நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 02, 2023

அன்பின் தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 16
 வியாழக்கிழமை

அன்னாபிஷேக நாளாகிய சனிக்கிழமை இனியதொரு நாளாக அமைந்தது..

அன்று காலையில் அன்பின் திரு நெல்லை அவர்களுடன் சந்திப்பு..

திரு ஆதனூர் தலத்தில் பவித்ரோத்ஸவ தரிசனம் முடித்து விட்டு அங்கிருந்து கண்டியூருக்கு வந்திருந்தார்..

அவருடன் தஞ்சை மாமணிக் கோயில்கள், தஞ்சபுரீஸ்வரம், தாழமங்கை, புள்ளமங்கை, கபிஸ்தலம், ஒப்பிலியப்பன் கோயில், திருச்சேறை ஆகிய திருக்கோயில்களைத் தரிசித்தது மகிழ்ச்சி..

கூடலூர் ஜகத் ரட்சகப் பெருமாள் கோயிலில் உச்சி கால நடையடைப்பு..
நாச்சியார் கோயிலில் சந்திர கிரஹணத்தை முன்னிட்டு நடையடைப்பு.. இதனால் சந்நிதி தரிசனம் செய்வதற்கு இயலவில்லை..

வாகன சாரதியாக கும்பகோணம் திரு. வெங்கடேசன்.. 

நல்ல மனிதர். அறப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர்..

இனிமையான பயணம்
மாலையில் குடந்தை ரயில் நிலையத்தில் நிறைவு பெற்றது.. 

பெங்களூர் விரைவு வண்டியில் அன்பின் திரு நெல்லை அவர்கள் புறப்பட்ட பிறகு - குடந்தை மகாமகக் குளக்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேக தரிசனம் செய்து விட்டு தஞ்சைக்குத் திரும்பினேன்..

இனியதொரு நாளை வகுத்துத் தந்த இறைவனுக்கு நன்றி.. நன்றி..

தஞ்சை மாமணிக் கோயில்
மணிக்குன்றப்
 பெருமாள் சந்நிதி




தஞ்சபுரீஸ்வரம்
குபேரன் வழிபட்ட திருக்கோயில்






திரு தாழமங்கை
ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் கோயிலில்
நிறைநிலா நாள் வழிபாட்டிற்கு 
மின்னலங்கார ஏற்பாடுகள்







திரு புள்ளமங்கை
ஸ்ரீ ஆலந்துறையார்
கோயில் தரிசனம்
 








சிவாலயத்தின்
வெளிப்புற அதிஷ்டானத்தில் ராமாயணக் காட்சிகள்
வேறெங்கும் காணக் கிடைக்காதவை..





சரித்திரப் புகழ் பெற்ற 
ஸ்ரீ துர்கை


கலைக் கோயில்களின் வரிசையில்
புள்ளமங்கை கோயிலுக்கு 
எனத் தனியிடம் உண்டு..


திருக்கூடலூர் 
திவ்ய தேச ராஜகோபுர தரிசனம்




ஹரியொடு ஹரனும் 
இலங்கிடும் தலங்கள்
தரிசனம் செய்திடத்
துலங்கிடும் நலங்கள்.
***
ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதலில் சகோதரர் நெல்லைத் தமிழரை நீங்கள் சந்தித்து அவருடன் அங்கு அருகிலுள்ள பல கோவில்களுக்கும் சென்று வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    தாங்கள் சென்றிருந்த பல கோவில்களின் படங்களும், விளக்கமும் நன்றாக உள்ளது தங்கள் தயவில் நீங்களிருவரும் சென்று வந்த அத்தனை கோவில்களின் கோபுர தரிசனமும், கோவில் இறைவனார்களின் தரிசனமும் பெற்றுக் கொண்டேன். மீண்டும் ஒரு முறை பிறகு படங்களை பெரிதாக்கிப் பார்த்து ரசிக்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அருகிலுள்ள பல கோவில்களுக்கும் சென்று வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.. ///

      மிகவும் சந்தோஷமான நாள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  2. வணக்கம் ஜி
    எனக்கும் தரிசனம் கிடைத்தது.

    திரு. நெல்லையார் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் உற்சாகமான நாள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி ..

      நீக்கு
  3. நெல்லைத் தமிழர் சந்திப்பு படித்து மகிழ்ச்சி. பல கோவில்கள் இருவரும் சேர்ந்து பார்த்தது மேலும் மகிழ்ச்சி. தஞ்சை மாமணிகோயில், புள்ளமங்கை, திருகூடலூர் கோவில் தரிசனம் கிடைத்தது இன்று.கோபுர படங்கள், மற்றும் படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் இனிமையான நாளாக அமைந்தது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. நெல்லையைச் சந்தித்ததோடு அவரோடு கோயில்கள் பயணம் சென்று வந்ததும் மிக்க மகிழ்வான இனிய தருணம், துரை அண்ணா.

    படங்கள் எல்லாம் மிக அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ ..

      நீக்கு
  5. மகிழ்ச்சியான சந்திப்பு.  இருவரும் இனைந்து ஆன்மீக சுற்று மேற்கொண்டது சிறப்பு.  உங்களை தஞ்சையில் வந்து சந்திக்க வேண்டும் என்று ஜூன் மாதம் நினைத்திருந்தேன்.  நடந்து திருப்பங்கள் வேறு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் சந்திக்கும்படியான நேரம் விரைவில் அமையட்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  6. நெல்லையுடன் சந்திப்பு நிகழ்ந்ததற்கும், கோயில்கள் தரிசனத்துக்கும் வாழ்த்துகள். சிறப்பான தரிசனங்களாக அமைந்திருக்கும். இந்தக் கோயில்கள் எல்லாம் போனோமானு நினைவில் இல்லை. புள்ள மங்கை மட்டும் போனாப்போ நினைவு.விரைவில் ஸ்ரீரங்கம் வருகை புரியவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி அக்கா..

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. இனிய ஆலய தரிசனங்கள் நண்பருடன் சென்று மகிழ்ந்து எங்களுக்கும் காண தந்துள்ளீர்கள் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  9. தஞ்சபுரீஸ்வர்ரை தரிசனம் செய்தது மறக்கவொண்ணாது. புராதானமான கோவில் சமீப காலக் கட்டடங்களால் அழகாக இருந்தாலும் புராதானம் மிளிர்கிறது. நிறைய தகவல்கள் தெரிந்தவர் நீங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..