நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 05, 2023

உடையாள்..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 19
ஞாயிற்றுக்கிழமை



















புரட்டாசி நிறைநிலா நாளில் மாரியம்மன் கோயில் வளாகத்தில் இரவு உறங்குவதாக பிரார்த்தனை.. 





கால காலமாக - நூற்றுக் கணக்கான மக்கள் உறங்கிய இந்த பிரகாரத்தில் இப்போது உறங்குதற்கு அனுமதி இல்லை..



முன்பெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் உள் பிரகாரமும் புற்று இருக்கும் மூன்றாவது பிரகாரமும் மூடப்பட்டு இரண்டாம் பிரகாரம் மட்டும் திறந்திருக்கும்.. பிரகார நடைவழி மண்டபத்தில் மக்கள் உறங்குவர்.. 

இப்போது கோயிலினுள் தங்குவதற்கு அனுமதி கிடையாது.. 



இருப்பினும், 
அம்பாளிடம் பிரார்த்தித்துக் கொண்டு கோயிலின் வாசலில் நூற்றுக்கணக்கான மக்கள் உறங்கிக் கிடந்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்..

அவ்விதமே உறங்குவதற்கு எங்களுக்கும் ஓரிடம் கிடைத்தது அன்னையின் அருளே!..


அன்றைய இரவில் எடுக்கப்பட்ட படங்களில் மேலே உள்ள படத்தில் வலப்புறம் கோபுர விளக்கையும் இடப்புறம் முழு நிலவையும் காணலாம்..

அன்று இரவு மனதில் எழுந்த பாடல் இது..

நன்றி விக்கி
ஆயிரம் கண்ணுடையாள்
ஆயி எனும் பேருடையாள்
ஆகாசம் போல் கொடையாள்
தஞ்சை எனும் ஊருடையாள்..

பாடலின் தொடர்ச்சி
அடுத்தொரு பதிவில்!..
**
ஓம் சக்தி ஓம்

ஓம் சிவாய
திருச்சிற்றம்பலம்
***

18 கருத்துகள்:

  1. என்ன அநியாயம்... நம் வழக்கங்களையெல்லாம் புதுப் புதுச் சட்டங்கள் போட்டுத் தடுக்க நினைக்கறாங்க.

    பாடல் அருமை. படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// புதுப் புது சட்டங்கள் போட்டுத் தடுக்க நினைக்கறாங்க.. ///

      அது அவங்களோட விதி..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      நீக்கு
  2. அன்னையின் அருள் மழை அனைருக்குமாய் பொழியட்டும்.  ஏன் உல் பிரகாரத்தில் படுக்க விடுவதில்லை?  பாதுகாப்பு காரணங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// ஏன் உள் பிரகாரத்தில் படுக்க விடுவதில்லை? பாதுகாப்பு காரணங்களா?.. ///

      நான் அப்படி நினைக்கவில்லை..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மாரியம்மன் கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நிறைமதி நிலவு படம் மிக நன்றாக உள்ளது. தங்களின் பிரார்த்தனை எப்படியோ நிறைவேற்றியது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    அம்மனை நினைத்தவுடன் எழுந்த பாடல் வரிகள் அருமை. முழுப் பாடலையும் படிக்க ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுப்பாடலும் செவ்வாய்க் கிழமை பதிவில்!..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. எனக்கும் தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பாடல் அருமை.மீதியை கேட்க செவ்வாய்க்கிழமை ஆவலுடன் இருக்கிறேன்.
    கோபுர தரிசனமும், முழுநிலவின் தரிசனமும் கிடைத்தது.
    இந்த வாரமும் புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கோபுர தரிசனமும், முழுநிலவின் தரிசனமும் கிடைத்தது.///

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்கள் கண்டு களித்தோம்.

    நிலாவும் கோபுர வெளிச்சமும் அழகு.

    அம்மன் அருளை நாமும் வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அரண்மனை போன்ற கோயில் அழகாக இருக்கிறது. மாரியம்மன் கோயில்!.

    கோபுர விளக்கும் நிலவும் அந்தப் படம் அருமை எல்லா படங்களுமே ரொம்ப அழகாக இருக்கின்றன.

    பாடல் சிறப்பு, துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எல்லா படங்களுமே ரொம்ப அழகாக இருக்கின்றன.
      பாடல் சிறப்பு,. ///

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் அருமை. கோயிலில் தங்கி உறங்கவிலை என்பது மனதை வேதனைப் படுத்துகிறது. இவங்க வைச்சதே சட்டம். பழைய பழக்க வழக்கங்கள் ஆகம விதிகள் என அனைத்திலும் தலையீடு அதிகமாக் இருக்கு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதேதோ நடக்கின்றது.. எல்லாவற்றையும் அன்னை பார்த்துக் கொண்டு இருக்கின்றாள்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..