நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 24
வியாழக்கிழமை
திரு ஐயாறு குடமுழுக்கு விழாவின் முதல் நாள் இரவு ஏழாம் கால யாக பூஜை தரிசனத்தின் போது அங்கிருந்த மக்கள் திரளைக் கண்டு பதற்றமாகவே இருந்தது..
நாளை காலையில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்குமே.. - என்று நினைத்த
போதிலும்,
எவ்வித இன்னலும் இன்றி தெற்கு ராஜ கோபுரத்தின் -
ஸ்ரீ ஆட்கொண்டார் சந்நிதியின் முன் இருந்து வைபவத்தைக் கண்டு மகிழும் பேற்றினை அடியேனுக்கு அருளினார் ஐயாறப்பர்..
ஸ்ரீ ஆட்கொண்டார் சந்நிதியின் முன் இருந்து வைபவத்தைக் கண்டு மகிழும் பேற்றினை அடியேனுக்கு அருளினார் ஐயாறப்பர்..
குடமுழுக்கு விழா நிறைவுற்று ஒன்றரை மணி நேரம் கழித்து ஸ்வாமி தரிசனத்திற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பக்தர்கள்..
நான்காம் திருச்சுற்றில் தென் கயிலாயம் வட கயிலாயம் ஆகிய சந்நிதிகளை வலம் செய்து வணங்கி விட்டு வந்தபோதும் மூன்றாம் திருச்சுற்றில் பக்தர் திரள் .. தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால் நெரிசல் இல்லை..
ஆனாலும் தரிசனத்திற்கு நேரம் ஆகலாம் என்ற சூழ்நிலை.. எனவே, அடுத்த நாளில் தரிசித்துக் கொள்ளலாம் - என இல்லம் திரும்பினோம்..
திருக்கோயிலை
வலம் செய்த போது
நான் எடுத்த சில காட்சிகள்..
கிழக்கு முன் மண்டபத்தின் சித்திரங்கள்..
அனைத்தும்
அம்மையப்பனின் அருள்..
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்
கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல
வயல்படியுந் திருவையாறே. 1/130/8
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..