நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி
வியாழக்கிழமை
திருப்புகழ்
வள்ளிமலை
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் ... தனதான
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் ... கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் ... தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் ... சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் ... கழல்தாராய்...
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் ... குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற் ... றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் ... தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி
காணொளியில்
அடியார்கள்
பாடுவதைக் கேட்டு
அதன் வழி
கௌமாரத்தில் இருந்து பெறப்பட்ட திருப்பாடல்...
முருகா முருகா
முருகா முருகா
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..