நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 29, 2024

உவரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 13
வியாழக்கிழமை


திருநாவுக்கரசர் 
அருளிச் செய்த திருப்பதிகம்

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 11
பொது

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே.. 1

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமசிவாயவே.. 2


விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமசிவாயவே.. 3

இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளி நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமசிவாயவே.. 4

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமசிவாயவே.. 5

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்குவான் நலன்
குலமிலர் ஆகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமசிவாயவே.. 6

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமசிவாயவே.. 7

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே.. 8


முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசரண் ஆதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமசிவாயவே.. 9

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நம சிவாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு இடுக்கண் இல்லையே.. 10

திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. காதலாகிக் கசிந்துகண்ணீர்மல்கி 
    ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது 
    வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது 
    நாதன் நாமம் நமச்சி வாயவே.

    பதிலளிநீக்கு
  2. உவரி தரிசனம் கண்டேன். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. அண்ணா உங்க ஊர்ப்பக்கம் போயிருக்கீங்களோ!

    உவரி பல வருஷங்கள் ஆச்சு பார்த்து. கடலும் கடல் சார்ந்த அந்த இடமும் ஆக இருக்கும் அந்தப் புகைப்படம் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ".....சோதிவானவன்.... அனைவர் நலனுக்கும் .அவனருளை வேண்டுவோம்

    .ஓம்நமசிவாய.

    பதிலளிநீக்கு
  5. ".....சோதிவானவன்.... அனைவர் நலனுக்கும் .அவனருளை வேண்டுவோம்

    .ஓம்நமசிவாய.

    பதிலளிநீக்கு
  6. உவரி கோவில் படங்கள் அருமை.
    திருப்பதிகத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..