நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 20, 2024

திருமலை தரிசனம் 5

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 7   
சனிக்கிழமை


திருமலையில் ஆங்கொரு ஸ்ரீராம பாதம் சேவித்து விட்டு அறைக்கு திரும்பிய நேரத்தில் வாசலில் காத்திருந்தவர்..


திருமலையில் தங்கியிருந்த நாட்களில் அங்கே கிடைத்த நல்ல மனிதர்.


மூன்று நாட்கள் திருமலையில் தங்கி விட்டு கிழமை காலையில் திருப்பதியை வந்தடைந்தோம்.. 
ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் - திருப்பதி
அங்கு ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு மன்னார்குடி விரைவு வண்டியில் பயணித்து, விழுப்புரத்தில் இறங்கிக் கொண்டோம்..

முன்பதிவு மயிலாடுதுறைக்குத் தான்.. இந்த வண்டி அங்கு செல்வதற்குள் மூன்றாவது நடைமேடையில் இருந்து தஞ்சைக்கான வண்டி புறப்பட்டிருக்கும்..

எனவே,
திருச்சி ரயிலில் மாறி அரியலூரில் இறஙகி
திரு ஐயாறு - வழியாக இரவு  ஒன்பது மணியளவில் நல்லபடியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்..
**

தாழ்சடையும் நீள்முடியும்  ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும்  திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.. 2344
-: பேயாழ்வார் :-

இன்று காலையில்
தஞ்சையில்
தேர்த்திருவிழா..


ஓம் 
நமோ வேங்கடேசாய

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

 1. நல்லதொரு ஆன்மீகப் பயணம் முடிந்து வீடு திரும்பியாச்சு! திருப்பதியை அல்லது கீழ் திருப்பதியை அடைந்தது என்ன கிழமை என்பதில் சஸ்பென்ஸா!

  பதிலளிநீக்கு
 2. திருமலை தரிசனம் அருமை.
  படங்களும் , செய்திகளும் அருமை.
  நல்ல மனிதர் கிடைத்தது மகிழ்ச்சி.
  மூன்று நாள் தங்கி இருந்து பார்த்தது நன்றாக இருந்து இருக்கும்.
  பேயாழ்வார் பாசுரம் படித்து திருமலை அப்பனை வேண்டி கொண்டேன் அனைவர் நலத்துக்கும்.

  பதிலளிநீக்கு
 3. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 4. திருமலை படங்கள் அருமை. தரிசித்தோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..