நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 19
சனிக்கிழமை
ஆலய கும்பாபிஷேக
அழைப்பிதழ்
பூலோக கயிலாயம்..
காசியம்பதிக்கு நிகரான தலங்களுள் ஒன்று
பஞ்சநதிகளின் ஷேத்திரம்..
காவிரியின் வடகரைத் திருத்தலம்,.
தெற்கில் ( தஞ்சாவூரில் இருந்து) இவ்வூருக்குள் நுழைவதற்குள் ஐந்து ஆறுகளைக் கடந்திருப்போம்.,
இந்த வரப்ரசாதம் வேறு வேறு திசைகளில் இருந்து திரு ஐயாற்றுக்குள் வருகின்ற போது கிடைப்பதில்லை..
திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் திருப்பதிகங்கள் பெற்றிருக்கின்ற இத்தலத்தை மணிவாசகப் பெருமானும் திருவாசகத்தில் பாடிப் பரவிப் போற்றுகின்றார்..
சித்திரை நிறைநிலா நாளை அடுத்து வருகின்ற விசாகத்தன்று கண்ணாடிப் பல்லக்கில் ஐயாறப்பர் ஸ்வாமி அறம் வளர்த்த நாயகியும் எழுந்தருளி முன் செல்லவும் நந்தியம்பெருமான் சுயம்பிரகாஷிணி தேவியுடன்
வெட்டி வேர் பல்லக்கில் பின் தொடரவும் இரு பல்லக்குகளும் திருப்பழனம்
திருச்சோற்றுத்துறை திருவேதிக்குடி திருக்கண்டியூர் திருப்பூந்துருத்தி திருந்நெய்த்தானம் ஆகிய திருத்தலங்களின் பல்லக்குகளுடன் சப்த ஸ்தானம் என்கிற பெருவிழா காண்கின்ற திருத்தலம் ..
தெற்கு வாசலில் ஸ்ரீ ஆட்கொண்டார் சந்நதி..
திண்டி எனப்படும் இவர் துவார பாலகர்.. ஏழைச் சிறுவன் ஒருவனைத் துரத்தி வந்த யமனை ருத்ராவேசம் கொண்டு விரட்டியதால் சிவாம்சம் பெற்றதாக ஐதீகம்..
இவருக்கு முன்பாக நந்தியம்பெருமான் சேவை சாதிக்கின்றார்...
திருக்கோயிலினுள் செல்லும் முன் இவரை வணங்கிச் செல்வதே மரபு..
நோய் விபத்துகளைத் தடுத்து யம பயம் தீர்ப்பவர் ஸ்ரீ ஆட்கொண்டார்..
இவரது சந்நிதிக்கு எதிரில் குங்குலியக் குண்டம்.. இதனை அமைத்தவர் நாயன்மார்களுள் ஒருவரான திருக்கடவூர் கலிய நாயனார்..
இதனாலேயே அவர் குங்கிலியக் கலய நாயனார் எனப்பட்டார்..
ஸ்ரீ ஆட்கொண்டார் திருவுருவத்துடன் அழைப்பிதழ் திகழ்கின்றது..
அனைவரும் வருக
இறையருள் பெறுக
**
பத்தர்கட் கருளும் வைத்தார்
பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்
சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்
முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்
ஐயன் ஐயாறனாரே. 4/38/7
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
திருமுழுக்கு பற்றிய தகவல்கள் சிறப்பு. ஏற்கெனவேயும் சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதிரு ஐயாறப்பனை பணிந்து வணங்கிக் கொள்கிறேன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. திருவையாறு கும்பாபிஷேக அழைப்பிதழ் சிறப்பாக உள்ளது. பக்தியுடன் பெற்றுக் கொண்டேன். ஸ்ரீ ஆட்கொண்டார் புராண வரலாறும் தெரிந்து கொண்டேன். அனைவரையும் ஐயன் ஐயாரப்பரும், அன்னை அறம் வளர்த்த நாயகியும், நலமுடன் காத்தருள வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.