நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 17, 2024

ஆவணி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி முதல் நாள்
சனிக்கிழமை


ஆவணி மாதம்...

கால கதியில் ஐந்தாவது மாதம்..
சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கின்ற காலமே ஆவணி மாதம்.. சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்..



சூரியனுக்கு அதிபதி ஸ்ரீ பரமேஸ்வரன்.. எனவே இவ்வகையில் சிவ வழிபாட்டிற்கு இம்மாதம் உகந்தது..


ஆனிக்குப் பிறகு புதுமனை கூடுகின்ற மங்கல முகூர்த்தங்கள் நிறைந்து வருகின்ற மாதம்..


ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமை சூரிய வழிபாட்டுக்கு உகந்தது..இது

சூரியன் சிம்ம ராசியில் பயணிப்பதால் கேரளத்தில் இதுவே முதல் மாதம்.. இதற்கு சிங்க மாதம் என்று பெயர்.. 


ஸ்ரீ விநாயக சதுர்த்தியும் 


ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தியும் 
இந்த மாதத்தில் தான்..


அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைய,  ஆலகாலம் என்னும் கொடிய நஞ்சு தோன்றியதும்  ஈசன் எம்பெருமான் அதனைத் தான்  அருந்தி அண்ட சராசரங்களைக் காத்து அருளியது இந்த மாதத்தில் தான்..


சிறப்பு மிகு வாமன அவதாரமும் திரு ஓண வைபவமும் இந்த மாதத்தில் தான்..

மதுரையம்பதியில் ஆவணிப் பெருந்திருவிழா..

நரிகளைப் பரியாக்கி மன்னனிடம் ஒப்படைக்கப்பட்ட நாள் ஆவணி மூலம்..


மதுரையில் வைகை மாநதி மாணிக்க வாசகருக்காக பெருகி வந்ததும் கூலியாள் என சொக்கேசர் வந்து வந்தியம்மையிடம் பிட்டு உண்டதும் இம்மாதத்தில் தான்..

ஆவணி மூலம்,  ஆவணி அவிட்டம் என விசேஷங்கள்..




திருமண முகூர்த்தங்களும் விருந்துகளும்
புதுமனை புகும் விழாக்களும் இந்த மாதத்தின்  சிறப்புகள்..


இன்று சனி ப்ரதோஷம்.

ஆவணியை மகிழ்வுடன் வரவேற்போம்.. 

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. ஆவணி மாதத்தின் சிறப்புகள் பற்றி சொல்லி இருப்பது சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஆவணி மாத சிறப்புகள் குறித்த தகவல்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  3. ஆவணி மாதத்தின்சிறப்புகள் கண்டோம்.
    "சிவவழிபாட்டுக்கும் உகந்தமாதம் " என்பது அறிந்தோம்.
    ஆவணி விநாயக சதுர்த்தி எமது விநாயகர் திருவிழா எமது அப்பா பரம்பரையினரது.இப்பொழுது எனது அண்ணாக்கள் செய்கிறார்கள்.

    ஆவணியை வரவேற்போம் அனைத்து நலனும் வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..