நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி
மூன்றாம் வெள்ளி
இன்று
அப்பர் ஸ்வாமிகள்
அருளிச்செய்த தேவாரம்
தலம்
திரு ஐயாறு
இரப்பவர்க்கு ஈய வைத்தார்
ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடு நரகங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 4/38/10
இரந்து நிற்போருக்கு வழங்கும்படியாக
செல்வங்களைத் தந்தவர்..
அப்படி வாரி வழங்குகின்ற மக்களுக்கு நல்லருளும் புரிந்தவர்..
அஃதன்றி நிறைய பொருளை வைத்துக் கொண்டு ஒளித்து வாழ்பவர்களுக்குக் கொடிய நரகங்களையும் வைத்தவர்..
எங்கும் பரவி விளங்குகின்ற கங்கையைப் படர் சடையின் பாகமாக வைத்ததோடு அரக்கனாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தவராய் விளங்குகின்றார் ஐயனாகிய ஐயாற்று நாதன்..
*
ஓம் நம சிவாய
***


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..