நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 14, 2024

திருப்பயற்றூர்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 30 
ஞாயிற்றுக்கிழமை


இறைவன்
திருப்பயற்றூர் நாதர் 
அம்பிகை
காவியங்கண்ணி
 நேத்ராம்பிகை

தல விருட்சம் 
சிலந்தி மரம் 
தீர்த்தம் 
பிரம்மதீர்த்தம்


அன்பனாகிய வணிகனின்  பொருட்டு  இறைவன் இத்தலத்தில் மிளகு மூட்டைகளை பயறு மூட்டைகளாக மாற்றித்
 தந்ததாக ஐதீகம்...

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் திருப்பயற்றூர் அமைந்துள்ளது..


திருநாவுக்கரசர் தேவாரம்
நான்காம் திருமுறை
முப்பத்திரண்டாம் திருப்பதிகம்

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறொழுகி யோட
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல்விதிர்த் தலக்க நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் ஆகித் தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூர னாரே.. 1
(கஜ சம்ஹாரம்)

உவந்திட்டங்கு உமையோர் பாகம் வைத்தவர் ஊழியூழி
பவந்திட்ட பரமனார்தாம் மலைசிலை நாகம் ஏற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனல்எரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற்றூர னாரே.. 2
(திரிபுர சம்ஹாரம்)

நங்களுக் கருள தென்று நான்மறை ஓதுவார்கள்
தங்களுக் கருளும் எங்கள் தத்துவன் தழலன் தன்னை
எங்களுக் கருள்செய் என்ன நின்றவனாக அஞ்சுந்
திங்களுக்கு அருளிச் செய்தார் திருப்பயற்றூர னாரே.. 3
(சந்திரன் வணங்கிய தன்மை)

பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற்றூர னாரே.. 4
(ஐயனார் மகனென்ற புராணம்)
 
மூவகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும் நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை ஆவர் போலும் ஆதிரை நாளர் போலும்
தேவர்கள் தேவர் போலும் திருப்பயற்றூர னாரே.. 5
(தேவர்கள் வணங்கிய தன்மை)

ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய்ச் சோமன் ஆகித்
தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்தன் ஆகிப்
பேயறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன்  எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந் திருப்பயற்றூர னாரே.. 6
(யாதுமாகி நின்ற தன்மை)

ஆவியாய் அவியு மாகி அருக்கமாய்ப் பெருக்கம் ஆகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரமன் ஆகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ணம்  ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூர னாரே.. 7
(யாதுமாகி நின்ற தன்மை)

தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணியுள் ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழுல குடனும் ஆகி
எந்தையெம் பிரானே என்றென் றுள்குவார் உள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமும் ஆவார் திருப்பயற்றூர னாரே.. 8
(எஞ்ஞான்றும் அருளல்)

புலன்களைப் போக நீக்கிப் புந்தியை ஒருங்க வைத்து
இலங்களைப் போக நின்று இரண்டையு நீக்கி ஒன்றாய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந் திருப்பயற்றூர னாரே.. 9
(பாவங்களைக் களைதல்)

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்துநல் அரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார் திருப்பயற்றூர னாரே.. 10
(ராவணனனுக்கு அருளியமை)
நன்றி: பன்னிரு திருமுறை

சிவாய திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துரை செல்வராஜூ அண்ணா..

    பதிலளிநீக்கு
  3. அப்பர் தேவாரத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன், படங்களும், தலவரலாறும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. திருப்பயற்றூர் வணங்கிக் கொண்டோம்.

    இத்தலம் இப்பொழுதுதான் அறிகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  6. சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பணி சிறக்க வேண்டும்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஐயா..

      நீக்கு
  7. சிறப்பான பதிவு. இக்கோயிலுக்கு நான் சென்றபோது இருட்டிவிட்டது. இருப்பினும் பாடல் பெற்ற தலத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவில் சென்றேன். இறைவனைக் கண்டேன். இக்கோயிலின் விமானத்தைப் படமெடுத்து விக்கிப்பீடியாவில் பதிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகச் செய்திகளுக்கு நன்றி..

      மகிழ்ச்சி ஐயா..

      நீக்கு
  8. அழகான கோயில். தகவல்களுக்கு நன்றி.

    மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..