நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி
வெள்ளிக்கிழமை
இன்று
திருநாவுக்கரசர் தேவாரம்
இன்று
தீர்த்தனைச் சிவனைச் சிவ லோகனை
மூர்த்தியை முத
லாய ஒருவனைப்
பார்த்த னுக்கு அருள்
செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடி
யேன் மறந்து உய்வனோ.. 5/2/2
பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயவனை சிவபெருமானை சிவலோகனை ஞான உருவினனை உலகத் தோற்றத்திற்கு முன்
மூலமாய் நின்றவனை பார்த்தனுக்கு வேடனாய்த் தோன்றி பாசுபதம் ஈந்து அருள் செய்த சிற்றம்பலக் கூத்தனைக் கொடியேனாகிய நான் மறந்து உய்வடைவேனோ ? ..
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..