நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
இரண்டாம் வெள்ளி
![]() |
அச்சன்குட்டம் |
அம்மா உந்தன் அருள் நோக்கி
அடியேன் வரைந்திடும் கடிதம்..
அம்மா நீயும் இரங்கி வந்தால்
அடியேன் மடலுக்கும் புனிதம்..
அசுரர் நலத்தைத் தீர்த்திட்ட
கூர்முனைச் சூலம் நலந்தானா..
அக இருள் தன்னை அகல்விக்கும்
அக்கினிக் கொழுந்தும் நலந்தானா..
வஞ்சகர் வலிமை தீர்க்கின்ற
வாட் படை தானும் நலந்தானா..
கயவர் கூட்டக் கதை முடிக்கும்
பெருங் கதை அதுவும் நலந்தானா..
பேரிடியாய்ப் பேரோசையிடும்
உடுக்கை அதுவும் நலந்தானா..
கொஞ்சு தமிழ்ப் படை ஓங்கார
சங்கு சக்கரம் நலந்தானா..
அரவுடன் பாசம் காபாலம்
ஐங்கணை அனைத்தும் நலந்தானா..
பொன்மணி கேடயம் ஈட்டியுடன்
கூர்வேல் அதுவும் நலந்தானா..
அணங்குகள் உந்தன் பரிவாரம்
அவைகளும் ஆங்கே நலந்தானா..
கோமகள் உன்னுடன் விளையாடும்
கோளரி அதுவும் நலந்தானா!..
அனைத்தும் நலமாய் விளங்கட்டும்
அவனியை நன்றாய் காக்கட்டும்..
ஆயினும் அம்மா எனக்கென்று
ஆசைகள் சொன்னேன் உனக்கின்று..
அம்மா உந்தன் அருள் விழிகள்
ஆறுதலைத் தான் காட்டாதா
அங்கும் இங்கும் விளையாடி
அல்லல் தனையே ஓட்டாதா..
அம்மா உந்தன் புன்னகையும்
அருள் எனும் நெறியைக் கூட்டாதா
அண்டி வருகின்ற எந்தன் மனம்
இறும்பூதெய்திடத் தேற்றாதா
அம்மா உந்தன் கையிரண்டும்
வாரி என்னைச் சேர்க்காதா
வாட்டம் உறுகின்ற என் அகத்தில்
வருகிற கவலை தீர்க்காதா..
அம்மா உன் திருச்செவியில்
எந்தன் குறையும் கேட்காதா
எந்தன் மகனே என்றே உந்தன்
செவ்விதழ் தானும் மலராதா..
தஞ்சை சோழ மண்டலத்தில்
தங்கப் பொலிவாய் ஆனவளே..
சஞ்சலப் பிணியைத் தீர்த்தருளும்
சமயபுரத்து சங்கரியே..
பத்திரகாளி என்றெழுந்து
பகைதனை விரட்டும் அம்பிகையே..
அருளினைச் சுரக்கும் கோமதியே
ஆதி எனும் சிவ நாயகியே..
முத்துப் பேச்சி என்றே வந்து
முந்தை வினையறப் பேசிடம்மா..
இன்னல் தீர்த்து என் மனதில்
இசக்கி என்றே இருந்திடம்மா..
எங்கும் பிணியைத் தீர்க்கின்ற
பீடுடை தேவி பிடாரியம்மா..
பீடைதனையே பிய்த்தெறிந்து
பெருந்துணையாய் நீ வாருமம்மா...
அம்மா உந்தன் திருவடிகள்
அடைக்கலம் என்றே ஆகாதா...
திருவடி மலரின் அடிமலராய்
எந்தன் சொல்லும் ஆகாதா!..
ஃஃஃ
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
**
முருகா.. முருகா...
பதிலளிநீக்குநலம் கேட்டலும், கோரிக்கையும் நன்று.
அன்னையும் தானே வந்திடுவாள்
அருள்மழை யாவும் பொழிந்திடுவாள்
எதிர்நீச்சல் படத்தில் ஒரு காட்சி வரும்.
பதிலளிநீக்குஅன்று மாடிப்படி மாதுவுக்கு எந்த வீட்டிலும் சாப்பாடு கிடைத்திருக்காது. அன்றைய முறை எந்த வீடோ அவர்கள் கூட கைவிரித்திருப்பார்கள். நாயரின் அறைக்குச் செல்வான். நகைச்சுவையாக பேசிக்கொண்டே "ஆமாம், நாயர் நீ சாப்பிட்டியோ?" என்று கேட்பான். ஓரிரண்டு பேச்சு முடிந்தததும் மறுபடியும் அதையே கேட்பான்.
"கழிச்சு... கழிச்சு" என்பான் நாயர்.
மாது கேட்பான் "ஏன் நாயர்... நான் உன்னை சாப்பிட்டியோன்னு கேட்டேன் இல்ல.. நீ என்னை கேக்க மாட்டியா?"
ஆடி வெள்ளி நாளில் நீங்கள் பகிர்ந்த பாடல் சிறப்பு.
பதிலளிநீக்குஅம்பாள் அலங்காரப் படம் சூப்பர்.
உங்கள் வேண்டுதலை அம்மா செவிமடுப்பாள் நலனே விளையாட்டும்.
அம்மா தாயே சரணம்.
ஓம் சக்தி ஓம்.