நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 07, 2024

பால் குடம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 25
ஞாயிற்றுக்கிழமை


சிறை காத்த ஐயனார்..

தஞ்சையின் நாயகர்களுள் இவரும் ஒருவர்..

பராசர முனிவருக்கு இன்னல் விளைத்த தஞ்சகன் முதலான  அசுரர்களை ஸ்ரீ பத்ரகாளி கோடி ரூபம் கொண்டு  வதம் செய்தபோது அஞ்சி நடுங்கிய தேவர்களைக் காக்கின்ற பொறுப்பை ஸ்ரீ ஐயனாரிடம் ஒப்படைத்தார் ஈசன்.. 

அசுர வதம் முடிந்த 
பின்னர் தஞ்சபுரீஸ்வர ஆலயத்திலேயே இருந்த ஐயனார் பின்னொரு சமயம் தமது பரிவாரங்களுடன் தற்போதைய இடத்தில் கோயில் கொண்டார்..

ஸ்ரீ தஞ்சபுரீஸ்வர ஆலயத்தில் ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயப்பன் என்வும் 

ஸ்ரீ கோடியம்மன் கோயிலில் ஸ்ரீ கல்யாண சாஸ்தா எனவும் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்வாமி இங்கு பால ரூப ஏக மூர்த்தியாக கோலோச்சுகின்றார்... 

அருகில் ஸ்ரீ விநாயகர், காமாட்சியம்மன்,
உதிர கருப்ப ஸ்வாமி.. கூடவே சப்த மாதர்கள்.. 

பனையடியான், மாமுண்டி கருப்பர், லாட சன்னாசி, காடேறியம்மன், பேச்சியம்மன், பெரியண்ணன், சப்பாணிக் கருப்பர், காத்தவராய ஸ்வாமி,  மதுரை வீரன் என பரிவார மூர்த்திகள்..

ஐயன் சிறை காத்த செல்வனுக்கு வருடாந்திர பால் குட வைபவம் பங்குனி 18 ஞாயிறன்று (31/3) வெகு சிறப்பாக நடைபெற்றது..

வைபவத்தின் சில காட்சிகள் இன்றைய பதிவில்.





















கோயிலின் எதிரே மரங்கள் இருந்தாலும் 
வெயில் தகித்துக் கொண்டிருந்தது..

மக்களுக்காக - தகரத் தகடுகளால் நிழல் அமைத்திருந்தனர்..

இது எந்த அளவுக்கு சரி என்று வழக்கம் போல புரியவில்லை..

ஐயன் அருள் உண்டு
என்றும் பயமில்லை..
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. அய்யனார் பால சாஸ்தா எங்கள் குலதெய்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கும் சிறை காத்த ஐயனார் பால ரூபம் தான்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தகர தகடுகளால் நிழல் அமைப்பது தவறா?  ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகரங்களும் இரும்புக் குழாய்களும் வெயிலின் தாக்கத்தைப் பிரதிபலிப்பவை...

      தென்னங்கீற்றுகளும் மூங்கில்களும் அப்படியில்லை..

      அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.பால் குடம் எடுத்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. எங்கள் அம்மா வீட்டு குலதெய்வமும் சாஸ்தாதான். சிறை காத்த சாஸ்தாவை பக்தியுடன் வணங்கி கொண்டேன். அனைவரும் நலமாக வாழ சாஸ்தா அருள் புரிய வேண்டுமென பக்தியுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக வாழ சாஸ்தா அருள் புரிய வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்வோம்...

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. ஐயனார் பால் குட பவனி படங்கள் நன்றாக உள்ளன. அவர் அருள் அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயனார் அருள் அனைவரையும் காக்கட்டும்...

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..