நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 09, 2024

வயல் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 27 
செவ்வாய்க்கிழமை


நடவு காலத்தில் நடவுக்கு ஏற்ற வகையில் அளவான நீருடன் இருப்பது வயல்.. 
நீர் நிறைந்து வரப்புகளில் ததும்பிக் கொண்டிருக்கும் நிலப்பரப்பு கழனி எனப்படுவது.. 

இப்படி நீரும் நிலமும் நிறைவளமாக நிறைந்து விளங்குகின்ற நிலப்பரப்பு - வயல் வெளி - பழனம் என்று போற்றப்பட்டது -  என, முந்தைய பதிவு ஒன்றில் பார்த்தோம்..

திரு ஐயாற்றை அடுத்து அமைந்துள்ள திருத்தலம் ஒன்றிற்கு திருப்பழனம் என்றே பெயர்..


அந்த வகையில் கழனி, வயல், பழனம் - என்று சிறப்புற்று இருந்த தலங்களின் சிறப்புக்கள் பலவும் தேவாரத்தில் குறிக்கப்படுகின்றன..

நமது சமயச் சான்றோர்கள் அவ்விதம் குறித்தருள்கின்ற பதிகத் திருப்பாடல்கள் பற்பல...

அவற்றுள் 
வயல் என்ற பைந்தமிழ் பயின்று வருகின்ற ஒரு சில பாடல்களை இன்றைய பதிவில் சிந்திப்போம்..


இன்றைய பதிவிலுள்ளவை
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருப்பாடல்கள்

கணபதியீச்சரம்
(திருச்செங்காட்டங்குடி)

தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1/6/3

திருநெய்த்தானம்

நிழலார் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற 
நெய்த்தானத்து    
அழலானவன் அனல் அங்கையில் ஏந்தியழகாய    
கழலானடி நாளுங் கழலாதே விடலின்றித்  
தொழலார் அவர் நாளுந்துயர் இன்றித் தொழுவாரே.. 1/15/7

திரு ஐயாறு

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கருள் புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்து அங்கோடிச்
செஞ்சாலிக் கதிர் உழக்கிச் செழுங்கமல வயல்படியும் திரு ஐயாறே.. 1/130/8

திரு ஆலவாய்
(மதுரையம்பதி)

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.  2/66/2


திரு ஆரூர்

கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட்டு அருத்தியோடு உள்ளமொன்றி உள்குவார் உளத்துளான் உகந்தவூர்
துள்ளிவாளை பாய்வயல் சுரும்புலாவு நெய்தல் வாய்
அள்ளல்நாரை ஆரல் வாரும் அந்தண் ஆரூர் என்பதே.. 2/101/6

தென்குடித்திட்டை
(திட்டை)

மாலொடும் பொருதிறல் வாளரக்கன் நெரிந்து
ஓலிடும் படி விரலொன்று வைத்தான் இடம்
காலொடும் கனக மூக்குடன் வரக்கயல் வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித்திட்டையே. 3/35/8
**
தேடலில் துணை
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

இத்தகைய வளங்கள் தான்
நிறைவும் நிம்மதியும்..

வயலே வாழ்வு
வாழ்வே வயல்!..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..