நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 28, 2023

திங்களூர் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 12
செவ்வாய்க்கிழமை


திங்களூர் 
ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய 
ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோயில் 
குடமுழுக்கு வைபவ திருக்காட்சிகள்..

ஸ்ரீ கைலாச நாதர் (நன்றி fb)
இறைவன் 
ஸ்ரீ கயிலாயநாதர்

(நன்றி தினமணி)
அம்பிகை 
ஸ்ரீ பெரியநாயகி

தலவிருட்சம் 
வில்வம்
தீர்த்தம் 
சந்திர தீர்த்தம்
 
திருநாவுக்கரசரை நேரில் சந்தித்திராத போதும் அவர் மீது அன்பும் பக்தியும்  கொண்டு திருநாவுக்கரசர் பெயரால் அறப்பணிகள் செய்து வாழ்ந்த அப்பூதி அந்தணர் வாழ்ந்த ஊர்.. 

திருநாவுக்கரசருக்கு அமுது படைப்பதற்காக
அப்பூதி அடிகளின் மகன் வாழை இலை நறுக்கச் சென்றபோது பாம்பு தீண்டி இறந்து விட அந்தச் சிறுவனை திருநாவுக்கரசர் மீட்டளித்த திருவூர்..

இத் திருக்கோயிலுக்கு கடந்த கார்த்திகை எட்டாம் நாள் (24/11) வெள்ளியன்று திருக்குட முழுக்கு சிறப்புற நடைபெற்றது.. 

அச்சமயத்தில் நான் பதிவு செய்த காட்சிகள் இன்றைய பதிவில்..
நானும் என் மகனும் சந்திரன் சந்நிதியின் பின்புறம் நின்றிருந்த மக்களோடு நின்று தரிசனமும் அபிஷேகத் தீர்த்தமும் வாய்க்கப் பெற்றோம்..

அப்பூதி அடிகள் மற்றும் அவரது மனைவியார் இரு குமாரர்கள் ஆகியோருக்கு கோயிலினுள் திருமேனிகள் விளங்குகின்றன..

பங்குனி உத்திரத்தன்று சூர்ய உதயத்தில்  சூரிய ஒளியும் 
பங்குனி பெளர்ணமி சந்திர உதயத்தில்  சந்திர ஒளியும் சிவலிங்கத்தின் மீது பரவுகின்ற சிறப்புடைய தலம்.. 

அவ்வேளைகளில் சூர்ய சந்திர பூஜைகள் நடைபெறுகின்றன..

சந்திரன் (நன்றி fb)
தட்சனின் சாபத்தில் இருந்து மீள்வதற்காக சந்திரன் வழிபட்ட தலம்..

நவக்கிரக வழிபாட்டில் சந்திரனுக்கு உரிய தலமாக விளங்குகின்றது..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 13 கிமீ தொலைவில் திரு ஐயாறு தலத்தை அடுத்து திங்களூர்
உள்ளது..

வாழையடி வாழை என வளர்கின்ற - சிவனடியார் திருக்கூட்டத்தினர் குடமுழுக்கு தரிசிக்க  வந்திருந்த அன்பர்களுக்கு காலைப் பொழுதில் பொங்கல் கேசரி வழங்கி சிறப்பித்தனர்..
 
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்
பஞ்சிக்கால் சிறகன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடு இயையே.. (4/12/10)
-: திருநாவுக்கரசர் :-

கலி புருஷன் அஞ்சி நடுங்கி மெலிந்திடும் வண்ணம் அற வேள்வி நடாத்தும் அப்பூதியடிகளின் சிரசில் பூவாக திருவடி வைத்த இறைவனே.. - என்று அப்பர் பெருமான் திருப்பழனத்தில் பாடுகின்றார்..
***
ஓம்
சிவாய திருச்சிற்றம்பலம்
***

17 கருத்துகள்:

 1. படங்கள் யாவும் சிறப்பு. தினமணியிலிருந்து காபி எடுப்பதே சிரமமாயிற்றே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. வருக..

   மூலஸ்தான படங்கள் வெளியில் இருந்தே கிடைக்கின்றன..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   நீக்கு
 3. படங்களும் தரிசனமும் சிறப்பு, துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நீக்கு
 4. சிறப்பான தரிசனம், படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன. இது குறித்துச் செய்தித்தாள்களிலோ/தொலைக்காட்சியிலோ சொல்லவே இல்லை. உங்கள் மூலமே அறிய நேர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்கோயில் குடமுழுக்கு பற்றி திருவையாற்றில் கூட சரியாகத் தெரிந்திருக்க வில்லை..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி அக்கா..

   நீக்கு
 5. மிக அருமையான தரிசனம். திங்களூர் முன்பு அடிக்கடி போய் இருக்கிறோம்.திருக்குடமுழுக்கு நேரில் பார்த்தது போல இருந்தது.,

  அப்பர் தேவாரம் படித்து இறைவனை வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ என்னால் இயன்றது..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு
 6. உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் அபிசேக தீர்த்தம் கிடைத்தது மகிழ்ச்சி. இறையருள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமீப காலத்தில் இப்படியொரு தரிசனம் அமைந்தது இறையருளே..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு
 7. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 8. திங்களூர் திருக்குட முழுக்கு தரிசித்தோம். படங்கள் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..