நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 15, 2024

தவப்புதல்வன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 31  
திங்கட்கிழமை



பெருந்தலைவர் பிறந்த நாள்
(15 ஜூலை 1903)


காமராஜர்  அனைவருக்குமாக  இலவச கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்..


1957 - 1962 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில்  திறக்கப்பட்ட புதிய பள்ளிகளின் எண்ணிக்கை பதின்மூன்றாயிரத்திற்கும் மேல்.. 

மாணவர் எண்ணிக்கையும் 19 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்ந்தது..



நீர்வளத்தைப் பெருக்குவதற்கு காமராஜர் செயல்படுத்தியவை - மணிமுத்தாறு திட்டம், கீழ்பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், வைகை திட்டம், காவிரி கழிமுக வடிகால் திட்டம், புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைக் கால்வாய்த் திட்டம்  ஆகியன

தமிழகத்திலுள்ள  பெரும்பாலான அரசு கலைக் கல்லூரிகள் தொழிற்பேட்டைகள், பொதுத்துறை நிறுவனங்கள் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவையே..


தெற்காசிய அளவில் பிரம்மாண்டமான அம்பத்தூர் தொழிற்பேட்டை
நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ஆகியன காமராஜரின் பொற்கால ஆட்சியின் சாட்சியங்கள்..




காமராஜருடைய ஆட்சிக் காலம் ஒன்பது ஆண்டுகளே!... 

பொற்கால ஆட்சி இனி வரவே வராது என்பதே உண்மை..


என்றென்றும புகழ் வாழ்க..
**

4 கருத்துகள்:

  1. அவரைப்போல இனி ஒரு மனிதர் வருவாரா?  அவர்தான் மனிதர்.  

    பதிலளிநீக்கு
  2. காமராஜர் ஆட்சி செய்த காலம் பொற்காலம் தான்.
    அவருக்கு வணக்கங்கள். என்றும் அவர் புகழ் வாழும்.

    பதிலளிநீக்கு
  3. காமராஜர் - தவல்புதல்வன் என்பதில் சந்தேகமில்லை. அவர் போன்ற ஒரு தலைவர் என்றென்றும் தேவை.

    பதிலளிநீக்கு
  4. தவப்புதல்வன் காமராஜர் ஆட்சிக்காலம் பொற்காலம்தான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..