நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 24, 2025

மசாலா போண்டா

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 12
திங்கட்கிழமை

இன்று
 மசாலா போண்டா


தேவையானவை

உருளைக் கிழங்கு  500 gr
பெரிய வெங்காயம் 2
கடலை மாவு  250 gr
அரிசி மாவு  2 tbl sp
பெருங்காயத்தூள் கால் tbl sp
மிளகுத்தூள் ஒரு tbl sp
பட்டைத்தூள் ஒரு tbl sp
 கடலெண்ணெய் தேவையான அளவு
கல்உப்பு தேவைக்கு

செய்முறை:  

கிழங்கை நன்கு வேகவிட்டு தோலை நீக்கி, நன்றாக மசிக்கவும்.. 

வெங்காயத்தை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்..

அரிசி மாவு, கடலை மாவைச் சேர்த்து மிதமாகக் கரைத்து தனியே வைத்துக் கொள்ளவும். 

வெங்காயம், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், பெருங்காயத் தூள், உப்பு  சேர்த்து இரும்பு வாணலியில் வதக்கி -

மசித்து வைத்திருக்கும்  கிழங்கையும் சேர்த்து நன்றாகப்  பிசைந்து மீண்டும் இளம் சூட்டில் வதக்கிக் கொள்ளவும்..

கலவை ஆறியதும் 
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கடலை மாவில் தோய்த்து - வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் -  உருண்டைகளைப் போட்டு சிவக்க விட்டு அரி கரண்டியால் அரித்து எடுக்கவும்..


ஒவ்வொன்றும்
50 கிராம் அளவுக்கு
 உருட்டி எடுத்தால் 12 அல்லது 13 போண்டாக்கள் கிடைக்கலாம்.. 

வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிடும் போது துணைக்கு
தேங்காய் சட்னி நல்லது..

இந்த அளவில்
சமையல் வாரம் 
நிறைவடைகின்றது.

நமது நலம் 
நமது சமையல்..
**

ஓம் 
சிவாய நம ஓம்
**

3 கருத்துகள்:

  1. சமையல் வாரத்தை சிறப்பான டிஷுடன் நிறைவு செய்து விட்டீர்கள்.  சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. இதையும், இன்னும் பணியாரம், வெள்ளை அப்பம் போன்றவற்றையும் பல வருடங்களுக்கு முன் சனிக்கிழமைகளில் செய்து சாப்பிட்டு வந்தோம்.  குழந்தைகளும் பெரியவர்களானதும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வழக்கம் நின்று விட்டது!

    பதிலளிநீக்கு
  3. உளுந்து ஊறவைத்து அரைத்து அதிலும் இதுமாதிரி உருளைக்கிழங்கு கலவையை முக்கி போட்டு எடுத்த நினைவு.  மைசூர் போண்டா?

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..