நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திரு ஐயாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரு ஐயாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 03, 2025

திருக்குடமுழுக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 21
 திங்கட்கிழமை


இன்று
திரு ஐயாற்றில்
திருக்குடமுழுக்கு

திருநாவுக்கரசர்
அருளிச்செய்த திருப்பதிகம்

நான்காம் திருமுறை
முப்பத்தெட்டாவது திருப்பதிகம்


கங்கையைச் சடையுள் வைத்தார் 
  கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் 
  திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் 
  மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே..  1  

பொடிதனைப் பூச வைத்தார் 
  பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார் 
  காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை 
  மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 2  

உடைதரு கீளும் வைத்தார் 
  உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார் 
  பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் 
  வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 3  

தொண்டர்கள் தொழவும் வைத்தார் 
  தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார் 
  எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை 
  மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும் 
  ஐயன் ஐயாறனாரே.. 4  

வானவர் வணங்க வைத்தார் 
  வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் 
  காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் 
  ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 5
  

சங்கணி குழையும் வைத்தார் 
  சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார் 
  விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் 
  கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 6  

பத்தர்கட் கருளும் வைத்தார் 
  பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் 
  சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் 
  முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 7  

ஏறுகந் தேற வைத்தார் 
  இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார் 
  நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார் 
  கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 8  

பூதங்கள் பலவும் வைத்தார் 
  பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் 
  கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் 
  பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 9
 
இரப்பவர்க் கீய வைத்தார் 
  ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் 
  கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் 
  படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 10
திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

ஞாயிறு, பிப்ரவரி 02, 2025

யாகசாலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 20 
ஞாயிற்றுக்கிழமை

திரு ஐயாறு 
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரம்  
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய 
ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவினை முன்னிட்டு நாளும்
யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி, மகா தீபாராதனை , ஷோடச உபச்சாரம் , வேத திருமுறை பாராயணம் இவற்றுடன் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காட்சிகள்..

பதிவில் நான்காம் கால பூஜை தரிசனம்



















நெஞ்சார்ந்த நன்றி
சிவனடியார் திருக்கூட்டம் 
**

நோக்கரிய திருமேனி  உடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாகம் ஆர்த்தாய் நீயே
அடியான் என் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ.  6/38/2 
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

சனி, பிப்ரவரி 01, 2025

அழைப்பிதழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 19 
சனிக்கிழமை



திரு ஐயாறு 
ஆலய கும்பாபிஷேக 
அழைப்பிதழ்

பூலோக கயிலாயம்..

காசியம்பதிக்கு நிகரான தலங்களுள் ஒன்று

பஞ்சநதிகளின் ஷேத்திரம்..

காவிரியின் வடகரைத் திருத்தலம்,.

தெற்கில்  ( தஞ்சாவூரில் இருந்து) இவ்வூருக்குள் நுழைவதற்குள் ஐந்து ஆறுகளைக் கடந்திருப்போம்., 

இந்த வரப்ரசாதம் வேறு வேறு திசைகளில் இருந்து திரு ஐயாற்றுக்குள் வருகின்ற போது கிடைப்பதில்லை..

திருஞானசம்பந்தர், 
திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் திருப்பதிகங்கள் பெற்றிருக்கின்ற இத்தலத்தை மணிவாசகப் பெருமானும் திருவாசகத்தில் பாடிப் பரவிப் போற்றுகின்றார்..

சித்திரை நிறைநிலா நாளை அடுத்து வருகின்ற விசாகத்தன்று கண்ணாடிப் பல்லக்கில்  ஐயாறப்பர் ஸ்வாமி அறம் வளர்த்த நாயகியும் எழுந்தருளி முன் செல்லவும் நந்தியம்பெருமான் சுயம்பிரகாஷிணி தேவியுடன் 
வெட்டி வேர் பல்லக்கில் பின் தொடரவும் இரு பல்லக்குகளும் திருப்பழனம் 
திருச்சோற்றுத்துறை திருவேதிக்குடி திருக்கண்டியூர் திருப்பூந்துருத்தி திருந்நெய்த்தானம் ஆகிய திருத்தலங்களின் பல்லக்குகளுடன் சப்த ஸ்தானம் என்கிற பெருவிழா காண்கின்ற திருத்தலம் ..

தெற்கு வாசலில் ஸ்ரீ ஆட்கொண்டார் சந்நதி.. 

திண்டி எனப்படும் இவர் துவார பாலகர்.. ஏழைச் சிறுவன் ஒருவனைத் துரத்தி வந்த யமனை ருத்ராவேசம் கொண்டு  விரட்டியதால் சிவாம்சம் பெற்றதாக ஐதீகம்..

இவருக்கு முன்பாக நந்தியம்பெருமான் சேவை சாதிக்கின்றார்... 

திருக்கோயிலினுள் செல்லும் முன் இவரை வணங்கிச் செல்வதே மரபு.. 

நோய் விபத்துகளைத் தடுத்து யம பயம் தீர்ப்பவர் ஸ்ரீ ஆட்கொண்டார்..

இவரது சந்நிதிக்கு எதிரில் குங்குலியக் குண்டம்..  இதனை அமைத்தவர் நாயன்மார்களுள் ஒருவரான  திருக்கடவூர் கலிய நாயனார்.. 

இதனாலேயே அவர் குங்கிலியக் கலய நாயனார் எனப்பட்டார்..

ஸ்ரீ ஆட்கொண்டார் திருவுருவத்துடன் அழைப்பிதழ் திகழ்கின்றது..



நிகழும் ஸ்ரீ குரோதி வருடம் மங்களகரமான தை இருபத்தொன்று திங்களன்று (3.2.2025) திருக்குடமுழுக்கு காண்கின்றது இத்திருக்கோயில்

அனைவரும் வருக
இறையருள் பெறுக
**
பத்தர்கட் கருளும் வைத்தார் 
  பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் 
  சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் 
  முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.  4/38/7 
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஜனவரி 28, 2025

ஐயாற்றில் கோபூஜை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 22
செவ்வாய்க்கிழமை

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திரு ஐயாறு பூலோக கயிலாயமாகிய
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவினை முன்னிட்டு சோம வார பிரதோஷ நாளாகிய
நேற்று காலை பத்து ம்ணியளவில் -

தருமபுர ஆதீனத்தின்  இருபத்தேழாவது   குரு மகாசந்நிதானம் அவர்களின் திருமுன்னர்  நூற்றெட்டு பசுக்களுக்கு கோபூஜை  நடைபெற்றது.. 

மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குரு மகாசந்நிதானம் அவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்..

எளியேனால் இவ்வைபவத்திற்குச் செல்ல இயலவில்லை..

ஒளிப்படங்களை வழங்கிய ஆதீன அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..



















வானவர் வணங்க வைத்தார் 
  வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் 
  காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் 
  ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.  4/38/5
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2024

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 21
செவ்வாய்க்கிழமை

ஆடி அமாவாசை
(ஆடி 19 ஞாயிறு)
அப்பர் பெருமான் கயிலாயத் திருக்காட்சி
திரு ஐயாறு



















 நன்றி
சிவகண திருக்கூட்டம்
திரு ஐயாறு..


வானுற்ற மாமலைகள் ஆனாய் நீயே
வடகயிலை மன்னி இருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அடியான் என்றடி என்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மடவாள் பங்கன் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.  6/38/4 

எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம்  மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.  6/38/7
-: திருநாவுக்கரசர் :-

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***