடிய ஊரையும் இலை மறைவு காய் மறைவாகச் சொல்லியிருக்கின்றேன்..


ரகசியம் பின்னல்களாக இருந்ததால் தானே  விவாத மேடை அழகாக ஆகின்றது!..

இணையத்தில் இருந்து
பிரதர்ஷன வீணையை மட்டும் எடுத்துக் கொண்டு அவந்திகா உடனிருக்க இந்தக் கதையை எழுதி முடித்தேன்... இந்தக் கதைக்குள் இத்தனை விஷயங்கள் இருப்பது இப்போது தான் புரிகின்றது..

இன்னும்  விளக்கங்கள் தேவை எனில், அடுத்தடுத்த பதிவில்!..

மீண்டும் சந்திப்போம்..
மகிழ்ச்சி.. நன்றி..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***

16 கருத்துகள்:

  1. ஆச்சர்யங்கள்.  நம்ப முடியாத விஷயங்கள்.  விளக்கங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சுவாரசியமான தர்க்கரீதியான புரிதலுடன் கூடிய விளக்கம். நீலு வேறே, மித்ரா சுபாஷிணி வேறே என்பதை நான் ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொள்ளாததால் வந்த சந்தேகங்கள். காவிரியில் குளிச்சதையும் சரியாய்க் கவனிக்கலை. ஊரை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தது நினைவில் இருக்கு. ஆனாலும் இன்னும் ஏதோ நிறைவாக இல்லை. கதை நிறைவு அடையவில்லையோனு ஒரு சந்தேகம். பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  3. எங்கெங்கு சென்றாலும் ரோபோ! ரோபோ!

    பதிலளிநீக்கு
  4. "'என்னைப்பற்றி எழுது" உங்கள் அனுபவத்தை படித்து
    வியப்பு!

    குளத்தோடு உள்ள கோவில் எது என்று அறிந்து கொள்ள முடியவில்லை.
    முதலில் மனதில் உதித்த கதையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      முதலாவதாக என் மனதில் உதித்த கதையை இதனுடன் ஒப்பிடும் போது அது ஒன்றுமே இல்லை..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் ஜி.
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. விரிவான விளக்கங்கள் நன்று. மீண்டும் ஒரு முறை தொடரை முழுமையாக படிக்க நினைத்திருக்கிறேன். சிறப்பாக கதையைக் கொண்டு சென்றதற்கு வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. துரை அண்ணா தாமதமாகிவிட்டது. வலைக்கு வந்ததே தாமதமாகத்தான். எபி பார்த்துவிட்டு எங்கள் தளத்தில் பதிவுக்கு பதில் கொடுத்து இங்கு வர தாமதமாகிவிட்டது.

    முதலில் மிக்க நன்றி துரை அண்ணா. அமானுஷ்யம் வாசிக்க தெரிந்து கொள்ள மிகவும் பிடிக்கும். விளக்கங்களை வாசித்தேன். எவ்வளவு விஷயங்கள்!! இப்படியான விஷயங்களைப் பற்றியது எனக்குச் சுத்தமாகத் தெரிந்ததில்லை. இதைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொண்டால்தான் புரியும் என்று நினைக்கிறேன்.

    விளக்கங்கள் மேலும் தெரிந்துகொள்ளும் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

    கூகுளில் தேடிப் பார்த்துத் தெரிந்துகொள்கிறேன் துரை அண்ணா. இங்கு நீங்கள் சொல்லியிருப்பவற்றைக் குறித்துக் கொண்டுள்ளேன்.

    மிக்க மிக்க நன்றி துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ.
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      கூகுளில் தேடிப் படிப்பதை விட இது தொடர்புடைய பழைய புத்தகங்கள் கிடைத்தால் அதிலிருந்து படியுங்கள்..

      அதில் சில நன்மைகள் இருக்கின்றன..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..