நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 24, 2026

பூமகள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 செவ்வாய்க்கிழமை


எங்கள் பிளாக்கில் -  அஞ்சலை  கதையின் இரண்டாம் பகுதி வெளியான போது மதிப்பிற்குரிய மாதேவி அவர்கள் கதையை வாசிக்க வரவில்லை...

அஞ்சலை - 
 இரண்டாம் பகுதி -  கவிதையை அவர் பொருட்டு சற்றே விரிவாக எழுதியுள்ளேன்..

பச்சை நிறத்தில் உள்ளவை புதியன ஆகும்..

வாழ்க நலம்...

தென்மலையின் சந்தனமே
தேன்வழியும் செண்பகமே
பொன்னி நதிப் பூங்காற்றே
வந்திடம்மா பூ முடிக்க..

பொன்னிறத்துப் பூவரும்பே
நன்னிலத்து செங்கரும்பே
தங்கநிறத் தாமரையே
வந்திடம்மா மை எழுத..
 
முத்து முத்துப் புன்னகையே
முத்தமிழின் இன்சுவையே
நெத்திச் சுட்டி சூடிடவே
வந்திடம்மா வான்மதியே...

மல்லிகையும் பூத்திருக்க
மங்கலங்கள் காத்திருக்க
மஞ்சள் முக நித்திலமே
மருதாணிச் சித்திரமே!.. 

மாமதுரை மங்கலத்தாள்
மங்கை முகம் பார்த்திருக்க
சுந்தரனும் வருவாரே
செல்லத் தமிழ் மொழிவாரே..

வில்லெடுத்த தோளினிலே
வெற்றிமலர்  தான் கொடுக்க
முல்லை மலர் தொடுத்தவளே
பாற்கடலின் ஸ்ரீதேவி..

தேனோடு தினை இருக்க
தெய்வ மலர் பூத்திருக்க
தேடி வந்த முருகனுக்கு
முத்தழகே வள்ளியம்மா..

செந்தமிழின் பூமகளாய்
சீர் கொணர்ந்த குந்தவையே
பொன்னி நதி தேசத்திலே 
 மயில் என்று வந்தவளே..

தெய்வலக்ஷ்மி கோலமெலாம்
அன்னம் உந்தன் தோற்றமம்மா..
நாள் எல்லாம் சிரித்திருக்க
தெய்வம் வந்து காக்குமம்மா!..
**

நலம் வாழ்க
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..