நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2024

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 21
செவ்வாய்க்கிழமை

ஆடி அமாவாசை
(ஆடி 19 ஞாயிறு)
அப்பர் பெருமான் கயிலாயத் திருக்காட்சி
திரு ஐயாறு



















 நன்றி
சிவகண திருக்கூட்டம்
திரு ஐயாறு..


வானுற்ற மாமலைகள் ஆனாய் நீயே
வடகயிலை மன்னி இருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அடியான் என்றடி என்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மடவாள் பங்கன் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.  6/38/4 

எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம்  மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.  6/38/7
-: திருநாவுக்கரசர் :-

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. தொடர்ந்து வந்த ஆடி அமாவாசை நிகழ்வின் படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஓம் நமசிவாய.

    திரு ஐயாறு செம்பொற்சோதி பாதம் பணிந்து நிற்போம்.

    அவனருள் அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. பாசுரங்கள் அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள். ஆனால் தேவையான இடத்தில் பதம் பிரித்துப் போடுவது படிக்கும் ரசனையை அதிகரிக்கும்.
    ஒளிமதியோடு அரவு புனல் வைத்தாய், அடியான் என்று அடி என்பேல் வைத்தாய், புகழ் சேவடி என்மேல் (ஆமாம் புகழ்ச் என்று அங்கு ச் வருமா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இந்தத் திருப் பாடல்கள் ஒரு சில மனப்பாடம்...

      ஆதீன திருமுறைப் பதிப்பில் புகழ்ச்சேவடி என்று தான் இருக்கின்றது...

      தெளிவு கேட்பதற்கு
      தமிழ் அறிந்த ஆசிரியர் எவரும்
      அருகில்இலர்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      நன்றி நெல்லை..

      நீக்கு
  4. ஆடி அமாவாசை - படங்கள் அனைத்தும் நன்று. பலர் வீணையுடன் அமர்ந்திருக்கும் காட்சி - மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  5. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  6. திரு ஐயாறு ஆடி அமாவாசை விழா படங்கள் , காணொளி மிக அருமை. அப்பர் பதிகங்களை பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி ..

      நலம் வாழ்க

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..