நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 22
செவ்வாய்க்கிழமை
நேற்று காலை 9:30 மணியளவில் திரு ஐயாறு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ பஞ்சநதீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலின் திருக் குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது..
பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்டு இன்புற்றனர்..
எவ்வித இன்னலும் இன்றி தெற்கு ராஜ கோபுரத்தின் வைபவத்தைக் கண்டு மகிழும் பேற்றினை அடியேனுக்கு அருளினார் ஐயாறப்பர்..
கீழுள்ள காட்சிகளுக்கு நன்றி
தருமபுர ஆதீனத்தார்
எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/7
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
கொடுத்து வைத்திருக்க வேண்டும். அருமையான படங்கள். படங்கள் மூலமாக அந்தத் திருக்காட்சி எங்களுக்கும் காணக் கிடைத்தது. நன்றி.
பதிலளிநீக்குசிறப்பு.
பதிலளிநீக்குஅனைவருக்கும் நல்லதே நடக்க எம்பெருமான் துணை புரியட்டும்.
நல்லதே நடக்கட்டும்...
பதிலளிநீக்குதிரு ஐயாறு இறைவனை வணங்கி கொண்டேன் பாடலை பாடி.
பதிலளிநீக்குகும்பாபிஷேகம் நீங்கள் கண்டு வந்தது மகிழ்ச்சி.
படங்கள் அருமை.