நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஐயாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐயாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 15, 2025

சப்தஸ்தானம் 2

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி முதல் நாள் 
வியாழக்கிழமை

நேற்றைய பதிவின்
தொடர்ச்சி

அனைத்து பலலக்குகளும்
திரு ஐயாற்றை வந்தடைந்ததும் திரு வீதியுலா...

சிவகயிலாய முழக்கத்துடன் பண்டரங்கக் கூத்து..

மகாதீப ஆராதனை நிகழ்ந்ததும் பல்லக்குகள் அவரவர் ஆலயங்களுக்குப்
 புறப்பட்டன..





















விண்டார் புரமூன்றும் எய்தாய் நீயே
விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்தோள் விட் டெரியாடல் உகந்தாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ. 6/38/10 
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

சனி, மே 10, 2025

ஐயாற்றில்...

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 27
சனிக்கிழமை

திரு ஐயாற்றில் கடந்த ஒன்பது நாட்களாக நிகழ்ந்து வருகின்ற சித்திரைப் பெரு விழாவின் தரிசனம்..

வெள்ளியன்று திருத்தேர்..
























 நன்றி 
காவிரிக் கோட்டம்

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.  6/38/1
- திருநாவுக்கரசர் -

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், மார்ச் 26, 2025

ஐயாறு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 12
 புதன் கிழமை



திருக்குடமுழுக்கு நடந்து
ஒரு மண்டலம் ஆகி விட்டது.. 

கடந்த ஞாயிறன்று ஐயாறு ஸ்ரீ பஞ்ச நதீஸ்வரத்தில் நிகழ்ந்த மண்டலாபிஷேகக் காட்சிகள்..











 நீரோடு கூவிளமும் நிலாமதியும் 
  வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த 
  தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் 
  பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் 
  நடம்பயிலும் திரு ஐயாறே.. 1/130/5 
-: திருஞானசம்பந்தர் :-

நன்றி ஆதீனத்தார்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**