நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 20
ஞாயிற்றுக்கிழமை
திரு ஐயாறு
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரம்
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய
ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவினை முன்னிட்டு நாளும்
யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி, மகா தீபாராதனை , ஷோடச உபச்சாரம் , வேத திருமுறை பாராயணம் இவற்றுடன் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காட்சிகள்..
பதிவில் நான்காம் கால பூஜை தரிசனம்
நெஞ்சார்ந்த நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்
**
நோக்கரிய திருமேனி உடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாகம் ஆர்த்தாய் நீயே
அடியான் என் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ. 6/38/2
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
அருமை. திரு ஐயாறப்பர் அருள்வேண்டி பணிகிறேன்.
பதிலளிநீக்குஐயாறப்பர் திருவடிகள் போற்றி..
நீக்குஅனைத்துப் படங்களும் அருமை. அந்த அக்னியில் தெரிவது அக்னியின்மேல் ஆஞ்சநேயர் நின்று, நிமிர்ந்து சங்கு ஊதுவது போல எனக்கு தோற்றம் கொடுக்கிறது.
பதிலளிநீக்குஎனக்கும் அப்படித் தான் தோன்றியது..
நீக்குநல்ல அட்வான்ஸாகவே அங்கு சென்று இடம்பிடித்து விட்டீர்கள் போல. தனியாகவா, துணைவியாருடனா?
பதிலளிநீக்குதிருக்கோயிலுக்கு இரண்டாம் வெள்ளியன்று சென்றதோடு சரி..
நீக்குயாகசாலையைத் தரிசிக்கும் பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை.. படங்கள் ஆதீனச் செய்தியாளர்களால் இணையச் செய்தியில் வெளியிடப்பட்டவை..
தங்கள் அன்பினுக்கு நன்றி.
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்