நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 24, 2024

ஐயாறு தேர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 11
புதன் கிழமை


காசிக்கு நிகரான திரு ஐயாறு திருத்தலத்தில் நிகழ்வுறும் சித்திரைப் பெருந்திருவிழாவில் கடந்த திங்கள் (22/4) அன்று தேரோட்டம்.. 

காலையில் புறப்படும் ரதங்கள் முற்பகலில் மேல ரத வீதியில் நிலை நிறுத்தப்படும்.. 

மாலையில் மீண்டும் வடம் பிடிக்கப்பட்டு முன்னிரவுப் பொழுதில் தேரடியை வந்தடையும்.. 

அந்த அளவில் நேற்று பெரிய தேர் நிலை அடைந்த நேரம் 8:30..

கிழக்கு ரத வீதியில் சிறிது தூரம் ஸ்ரீ ஷண்முகப் பெருமானின் திருத்தேர் வடம் பிடிக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தது..

எட்டரை மணிக்குப் பிறகு அம்பாள் ரதம் தேரடியை அடைவதற்கு நேரம் ஆகும் என்பதால் அந்த அளவில் இல்லம் திரும்பினேன்.. 

முழங்கால் பிரச்னை தீராத நிலையில் இந்த அளவுக்கு வரம் பெற்றிருப்பது பெரும்பேறு..

தேரோட்டத்தில் நான் பதிவு செய்த காட்சிகள் இன்றைய பதிவில்..


கீழுள்ள படங்கள் - 
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் Fb ..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 4/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

 1. யானை அழகு. கோவில் அழகு. தேர் அழகு. சிறுவன் அழகு. படங்கள் யாவும் அழகு. தேரோட்டம் பார்த்து நாளாச்சு! ஆட்கொண்டார் நமை தியாகேசர்.

  பதிலளிநீக்கு
 2. ஐயாறு தேர்க்காட்சிகள் அருமை. கண்டு வணங்கினோம்.

  பதிலளிநீக்கு
 3. புகைப்பட தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தேரோட்ட படங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. தேரின் படங்களைக்கண்டு தரிசித்துக் கொண்டேன். தங்களுக்கு தேர் வடம் பிடிக்கிற பாக்கியம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. தியாகராஜ பெருமானையும் தரிசித்துக் கொண்டேன். இறைவன் அனைவருக்கும் எல்லா நலன்களையும் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. திரு ஐயாறு பாடலை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
  தேர் திருவிழா படங்கள் எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..