நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 28, 2024

தில்லாலங்கடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 12  
ஞாயிற்றுக்கிழமை


இரவு நேர உணவகங்களில் அதிக அளவிற்கு விற்பனையாவது  பரோட்டா தான்..

பரோட்டாவின் மூலப்பொருள் - மைதா..

இதைக் கரைத்துக் கூழாக்கி தான் கண்ட இட்ங்களிலும் 
அச்சு விளம்பரங்கள் (சுவரொட்டிகள்) ஒட்டப்படுகின்றன...

எவ்வித உயிர்ச் சத்துகளும் இல்லாத
மைதா மாவில் 
ஏகப்பட்ட ரசாயனங்கள் கலக்கப்படுவதாக இணையத்தில் ஏகப்பட்ட செய்திகள்..

இருந்தாலும்,
யாரும் கேட்பதில்லை..


கார்போஹைட்ரேட்   வைட்டமின் இதர ஊட்டச்சத்துகள் எவையும் மயிரிழை அளவு கூட
 கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது...

ஆனால்,
இந்த மைதா இல்லாமல் Pastry & Bakery உணவுகள் கிடையாது என்பது  உண்மை..

மைதா மாவு நமது உடலுக்கு எவ்விதத்திலும் ஏற்றது அல்ல...

நானும் மைதாவினால் பாதிக்கப்பட்டு தப்பித்தவன்..

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இங்கிலாந்திலும், சீனாவிலும்  மைதாவை  உணவுப் பொருளாகப் பயன்படுத்துவதற்குத் தடை என்கின்றனர்.. 

நமது நாட்டில் நாம் தான் மைதாவில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்..

எங்கும் பரவி நிற்கின்ற
மைதா ஒருபக்கம் இருக்கட்டும்.. 

பரோட்டா தயாரிக்கப்படுகின்ற இடத்தின் சுகாதாரத்திற்கும் புரட்டிப் போட்டு அடிப்பவனுடைய ஆரோக்கியத்திற்கும் ஏதாயினும்  உத்தரவாதம் உண்டா?..


நம்முடைய நலம்
நம்முடைய கையில்

சிந்திக்க வேண்டும்..
நன்றி... நன்றி..

ஓம் நம சிவாய
***

10 கருத்துகள்:

  1. நீங்கள, சொல்வது சரி. ஆனால் ஏழைகளுக்கு குறைந்த காசில் உணவு மற்றும் ருசி பரோட்டாவில்தானே இருப்பதாக நம்புகின்றனர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அளவுக்கு மயக்கம்...

      அன்பின் வருகையும் கருத்தும் நன்றி

      நீக்கு
  2. தப்புதான்.  சத்து இல்லைதான்.  சாப்பிடக்கூடாதுதான்.  உடம்புக்கு ஆகாதுதான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  3. நல்ல பதிவு! இந்த விவரங்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் நாக்கு ருசிக்கு பழகிப்போனவர்களுக்கு இந்த நல்ல கருத்துக்கள் மறந்து தான் போகும்! இப்போதெல்லாம் கோதுமை பரோட்டா கிடைக்கிறது! அதை கொஞ்சம் தைரியமாக சாப்பிடலாம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைதாவை விட்டு விலகுவது முடியாதது..

      அன்பின் வருகையும் கருத்தும் நன்றி

      நீக்கு
  4. எமது நாட்டில் இந்த மாவின் பாவனை கூடுதல் உடல் நலத்தை புரிந்து கொள்ளாமல் விடுகிறார்களே.இந்த மாவில் பலரும் புட்டு,ரொட்டி, செய்வார்கள்.
    தோசை மாவிலும் சிலர் இலகு எனக்கருதி அரிசிக்குப் பதில் இந்த மாவை கலந்துவிடுகிறார்களே.

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல். ஆனால் இதற்கு தான் இங்கே மவுசு அதிகமாக இருக்கிறது. பெரும்பாலானவர்கள் இதையே நம்பி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..