நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 21, 2024

தேரோட்டம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 8
ஞாயிற்றுக்கிழமை


அஸ்திர தேவர்


பல்வேறு சிறப்புகள் உடைய தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருந்திருவிழா 18 நாட்கள் நடைபெறும்..

முளைப்பாரி

இதன்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா
கடந்த பங்குனி 24 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலா 
நடைபெற்றது..
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று சித்திரை ஏழாம் நாள் (20/4) சனிக்கிழமை காலை 7 மணியளவில் ஸ்ரீ அல்லியங்கோதையுடன் தஞ்சை விடங்கப் பெருமானாகிய ஸ்ரீ தியாகராஜர் திருத்தேரில் எழுந்தருளினார்..

ஆரூரா தியாகேசா.. முழக்கத்துடன் அடியார்கள் வடம் பிடிக்க ராஜ வீதிகளில் 
திருத்தேரோட்டம் வெகு சிறப்புடன் 
நடைபெற்றது..


தேரோட்டத்தின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..
 தேர் நிலை

காத லாகிக்
  கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை
  நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
  மெய்ப்பொருல் ஆவது
நாதன் நாமம்
  நம சிவாயவே.. 3/1/1
-: திருஞானசம்பந்தர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

 1. தலைப்பைப் படித்ததும் தலைவரின் நூல்வேலி பாடலும் 'நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு' பாடலும் நினைவுக்கு வந்தது (ஏன் தெரியுமா?)  தேரோட்ட படங்களைத் தந்த உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு...

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் நான் அங்கிருந்த வரை கேள்விப்பட்டதுமில்லை, பார்த்ததும் இல்லை!  'எதுதான் தெரியும், எதைத்தான் பார்த்திருக்கே நீ' என்கிறீர்களா?  அதுவும் சரிதான்!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தஞ்சை பெரிய கோவிலின் தேரோட்ட படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இறைவன் ஸ்ரீ தியாகராஜரையும் அன்னை அல்லியங்கோதையையும் பணிவுடன் வணங்கி தரிசித்துக் கொண்டேன். தேர் பங்கள் மிக அழகாக இருக்கிறது. தேரோட்ட காட்சிகளை எங்களுக்கு காணக் கிடைக்குமாறு செய்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. தரிசித்து கொண்டேன் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 5. தேரோட்ட படங்கள் செய்திகள் அருமை.அன்னை அல்லியங்கோதை , இறைவன் ஸ்ரீ தியாகராஜரையும் வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 6. தஞ்சை சித்திரை திருவிழா காட்சிகள் கண்டு வணங்கினோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..