நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 19
புதன்கிழமை
திரு ஐயாறு ஸ்ரீ அறம் வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் நடைபெற உள்ள சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய் புதன் கிழமைகளில் காவல் தெய்வங்களின் காப்பு கட்டுதல் விழாவின் முதல் நாள் -
ஊர் காவல் தெய்வமான ஸ்ரீ பூர்ண புஷ்கலை சமேத ஸ்ரீ ஐயனார் திருக்கோயிலில் ஸ்ரீ ஐயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் காப்பு கட்டுதல் நடைபெற்றது..
தொடர்ந்து இரண்டாம் திருநாள் திரு ஐயாற்றில் சப்த கன்னியர்கள் மற்றும்
ஸ்ரீ சப்த கன்னியர் - திருவையாறு தேரடி சாலை
கிழக்கு எல்லையில் கார்குடி
ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மன்
தெற்கு எல்லையில்
ஐயனார் கோயில் தெரு
ஸ்ரீ முட்ட முடிச்சு அம்மன் -
மேற்கு எல்லையில்
திருநெய்த்தானம் சாலையில் ஸ்ரீ குலை ஆயிரம் கொண்டாள்
வடக்கு எல்லையில் அந்தணர் குறிச்சி ஸ்ரீ அடைக்கலம் காத்த அம்மன்
ஆகிய பிடாரி அம்மன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளோடு காப்பு கட்டுதல் நடைபெற்றது..
இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்களின் உத்தரவுப்படி திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்..
படங்கள் நன்றி
காவிரிக்கோட்டம்
வென்றிமிகு தாருகன
தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு
காளிகதம் ஓவ
நின்றுநட மாடியிட
நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள்
வண்திருவை யாறே.
2/32/5
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
சிறப்பான படங்கள் மூலம் தரிசனம் பெற்று வணங்கி கொள்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இரண்டாம் நாள் காப்பு கட்டுதல் விழாவும், எந்தெந்த தெய்வங்களுக்கு என்ற விபரமும் படித்து தெரிந்து கொண்டேன். சப்த கன்னியரை வணங்கி பிரார்த்தித்து வொண்டேன். ஓம் நமசிவாய... 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஐயாறப்பர் பிரமோற்சவ காப்புக்கட்டல் வைபவம் தரிசித்தோம்.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக இருந்தன.