நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 01, 2024

இனிப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 17 
திங்கட்கிழமை

உணவுத் திருவிழா 1

இறைவன் அளித்த இந்த உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது.. 

இதில் ஏழாவது தாது ஆகிய மூளை சரிவர இயங்குவதற்கு முதல் ஆறு தாதுக்கள் தக்கபடி  அமைய வேண்டியது அவசியம். 

இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்க்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

இனிப்பு தசையை வளர்க்கின்றது

புளிப்பு கொழுப்பினை வழங்குகின்றது

கார்ப்பு எலும்புகளை வளர்க்கின்றது

உவர்ப்பு உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

துவர்ப்பு இரத்தத்தைப் பெருக்குகின்றது

கசப்பு நரம்புகளை பலப்படுத்துகின்றது

அக்காலத்தில் நமது பாரம்பரிய உணவு முறைகளும் மருத்துவங்களும்,  இதனை வலியுறுத்தி நின்றன.. 

இன்று மாற்று முறை உணவுப் பழக்கத்தால் நமது நாட்டில் நோயாளிகள் பெருகிக் கொண்டிருக்கின்றனர்..

அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், பழங்கள், காரட் போன்ற கிழங்குகள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்கள் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது..
(நன்றி விக்கி)

இந்த அளவில் இனிப்புச் சுவையுடன் கூடிய பொங்கல் இன்று அறிமுகம்...

மகிழ்ச்சிக்கு ஆதாரமாகிய சுவை இனிப்பு..

இது யாருக்கும் தெரியாதா என்றால் இது தான் மரபு..

இன்று தொடங்கி ஏழு நாட்களும்  சிறு சிறு உணவுக் குறிப்புகள் தங்களுக்காக...

சர்க்கரைப் பொங்கல்  


தேவையானவை:
பச்சரிசி 250 gr
வெல்லம் 500 gr
பசும்பால் 750 ml
ஏலக்காய் 3
நெய் தேவையான அளவு
முந்திரிப் பருப்பு  15
உலர்ந்த திராட்சை 20 

பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை
(விருப்பம் எனில்)

வாணலியில் நெய் விட்டு  தேவையான  முந்திரிப்பருப்பு உலர் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். 

பாத்திரம் ஒன்றில்
பச்சரிசியை நன்றாக அலசி விட்டு ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் பால் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.. 


வேறு ஒரு உருளியில்  வெல்லத்தைப் போட்டு
மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு சூடாக்கவும்..

வெல்லம் இளகிக்
கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

தளதள என்று குழைந்து இருக்கின்ற சாதத்தில் வெல்லப் பாகினைச் சேர்க்கவும்..

ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் பாலும் பாகும் அதிகமாகி விடக் கூடாது.. 

வெல்லப்பாகினைச் சேர்த்த பிறகு   ஏலக்காயைத் தட்டிப் போட்டு வறுத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கிளறவும்..

முந்திரி திராட்சையைப் பொங்கலில் சேர்த்ததும் மேலும் சிறிது நெய் சேர்க்கவும்..

நெய்யின் முறுகலான வாசம்  வீடெங்கும் பரவி நிற்கும்...

மாதம் ஓரிரு முறை சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதில் தவறேதும் இல்லை..


(விருப்பம் எனில் பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை சேர்த்துக்  கொள்ளலாம்..)

உணவில் இனிப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.. அளவுடன் இருப்பது அவசியம்.. முயற்சிக்கவும்..

சர்க்கரை பொங்கல்..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)
**

நமது நலம்
நமது கையில்

சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. இனிப்புச் சுவையின் முதன்மை உணவு....   சர்க்கரைப்பொங்கல் ஈர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  2. சக்கரைப் பொங்கல் நல்ல செய்முறை.

    எனக்கு இனிப்பு உணவுகள் அவ்வளவாக பிடிப்பதில்லை. பொங்கல் நாட்களில் செய்வேன்.

    பதிலளிநீக்கு
  3. சர்க்கரை பொங்கல் - ஆஹா... இனிப்புடன் ஆரம்பித்திருக்கிறது இந்த வாரம்!

    குறிப்புகள் நன்று.

    பதிலளிநீக்கு
  4. அறுசுவை உணவின் பயன்களும், சர்க்கரை பொங்கல் செய்முறை குறிப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. குறிப்புகள் சூப்பர் துரை அண்ணா. அது சரி இனிப்பு நல்லதல்லானு போட்டுட்டு சர்க்கரைப்பொங்கல் போட்டு இப்படி உசுப்பேத்திவிட்டீங்களே! இனிப்புகள் கொஞ்சம் பிடிக்கும் ஆனால் சாப்பிடுவதில்லை. திருனெல்வேலிக்கே அல்வாவா!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..