நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 05, 2025

கவினார் வீதி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 23 
புதன்கிழமை


காலையில் திருக்குட முழுக்கினைத் தொடர்ந்து
மாலைப் பொழுதில் திருமுறைப் பாராயணமும் இசை  மற்றும் நாட்டிய 
நிகழ்வுகளும் பஞ்சமூர்த்தி திருவீதி எழுந்தருளலும்
நிகழ்ந்தன...

படக் காட்சிகளுக்கு நன்றி
தருமபுர ஆதீனத்தார்

ஸ்ரீ கயிலாயநாதர்

ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள்









வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் 
  நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த 
  புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் 
  பண்பாடக் கவினார் வீதித்
தேம் தாம் என்றரங் கேறிச் சேயிழையார் 
  நடமாடுந் திருவையாறே. 1/130/6
-: திருஞானசம்பந்தர் :-  

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

1 கருத்து:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..