நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 17, 2012

திருப்பாவை - 02


ஆண்டாள் அருளிய திருப்பாவை
இரண்டாம் ிருப்பாசுரம்.

அரங்கன்
பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்ு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!...    


இந்த வையகத்தில் வாழ்வாங்கு வாழ்பவரே! (அதனால் வானில் வாசுதேவனோடு  உறையும் தவப் பெரும் பேற்றினை உடையவரே) பாவை நோன்பு நோற்கும் முன் - நாம் செய்ய வேண்டிய நல்லனவற்றைக் கேளுங்கள். 

நாம் நோன்பு நோற்கும் வேளையில் -

திருப்பாற்கடலில் - பாம்பணையில் துயிலும் ந்ின் திருவடித் தாமரைகளை மனத்துள் இருத்தி - அவனைப்  புகழ்ந்து பாடிப் பரவுவோம்.

நெய்யும் பாலும் சேர்ந்த உணவு வகைகளை உண்ணாமல், எளிய உணவினை உண்டு - அதிகாலையில் துயில் எழுந்து நீராடுவோம். நீராடி முடித்த பின் -

கண்களில் மையிட்டும் , கருங்கூந்தலில் நறுமலர்களைச் சூடியும் எம்மை அலங்கரித்துக் கொள்ளாமல் தவநிலையின் எளிமையைப் பேணுவோம்.

செய்யக் கூடாத எதனையும் செய்ய மாட்டோம். எவரைப் பற்றியும் எவரிடத்தும்   (இதுவரை புறம் பேசியதில்லை. இனியும் விளையாட்டுக்குக் கூட) புறம் பேச மாட்டோம். 

இல்லை என இரந்து - வரும் எளியோர் மீது இரக்கம் கொண்டு  இயன்றவரை (உண்ணவும் உடுக்கவும்) வழங்கி,  

'' உய்வடையும் வழி இதல்லவோ ''  என்று - மனத்துள் எண்ணி பெருமகிழ்வுடன் பாவை நோன்பை நோற்போம்.
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக