நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 04, 2015

விவேகானந்தர்

கல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா - புவனேஸ்வரி தேவி தம்பதியர்க்குத் திருமகனாக - 1863 ஜனவரி பன்னிரண்டாம் நாள் பிறந்தவர்.

பெற்றோர் சூட்டிய திருப்பெயர் - நரேந்திர நாத்.


இறை தேடலில் தீராத தாகத்துடன் இருந்த நரேந்திரன் - 1881ல்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார்.

அவரிடமிருந்து ஞானோபதேசம் பெற்றார்..

பாரதத்தின் தெற்கு முனையில் கன்யாகுமரி அம்மனைத் தரிசித்து விட்டு -


1892 டிசம்பர் - 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களும் கடற்பாறையின் மீது தவம் இருந்தார்.

1893 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டார்.

சிகாகோ மாநாட்டில் ஸ்வாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பிய ஸ்வாமிகளுக்கு - பாம்பன் கடற்கரையில் - ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வெகு சிறப்பாக வரவேற்பளித்து மகிழ்ந்தார்.

ஸ்வாமி விவேகானந்தர் என சிறப்புடன் அழைத்தவர் கேத்ரி மன்னர்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என அறிவுரை வழங்கிய விவேகானந்தர் 1897 மே மாதம் முதல் தேதி இராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.


மனிதர்கள் இயல்பிலேயே தெய்வீகமானவர்கள்.. அவர்களிடமிருந்து தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மனித வாழ்வின் சாரம் - என்பதை வலியுறுத்திய ஸ்வாமிகள் 1902 ஜூலை மாதம் நான்காம் நாள் - இரவு ஒன்பது மணியளவில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

மனிதகுலம் மேன்மையுறுவதற்கு ஸ்வாமிகள் அருளிய பொன்மொழிகளுடன் இன்றைய பதிவினை ஸ்வாமிகளின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்..
* * *.


நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்.
நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாக ஆகின்றாய்.
நீ உன்னை வலிமையானவன் என நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்..

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
நீ உன்னைப் பலவீனன் என்று ஒருபோதும் சொல்லாதே.
எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு.
பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா?.. நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.


மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.
மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். 
தங்கள் சமயமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற சமயங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.
பணி செய்.. அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே.. மக்களுக்கு உழைக்கும் பணியே தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டு. 
இறைவனே இன்று உலகமாகப் பரந்து விரிந்து நிற்கின்றான்.
  கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். 
அதுவும் ஒழுக்கத்தோடு பணி செய். 
ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. 
அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.


இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் தான் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.
மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.
மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?..
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.


பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை.
நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். 
பல மணி நேரம் தொடர்ந்து மேடையில் பேசலாம். 
ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையான கல்வி.
அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். 
ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு.
நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். 
அறியாமையில் உள்ளவனுக்கு முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதையே உனது கடமையாகக் கொள்.
இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவனே ஆத்திகன்.
வீரத்துறவி விவேகானந்தர் புகழ் வாழ்க!..  
* * *

28 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் ஜி..

   நலம் தானே!..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி,,

   நீக்கு
 2. ஒவ்வொரு வரியும் பொக்கிச வரிகள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. விவேகானந்தரின் நினைவினைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 4. விவேகாநந்தர் ஒரு மதவாதியாகச் செயல் படவில்லை, அவர் நினைவைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   சமய நெறிகள் பலவற்றையும் விவரித்தாலும் -
   விவேகானந்தர் மதவாதியாக செயல்படவில்லை..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 5. Aya vanakam eluche mika eluthu. america sentra aandu 1983 padivil iruku aya. c

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   கவனக்குறைவு.. பிழை திருத்தப்பட்டது..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. விவேகானந்தருக்கு நல்ல புகழஞ்சலி. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 7. நற்குணங்களை நல்கும் நல்ல பதிவு விவேகநாதர் புகழ் ஓங்கட்டும் மிக்க நன்றி அவர் பற்றி அறியத் தந்தமைக்கு தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. அருமையான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. வணக்கம்,
  நலமா?
  மதம் தாண்டி மனிதம் வளர்த்த ஒரு உண்மையாளரின் பதிவு,
  அருமையான செய்திகளைத் தொகுத்துள்ளீர்,
  ஊர் பயணம் சென்றதால் உடன் கருத்திட இயலவில்லை, ஆனால் முன்பே படித்துவிட்டேன், அருமை,
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. வருக..
   நலம்.. நலமே!.. அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 11. விவேகானந்தரைப் பற்றி பகிர்ந்ததற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 13. மிக மிக அருமையான கட்டுரை விவேகானந்தரின் மொழிகளை இங்கு பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி! ..இந்து மதத்தைப் பற்றி சிக்காகோவில் பேசியவர், அதன் புனிதத்துவத்தை எடுத்துரைத்தவர்..ஆனால் மதப்பற்று அற்றவர்.....எவ்வளவு பெரிய குரு. !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   பரமஹம்சரின் முதன்மைச் சீடர். ஆனாலும் பணிவின் சிகரம்..
   ஸ்வாமிகளைப் பற்றிய பதிவில் - தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 14. விவேகானந்தர் பற்றியும் அவர் பொன்மொழிகள் பற்றியும் விரிவாக அறிந்து கொண்டேன். சிறப்பான பொன்மொழிகள்! பகிர்வுக்கு நன்றி சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி நன்றி...

   நீக்கு