நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2024

கயிலை தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 19 
ஞாயிற்றுக்கிழமை


சிவ தரிசனம் வேண்டி கயிலை மாமலைக்குப் புறப்பட்ட அப்பர் ஸ்வாமிகள் நடைவழியில் படாதபாடுபட்டார்.. 

நடந்து சென்றவர் ஒருநிலையில் தவழ்ந்து செல்ல - அதுவும் கூடாமல் அவரது கால் எலும்புகள் முறிந்தன.. 

மனம் தளராமல்
ஊர்ந்து சென்றார்.. விலா எலும்புகளும் நொறுங்கின.. 

அதற்கு மேல் ஏதும் செய்வதற்கு இயலாத அவரை  - தன்னை ஒளித்து வந்த தற்பரன் மானஸரோருவ தீர்த்தத்தில் மூழ்கி எழுமாறு பணித்தனன்.. 

அந்த அளவில் மானஸரோருவ தடாகத்தில் மூழ்கிய  நாவுக்கரசர் திரு ஐயாற்றில் கரையேறினார்.. 


அந்த மாத்திரத்தில் பல்லுயிர்த் திரளின் வடிவாக  எம்பெருமானும் அம்பிகையும் திருக்கோலக் காட்சி நல்கியருளினர்..

அந்நிகழ்வு ஆடி அமாவாசை என்பதாக ஐதீகம்..

இந்நாளில் நாமும் திருக் கயிலாய தரிசனத்தை சிந்தித்திருப்போம்..


 நான்காம் திருமுறை
மூன்றாம் திருப்பதிகம்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
  மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
  புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
  ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங்
  களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதங்
கண்டறியாதன கண்டேன்..  1


ஏடு மதிக்கண்ணி யானை 
  ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் 
  கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற 
  ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் 
  பிணைந்து வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதங்
கண்டறியாதன கண்டேன்..  5


தண்மதிக் கண்ணியி னானைத் 
  தையல்நல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி 
  உணரா உருகா வருவேன்
அண்ணல்  அமர்ந்துறை கின்ற 
  ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி 
  வைகி வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதங்
கண்டறியாதன கண்டேன்..  6


வளர்மதிக் கண்ணியி னானை 
  வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங் 
  காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோர் அன்போடு 
  ஐயா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி 
  ஏறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதங்
கண்டறியாதன கண்டேன்.. 11

திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. திருக்கயிலாயப் படம் மிகச் சிறப்பு.

    அப்பர் பெருமான் என்றதும் எனக்கு சிவாஜி கணேசனே நினைவுக்கு வருகிறார். அப்படிப்பட்ட சரீரத்தைக் கொண்டு கயிலாய மலைப் பகுதியில் எப்படிச் செல்லமுடியும் என்றே தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  2. கயிலாயம் செல்லும் கனவு எனக்கும் உண்டு. இனி எங்கே இயலப் போகிறது? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லட்ச ரூபாய்க்கு மேல் அதற்கு ஆகும். நீங்கள் செல்லுவதானால் சொல்லுங்கள், நானும் வருகிறேன் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. எல்லாம் அவனருள்...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருநாவுக்கரசரின் கயிலை யாத்திரையும் ஐயாரப்பர் தரிசனமும் கண்டு வணங்கினோம்.

    திரூக்கைலாய தரிசனமும் கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
  4. திருக்கயிலை தரிசனம். மகிழ்ச்சி. இறைவனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்க எனது பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..