நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 21, 2025

நெய் அப்பம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 9
வெள்ளிக்கிழமை

இன்று
நெய் அப்பம்


ஸ்ரீ விநாயகருக்கான நிவேதனமாக திருப்புகழில் சொல்லப்படுவது..

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு செய்முறைகள் இந்த அப்பத்திற்கு..

தேவையானவை

பச்சரிசி மாவு ஒரு பங்கு
பழுப்புச் சர்க்கரை முக்கால் பங்கு 
கோதுமை மாவு  அரை பங்கு
ரவா கால் பங்கு
நெய் 2 Tbsp

எண்ணெய்  தேவைக்கு 
(உப்பு உங்கள் விருப்பம் )

செய்முறை

பச்சரிசியை மட்டும் நீரில் அலசி ஐந்து நிமிடம் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி மாவாக அரைத்துக் கொள்ளவும்..

பச்சரிசி மாவு, கோதுமை மாவு, ரவா, சர்க்கரை, நெய் - 
அனைத்தையும்  
ஒன்றாகக் கலந்து வெதுவெதுப்பான நீரில் தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்..

வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் சற்று  அகலமான கரண்டியால் மாவை எடுத்து சூடான எண்ணெயில் கவனத்துடன்  ஊற்றவும். தொடர்ந்து மாவு ஊற்றுவதை  நிதானமாகச் செய்யவும்..

ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு - சொட சொடப்பு அடங்கியதும்
எடுக்கவும்..

குறிப்பு

பச்சரிசியை நாமே நம் வீட்டில் 
சுத்தம் செய்து -
மாவாக்கிக் கொள்வது சாலச்  சிறந்தது..

மாவு  கரைத்ததும் பத்து நிமிடங்களில் செய்து விடவும்.. மாவு புளித்து விடக் கூடாது.. 

நெய் அப்பம் - மங்கல மரபு..  செவ்வாய்
வெள்ளிக் கிழமைகளில் நிவேதனத்துக்கு ஏற்றது..

சில சமுதாய மரபில் கோயில்களில் நெய் அப்பம் எண்ணிக்கை கணக்கில் நேர்ந்து கொள்ளப்படுகின்றது..

நமது நலம்
நமது கையில்..
**
ஓம் 
சிவாய நம ஓம்
**

12 கருத்துகள்:

  1. அருமை. அதிகமாக வீட்டில் செய்வதில்லை. விசேஷ நாட்கள் ஒன்றிரண்டில் மட்டும் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சிறப்புத் தின்பண்டம்..

      தங்கள் அன்பினுக்கு நன்றி.
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. கடைகளில் பாக்கெட் போட்டு விற்பதைப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் கடைகளில் வாங்கியதில்லை.

    பதிலளிநீக்கு
  3. சுவையான குறிப்பு. விசேஷ நாட்களில் செய்வதுண்டு. அதிகம் சாப்பிட முடியாது என்றாலும் பிடித்த உணவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நன்றி.
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்

      நீக்கு
  4. நெய் அப்பம் நன்றாக உள்ளது.
    இது போல்தான் அரியதரம் என்று நாங்கள் செய்வோம். சீனிப்பாணியை மாவில் ஊற்றிக் கலந்து இலையில் தட்டி பொரிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் இன்னொரு பெயர் அரியதரம்..

      தங்கள்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நெய் அப்பம் செய்முறை நன்று. உங்கள் பக்குவ குறிப்புக்கள் நன்றாக உள்ளது. நாங்கள் திருக்கார்த்திகைக்கு மட்டும் வடையுடன் இந்த நெய் அப்பம் செய்வோம். எண்ணெய்யில் விட்டு பொரித்தெடுத்தால் எண்ணெய் அதிகமாக இழுக்கும் என்பதினால், அப்பங்காரத்தில் செய்வோம். ஆயினும் எண்ணெய்யில் பொரித்தெடுப்ப்பது ருசியாக. இருக்கும். தங்கள் செய்முறை குறிப்புக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எண்ணெய் அதிகம் இழுக்காது..

      தங்கள் அன்பினுக்கு நன்றி.
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..