சனி, மார்ச் 30, 2024

திருமலை தரிசனம் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 17
சனிக்கிழமை




திருமலை ஏற்றத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இன்றும் தொடர்கின்றன.. 

முழங்கால் பிரச்னையுடன்  எப்படி நான் மலையறினேன் என்பதில் வியப்பு.. 

பெருமாளின் கருணையன்றி வேறு எதுவாக இருக்க முடியும்!..

வழிநடையில் சில காட்சிகள் - இன்றைய பதிவில்..


நடைவழிக்கு இருபுறமும் உள்ள வனப்பகுதி








காலி கோபுரம்


சிற்றுண்டிகளுக்கான கடைகள்.. 
மக்களின் ஆதரவில் விற்பனை அமோகம்..










திருமலை புனிதத் தலம்.. சம்பிரதாய முறைப்படி உடையணிந்து திருக்கோயிலுக்கு வாருங்கள்.. முதியோர்க்கு மதிப்பளியுங்கள்.. ஸ்வாமி தரிசனத்துக்கு வெளி ஆட்களை நாடாதீர்கள்.. மாமிச உணவு, புகை, மது இவற்றை தவிர்த்து விடுங்கள் - 
என்றெல்லாம் அறிவுரை எழுதி வைத்துள்ளனர்.. 

தமிழகத்தின் கோயில்களிலும் 
இம்மாதிரி அறிவிப்பு செய்யலாம்..

அனைவரும் இதைப் பின்பற்றி நடைமுறை  
வாழ்வில் மேற்கொண்டால் மிகவும் நல்லது..


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும்  அரம்பையரும் கிடந்தி யங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.. 685
-: குலசேகரஆழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ வேங்கடேசாய
***

14 கருத்துகள்:

  1. படங்களை ரசித்தேன். விற்பனைக் கடைகள்..... மனிதர்களை நம்பித்தானே அவர்கள் பிழைப்பும்...!

    பதிலளிநீக்கு
  2. 25 ரூபாய் அபராதமா, கட்டணமா?  மைனர் குஞ்சு அபராதம் போல இருக்கிறதே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்னவோ புரியவில்லை..

      மகிழ்ச்சியும்
      நன்றியும்..

      நீக்கு
  3. திருப்பதிக்கு நடந்து சென்ற நினைவுகள் வந்தது. ஒரு ஞாயிறில் படங்களுடன் எழுதணும். நீங்கள் இப்போது நடந்து சென்றது ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..
      நான் மலையேறியது ஆச்சர்யம்...

      வேங்கடேசன் அருள்..
      மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை

      நீக்கு
  4. நான் 1983-ல் சென்றது இப்போது எவ்வளவு மாற்றங்களோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்துத் தெருவே மாதந்தோறும் மாறிக் கொண்டு இருக்கின்றது..

      மகிழ்ச்சி
      நன்றி ஜி..

      நீக்கு
  5. படங்கள் எல்லாம் அருமை. மலைக்கு நடந்து சென்று வந்து இருப்பது வியப்பு. மலையப்பன் பலத்தை கொடுத்து இருக்கிறார்.
    குலசேகர ஆழவார் பாடல் பிடித்த பாடல் எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மலையேறியது ஆச்சர்யம்...
      வேங்கடேசப் பெருமானின் அருள் தான்..

      மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  6. மலையேற்றக் காட்சிகள் அருமை. மலை ஏறியது அவனருளால்தான்.

    வெங்கடேசா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மலையேறியது
      வேங்கடேசப் பெருமானின் அருள் தான்..

      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி ..

      நீக்கு
  7. மலையேற்றம் - மகிழ்ச்சி. காட்சிகள் உங்கள் பதிவு வழி கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..