நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 25
செவ்வாய்க்கிழமை
கடந்த சனிக்கிழமை காலை திரு ஐயாறு அந்தணக்குறிச்சியில் நந்தீசன் ஜனன வைபவம் நிகழ்ந்தது...
சிலாதன முனிவர் பொன்னேர் கொண்டு நிலத்தை உழுத்த போது அவரது தவத்திற்கு இணங்கி
நெற்றி மேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர் பொற்றடம் புய நான்கும் பொருந்துறப் பெற்று பொற்பேழையில் இருந்து மழலையாகத் தோன்றினார் நந்தீசன்..
பதினாறு ஆண்டுகளே விதிக்கப்பட்டிருந்த நந்தீசன் சிவ ஆகமங்களை ஓதாமல் உணரப் பெற்றதால் குரு பரம்பரைக்கு முதற்குருவாக ஆனார்..
கங்கை நதியில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு எண்ணாயிரம் கோடி முறை பஞ்சாட்சர மந்திரம் ஜபித்ததால் பொற்பிரம்புடன் திருக்கயிலாயத்தில் அதிகார நந்தியாக ஈசனால் நியமிக்கப்பட்டார்...
இன்றைய பதிவில் நந்தீச ஜனன வைபவத் திருவிழா காட்சிகள்..
என்னால் இயன்ற படங்கள்..
ஆலயத்திற்கு திரும்புதல்
கீழுள்ள படங்கள்
இரவு பட்டாபிஷேக தரிசனம்
நன்றி
திருவையாறு
ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கூட்டம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
எண்ணாயிரம் கோடி முறை.. அப்பா...
பதிலளிநீக்குஎப்படி கணக்கு வைத்திருப்பார்...!
சித்திர குப்தனைப் போல எவரும் இருக்கலாம்...
நீக்குதங்கள் அன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
போர்ட்ரெயிட் மோடில் எடுக்கப்பட்ட படங்கள் யாவும் இன்னும் சிறப்பு.
பதிலளிநீக்குயானையின் வால் நிமிர்ந்து நேராக கம்பு போல நின்றால் அது டென்ஷனாக இருக்கிறது என்று அர்த்தமாம்!
அந்த யானைக்கு என்னென்ன பிரச்னை களோ...
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
நந்திதீச தரிசனம் கிடைத்தது.
பதிலளிநீக்குகாட்சிகள் கண்டோம்.
அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி மாதேவி