நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2025

வெள்ளி 3

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
மூன்றாம் வெள்ளி


இன்று
இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் 
பாடிய பாடல்

பாடல் : திரு உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை : திரு TK புகழேந்தி

மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி
அங்கையற்கண்ணி அன்பு மீனாட்சி
அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி (மங்கலம்)

திங்களைச் சூடிய சிவனுக்குத் துணைவி
செல்வி மீனாட்சி செந்தமிழ்ப் பாவை
திருமணக் கோலம் திகழ்ந்திடும் பூவை (மங்கலம்)

சங்கத் தமிழ் போல் தனித்தவள் சக்தி
தமிழின் சுவை போல் இனிப்பவள் சக்தி
குங்குமம் தருபவள் குலமகள் சக்தி
கும்பிட்டு நினைப்பதைக் கொடுப்பவள் சக்தி (மங்கலம்)


தாமரை போன்ற தலைநகர் நடுவே
தாமரைக் குளத்தைச் சார்ந்தவள் சக்தி
மாமதுரைக் கொரு மாபெரும் சக்தி
மாநிலம் எங்கணும் ஓம் சிவசக்தி (மங்கலம்)


பாடலைக் கேட்பதற்கு -
https://youtu.be/HzHvuUZSrec?si=poGRllZfUjP18Qw0

மீனாட்சித் தாயே போற்றி
சொக்கநாதப் பெருமானே போற்றி
**

6 கருத்துகள்:

  1. மதுரையில் வசித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.  

    அப்போதெல்லாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தங்குதடையின்றி செல்வோம்.  கூட்டம் இருப்பதே தெரியாது.  மரத்தடுப்புகள் கிடையாது.  மணிக்கணக்கில் காத்திருத்தல்கள் கிடையாது.  

    இப்போது கூட இரண்டு நாட்களுக்குமுன் பொற்றாமரைக் குளத்தில் ஏகாந்தமாய் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று ஆசை வந்தது.  மதுரையில் இருந்தால் அடிக்கடி அங்கு சென்று குளப் படிக்கட்டுகளில் அமரலாம் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொற்றாமரைக் குளத்தின் சிறப்பே சிறப்பு...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. மதுரைக்கு செல்ல வேண்டிய வேலை இரண்டு இருக்கிறது.  ஒரு வேலை பல வருடங்களாய் டியூ..  இப்போதுதான் இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்தேன்!  இன்னும் போகவில்லை.  இன்னொரு வேலை 2016 முதல் டியூ.  மீனாட்சி அம்மனை தரிசிக்கும் ஆவலும் வருகிறது. 

    அந்த பொற்றாமரைக் குளம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னை அருள்வாள்

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. மீனாட்சி அம்மன் தரிசனம் கிடைப்பது இப்போது மிகவும் கடினமாக இருக்கிறது. கால்களுக்கு தெம்பு வேண்டும் மணி கணக்கில் நிற்க வேண்டும். என் மகன் தன் சித்தியை அழைத்து கொண்டு போய் தரிசனம் செய்து வந்தான். 100 ரூபாய் டிக்கட் வாங்கினாலும் ஒரு மணி நேரம் நிற்க வேண்டும்.

    வீல் சேர் இருக்கு அடுத்த தடவை போகலாம் என்றான்.
    ஸ்ரீராம் சொன்னது போல தங்கு தடை இல்லாமல் மீனாட்சியை தரிசனம் செய்த காலங்கள் மனதில் வந்து போகிறது.

    என் தங்கை "முளைகொட்டு திருவிழா" நடக்கிறது வா பார்க்கலாம் கோயில் உள்ளே போக வேண்டாம் அம்மன் ஆடி வீதியில் வலம் வருவதை பார்க்கலாம் என்றாள். மனம் துணியவில்லை.

    பாடலை பாடி அன்னையை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது இல்லத்திற்கு வந்த போது கோயிலின் வெளி வீதி வலம் செய்ததோடு சரி...

      அம்மா தான் மனம் வைக்க வேண்டும்..

      நன்றி நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..