நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 27, 2023

கார்த்திகை 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 11
திங்கட்கிழமை
இரண்டாம் சோமவாரம்

திருத்தல தரிசனம்

திருவிடைமருதூர்


இறைவன்
ஸ்ரீ மகாலிங்கஸ்வாமி


அம்பிகை
ஸ்ரீ பிரகத் சுந்தரகுஜாம்பிகை

தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம்
காவிரி, அமிர்த தீர்த்தம்

காசிக்கு நிகரான தலம்..

வரகுண பாண்டியரின் 
பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கியது  இங்கு தான்..

பட்டினத்தார், பத்ரகிரியார் இருவரும் இத்தலத்தில் சிறிது காலம் இருந்திருக்கின்றனர்..

பட்டினத்தார்க்கு கீழைக் கோபுர வாசலிலும் பத்ரகிரியார்க்கு
மேலைக் கோபுர வாசலிலும் சந்நதிகள் அமைந்துள்ளன..

முதலாம் திருமுறை 
திருப்பதிக எண் 110


மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொடு இறவுமானான்
அருந்தவ முனிவரொடு ஆல்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே..1

தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவன் இறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே.. 2

படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினான் ஞாலமெல்லாம்
உடைதலை யிடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை எம்மிறையே.. 3

பணைமுலை உமையொரு பங்கன் ஒன்னார்
துணைமதிண் மூன்றையுஞ் சுடரின்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே.. 4

பொழிலவன் புயலவன் புயலியக்கும்
தொழிலவன் துயரவன் துயரகற்றும்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.. 5

நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே.. 6

நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொடு அமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே.. 7

தருக்கின அரக்கன தாளுந்தோளும்
நெரித்தவன் நெடுங்கைமா மதகரி அன்று
உரித்தவன் ஒன்னலர் புரங்கண்மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.. 8


பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான்
வரியரவு அணைமறி கடல் துயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே.. 9

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
அந்தண ரோத்தினொடு அரவம் ஓவா
எந்தை தன் வளநகர் இடைமருதே.. 10

இலைமலி பொழில் இடை மருதிறையை
நலமிகு ஞானசம்பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொடு ஓங்குவரே.. 11
-: திருஞானசம்பந்தர் :-
திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி..
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. மகாலிங்கஸ்வாமியின் அருளை வேண்டி நிற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சிவ சிவ
      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. சோமவாரம் நாளில் திருவிடை மருதூர் தரிசனம் கண்டு இன்புற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவ சிவ

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. பெரியவன் பெண்ணினொடும் ஆணும் ஆனான்.
    வரி அரவு அணை மறிகடல் துயின்ற
    கரி அவன் அலர் அவன் காண்பதற்கு அரிய
    எரி அவன் வள நகர் இடை மருதே

    அருமையான பாசுரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. நந்தி எம்பெருமான் படங்கள் மிக அழகு.

    இறைவன் எல்லோரையும் காக்கட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவ சிவ

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  5. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  6. தேவாரம் படித்து திருவிடை மருதூர் இறைவனை வணங்கி கொண்டேன்.
    சோமவாரம் 1008 சங்காபிஷேகம் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோமவாரம் 1008 சங்காபிஷேகம் நடக்கும் தலம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      சிவ சிவ..

      நீக்கு
  7. சின்ன வயசில் இருந்தே போய் வந்த கோயில். எப்போப் போனாலும் பிரமஹத்தி வாசல் பக்கம் போகாமல் வரணுமேனு தோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      சிவ சிவ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..