நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 05, 2022

தரிசனம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட
வேண்டும்..
***
இன்றைய பதிவில்
இரண்டு தகவல்கள்
***
நேற்று தை (22) மாதத்தின்
நான்காவது வெள்ளிக் கிழமை..

காலை 9:15 மணியளவில்  தஞ்சை - கரந்தை - பூக்குளம், வடவாற்றிற்கு வடக்குப் புறமாக அமைந்திருக்கும்
ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா நடந்தது..

200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரிய இல்லம் தான் கோயிலாக விளங்கியது.. தற்போது அஸ்திவாரத்தை மாற்றாமல் மேல்தளம் ஓடுகளைப் பிரித்து விட்டு - முற்றம், நடை இவற்றை ஒருங்கிணைத்து கொடிமரப் பிரதிஷ்டையுடன் திருப்பணி செய்திருக்கின்றார்கள்..













நிகழ்வுகளை என்னால் இயன்ற வரைக்கும் இன்றைய பதிவில் தந்துள்ளேன்..

மேலும்படங்கள் அடுத்த பதிவுகளில்...

ஸ்ரீ திரௌபதி அம்மன்

அகல்யா த்ரௌபதீ சீதா தாரா மண்டோதரி ததா
பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்.
***

இன்றைய தஞ்சை மாநகர் ஆதியில் அளகாபுரி எனப்பட்டது.. காரணம், இங்கு குபேரன் சிவ வழிபாடு செய்து தான் இழந்த செல்வங்களை மீளப் பெற்றதனால்!..

இராவணனிடம் தனது  புஷ்பக விமானம் உட்பட அனைத்து செல்வங்களையும் பறி கொடுத்த - குபேரன், தலங்கள் தோறும் சிவவழிபாடு செய்து விட்டு இங்கே வந்த போது குபேரனது அன்பினுக்கு இரங்கிய ஈசன் மீண்டும் அவனுக்கு அனைத்து செல்வங்களையும் வழங்கி வடதிசைக்கு அதிபதியாக நியமித்ததாக தலவரலாறு..


இறைவன்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ ஆனந்தவல்லி

சிவவாக்கிய சித்தர் இங்கு தவம் செய்ததாக நாடிச் சுவடிகள் கூறுகின்றன..


இத்திருக்கோயிலுக்கு 
21 ஆண்டுகளுக்குப் பின்னர் - நாளை (தை 24 ஞாயிறு) காலை ஒன்பதில் இருந்து பத்து மணிக்குள் திருக்குட முழுக்கு நிகழ இருக்கின்றது..



தீ நுண் கிருமி பரவல் எச்சரிக்கையால் எளிமையாக நடைபெறுவதாக செய்தி..



ஆனாலும் திருப்பணியும் ஏற்பாடுகளும் சிறப்பாக இருக்கின்றன..

கடந்த   பதினைந்து நாட்களாக அடிக்கடி சென்று கொண்டிருக்கின்றேன்.. அழகான படங்கள் (!) நிறைய கைவசம் உள்ளன..

அவற்றுடன் அடுத்ததொரு பதிவில் சந்திக்கலாம்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

22 கருத்துகள்:

  1. தரிசனம் நன்று வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வளமுடன்..

      நீக்கு
  2. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    குடமுழுக்கு வைபவங்கள் சிறப்பாக நடக்கட்டும். பகிர்ந்த படங்கள் அனைத்தும் நன்று. அனைவருக்கும் எல்லாம் வல்ல ஈசனின் அருள் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நன்றி வெங்கட், காலை வணக்கம்
    அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
    தினம் போய் வரும் பாக்கியம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி.
    மேலும் படங்கள் பதிவில் போடுங்கள் , தொடர்கிறோம்.
    திரெளபதி அம்மன் அனைவருக்கும் எல்லா நலங்களும் அருள பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  4. தெரியாத கோயில். தினம் போய் வரும்படி அமைந்திருப்பதும் நல்லது. தொடர்ந்து படங்களை எதிர்பார்க்கிறேன், நல்லதொரு தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      தினம் போய் வரும்படி என்றாலும் இரண்டு கி.மீ.க்கு மேல்.. நெருக்கடியான போக்கு வரத்து மிகுதியான சாலை..

      அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  5. தகவல்கள் படங்கள் அனைத்துமே சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. குடமுழுக்கு நடந்த, நடைபெறவுள்ள கோயில்கள் பற்றிய பதிவு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  7. படங்கள் அத்தனையும் அருமை. தலபுராணம் மற்றும் உங்கள் விவரங்கள் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. குடமுழுக்கு நடைபெற்ற புதுக் கோவில் விபரங்கள் குறித்து அறிந்து கொண்டேன். திரௌபதி அம்மனை தரிசித்து கொண்டேன். அனைவரையும் அன்னை நலம் பெற காக்க வேண்டும்.

    நாளை நடைபெற இருக்கும் குடமுழுக்கு கோவில் பற்றியும் விபரம் அறிந்து கொண்டேன். மேலும் தங்களது கோவில்கள் பற்றிய அருமையான தெய்வீக படங்களையும் எதிர் பார்க்கிறேன். இங்கு வந்த பின் நிறைய கோவில் தரிசனங்கள் தங்களுக்கு கிடைப்பதும் தாங்கள் செய்த பெரும் பாக்கியம். இறைவனின் சித்தமும் அதுவே...தொடர்ந்து கோவில் தரிசனங்கள் தங்களுக்கு சிறப்பாக கிடைத்து எங்களுக்கும் அதன் விபரங்கள் பற்றிய செய்திகளும் அருமையாக தந்திட வேண்டுமாய் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..

    நாளை கும்பாபிஷேக கூட்டத்தில் நுழைந்து கோயிலுக்குள் செல்வது எப்படி என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்...

    எனினும் அவனருள் ஒன்றே துணை...

    இப்பதிவுக்கு முன்பே தரவேண்டும் என்று கோயிலின் படங்கள் எடுத்து வைத்தேன்.. அவை அனைத்தையும் அடுத்தடுத்து பதிவில் காணலாம்.

    அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. கூட்டமாக இருக்குமே. கவனமாகச் சென்று வாருங்கள் சார்.

    படங்கள் எல்லாம் அருமை. புராணக் கதையும் அறிந்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      கோயிலுக்குள் கூட்டம் தான்.. இருந்தாலும் நல்லபடியாக தரிசனம் ஆயிற்று..

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி..

      படங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கலாம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அளாகாபுரி என்பது தஞ்சையா? நல்ல தகவல்களோடு படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      ஆமாம்... ஆதியில் குபேரன் வழிபட்டதால் இந்நகரம் அளகாபுரி என்று அழைக்கப் பட்டதாக தலபுராணம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..