நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 22, 2024

மாத்ருஸ்ரீ..

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 9
திங்கட்கிழமை


மாத்ரு ஶ்ரீ வேங்கமாம்பாள்..

இவரே திருமலையில் முதன்முதலில் அன்னதானத்தைத் தொடங்கியவர்..

இவரது காலம் 1730 - 1817..

ஆந்திர மாநிலத்தின் தரி கொண்டா கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மங்கமாம்பா எனும் தம்பதியர்க்குப் பிறந்தவர்..

இளம் வயதிலே திருமணக் கோலம் கண்டு கணவரை இழந்த இவர் வேங்கடேசப் பெருமாள் மீது பக்தியுடன் பல நூறு  பாடல்களை இயற்றியதுடன் பெருமாளைத் தரிசிப்பதற்கு வருகின்ற அடியார்களுக்கு நீரும் சோறும் வழங்க ஆசைப்பட்டார்..

செல்வந்தர்களிடம் நன்கொடைகள் பெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்...

திருமலை வேங்கடவனையே தன்னுடைய கணவனாகக் கொண்டதால் இவர் இறுதி வரை மங்கல சின்னங்களுடன் வாழ்ந்ததாக அறிய முடிகின்றது..

இன்றும் கோயில் நடை அடைக்கப்படும் முன்  இவரது கீர்த்தனைகள் இணைக்கப்படுகின்றன..

பெருமாளுக்கான உபசாரங்களில்  நிறைவாக செய்யப்படும் கற்பூர ஆரத்திக்கு வேங்கமாம்பா ஆரத்தி என்றே பெயர்..

இந்தப் புண்ணியவதி தொடங்கியதே இருநூற்று ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகின்ற அன்னதானம்..

இந்நாட்டிற்குள் அந்நியர் புகுந்து தாக்கிக் கொள்ளையடித்த - காலங்கள் கடந்து போக, இன்றுவரை 
அன்னதானம் சிறப்புடன் நிகழ்கின்றது..
 
பொருள் உடையோரிடம் நன்கொடைகள் பெற்று மாத்ரு ஸ்ரீ பக்தர்களுக்கு வழங்கிய அன்னதானமே இன்று விரிவடைந்து விளங்குகின்றது..

 நன்றி ஸ்ரீவாரி
திருமலையில் மாடவீதிக்கு அருகிலுள்ள இவரது பிருந்தாவன வளாகத்தை  உயர்நிலைப் பள்ளியாக திருமலை  நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.. ஆயினும் வேங்கமாம்பாளின் பிருந்தாவனத்திற்கு  அடியார்கள் எப்போதும் அனுமதிக்கப்படுகின்றனர் என்கின்றது விக்கி... 

1985 - ல் இரண்டாயிரம் பேர் சாப்பிடும் அளவில் கட்டப்பட்ட இந்த அன்னதானக் கூடம் இன்று ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிடும் விதமாக நான்கு  கூடங்களாக விரிவடைந்து உள்ளது..

இங்கு நாளொன்றுக்கு அறுபதாயிரம் பேர் வரை சாப்பிடுகின்றனர் என்று சொல்கின்றார்கள்..

நன்றி ஸ்ரீவாரி
ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி அனைவரும் அமர்ந்து வயிறார சாப்பிடுகின்றனர்..

நன்றி ஸ்ரீவாரி
திருமலையில் தங்கும் இடம், முடி காணிக்கை, உணவு என எல்லாவற்றையும் கட்டணம் இன்றி வழங்கச் செய்தவர் - 


அன்றைய ஆந்திர மாநிலத்தின் முதல்வர் திரு. N.T.ராமராவ் அவர்கள்..

நடுத்தர மக்களுக்குத் திருமலையில் இப்படியான நன்மைகளைச் செய்து தந்த நல்லோர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்..


ஓம் ஹரி ஓம் 
நமோ வேங்கடேசாய
***

5 கருத்துகள்:

  1. அரிய தகவல்கள்.  எல்லாவற்றையுமே காசாக்கப் பார்க்கும் கூட்டத்துக்கு நடுவே இப்படியும் சிலர்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மாத்ரு ஶ்ரீ வேங்கமாம்பாள் கடவுளின் முழு அனுக்கிரஹம் பெற்ற மனிதர்களில் ஒருவர். அவரைப்பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன்.

    அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் படத்திலும் இவரது பாத்திரத்திற்கு ஒரு முக்கியத்துவம் தந்திருப்பார்கள் என நினைக்கிறேன். பாலாஜியை தரிசித்துக் கொண்டேன். திருப்பதி பாலாஜியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. தகவல்கள் பிரமிக்க வைத்தது ஜி

    பதிலளிநீக்கு
  4. மாத்ரு ஸ்ரீ வேங்கமாம்பாள் பற்றி ஒரு, தெலுங்கு சினிமாவில் பார்த்து இருக்கிறேன், அவர்களை பற்றிய விவரங்கள் அருமை.
    ஒரு முறை அன்னதான உணவு சாப்பிட்டோம்.

    திருமலை அப்பன் அனைவரையும் காக்க வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. மாத்ரூ ஸ்ரீ வேங்கம்மாள் அவர்களின் போற்றுதற்கரிய பணி இப்பொழூதுதான் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..