நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 24, 2024

நலங்கு மாவு 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 8 
புதன் கிழமை


நமது பாரம்பரியங்களுள் ஒன்று நலங்கு மாவு..

இயற்கையின் மூலிகைப் பொருட்களைக் கொண்டு எளிய முறையில் செய்கின்றது தான்  நலங்கு மாவு..

மாவு எனப்பட்டாலும் இது உண்மையில் மூலிகைப் பொடி..

நலங்கு மாவுக் குளியலால்  வியர்வை நாற்றம் நீங்கும் . நலங்கு மாவினால்  எவ்வித தீமையும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

ஆயிரம்  காலத்திற்கும் மேலாக நமது நாட்டில் பயன்பாட்டில் இருந்த பாரம்பரியத்தை நாம் -  நமது மூடத்தனம் பிறத்தியாரது ஏமாற்று வேலை இவற்றால் இழந்தோம்...

ரசாயனச் செறிவுடைய இன்றைய பொருட்கள்
என்றைக்கும் நன்மையைத் தந்ததில்லை..

மேலும் ரசாயனச் செறிவுகளை உபயோகிக்கும் போது அவை சருமத்தில் பக்க விளைவை உண்டாக்கும் என்பது குறித்து பல ஆய்வுகள்.. 

வீட்டில் பொதுவாக அனைவருக்கும் பயன்படும் நலங்கு மாவினை  நாமே  நமக்காகத் தயாரிப்பது எப்படி என்று இந்தப் பதிவில்!..


தேவையான பொருட்கள் :
1) தாமரை இதழ்கள்
2) சந்தனம் 100 gr
3) கஸ்தூரி மஞ்சள் 100 gr
4) கிழங்கு மஞ்சள் 100 gr
5) வசம்பு 50 gr
6) கடலைப் பருப்பு 50 gr
7) பாசிப் பருப்பு 50 gr
8) ரோஜா மொட்டு 50 gr
9) சீயக்காய் 50 gr
10) வெட்டி வேர் 50 gr
11) நன்னாரி வேர் 50 gr
12) கோரைக் கிழங்கு 50 gr
13) பூலாங்கிழங்கு 50 gr
14) ஆவாரம்பூ 50 gr
15) வெந்தயம் 50 gr
16) பூவந்திக்கொட்டை 50 gr

17) எலுமிச்சைத் தோல் 50 gr
18) புதினா இலை 50 gr

மேற்சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் தனித்தன்மை உடையவை..

எலுமிச்சைத் தோல் புதினா இலை இரண்டையும் வீட்டிலேயே சேகரித்துக் கொள்ளலாம்..

மற்றவை அனைத்தையும் நல்ல வெயிலில் உலர்த்தி அரவை இயந்திரத்தில் அரைத்தெடுத்து இறுக்கமான கலத்தில் வைத்துக் கொண்டு 
ஒவ்வொரு நாளும் -  குளிக்கும் போதும் முகம் கழுவும் போதும் நீரில் குழைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியது..

இவை அனைத்தும் நமக்கானவை.. நம்முடையவை..

சிரமம் பாராமல் இதை இரண்டு விதங்களில் அரைத்து வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது..

என்னவெனில்,
இங்கு சொல்லப்பட்டுள்ள பதினெட்டுப் பொருட்களும் 
பெண்களுக்கு உகந்தவை..
(இவை பற்றிய குறிப்புகள் அடுத்த பதிவில்..)

ஆண்களுக்கான குளியல் பொடி எனில் -
1) கஸ்தூரி மஞ்சள் 
2) கிழங்குமஞ்சள் 
3) பூலாங்கிழங்கு ஆகியவற்றை மட்டும் தவிர்த்து விடவும்..

ஏனெனில் - 
மஞ்சளின் (1,2) பளபளப்பு  மேனியில் படியும்.. 

பூலாங்கிழங்கினால் (3)
தோலில் முடி வளர்ச்சி தடைப்பட்டு மினுமினுப்பு ஏற்படும்..

தேவையா ஆண்களுக்கு?..

வாழ்க நலம்!...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே..
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!..
-: கவியரசர் :-
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது போல இந்தக் காலத்தில் யார் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்? மிகச்சில வீடுகளே இவற்றை பின்பற்றிக் கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடினார்க்கு நன்மைகள் நிச்சயம்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பலருக்கும் பயனுள்ளதாக இருக்கலாம் இந்த குறிப்புகள். இதனை செய்வதற்கு இன்றைக்கு பலரிடம் பொறுமை இல்லை என்பது நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்...
      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

      நீக்கு
  3. நலங்கு மாவில் சேர்க்கப்படும் பொருட்கள் பற்றி இப்பொழுதுதான் அறிந்தோம். கடலைமா,மஞ்சள் , எலுமிச்சை,கஸ்தூரிமஞ்சள் இவைதான் நமக்குத்தெரியும்.

    நல்ல பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  4. முன்பு நாங்கள் குழந்தைகளுக்கு திரித்து வைத்து கொள்வோம்.
    பலருக்கும் பயனுள்ள குறிப்பு.
    இப்போதும் குழந்தை பெற்ற தாய்மாருக்கும், குழந்தைக்கும் கண்டிப்பாய் இந்த பொடி உண்டு. அப்புறம் தான் மற்ற சோப்புகள்.
    இப்போது வீடுகளில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான செய்திகள்..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..