நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 10, 2018

திரு ஆக்கும் கை

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை..
-: கபில தேவர் :-


திரு ஆக்கும் கை... செய் கருமம் கைகூட்டும் கை..
செஞ்சொல்லைப் பெருக்கும் கை.. பெருவாக்கை அளிக்கும் கை..
பீடும் பெருக்கும் உருவாக்கும் கை..
வானோரும் வந்து நின்று கை வணங்கிடும் கை!...

அந்தக் கை ஆனை முகத்தானின் அழகு தும்பிக்கை....
அது மானிடர்க்கு அளித்திடுமே நம்பிக்கை!...

நம்பிக்கை கொண்டார்க்கும் 
நம்பி கைக் கொண்டார்க்கும்
நாளும் நலம் நல்கிடுமே 
நாயகனின் தும்பிக்கை!..



பிள்ளையார் சதுர்த்திப் பெருவிழாக்கள் 
நடந்து கொண்டிருக்கும் வேளையில்
இன்றைய பதிவு
பழம்பாடல் ஒன்றுடன்
திருக்கோயில் நிகழ்வுகளைத் 
தாங்கி வருகின்றது...
* * *

திருவிழா நிகழ்வுகளின் திருக்காட்சிகளை வழங்கிய
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
மனமார்ந்த நன்றி.. 

பிள்ளையார்பட்டி 
பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்..
பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்..

பிள்ளையார்பட்டி 
ஆற்றங்கரை மீதிலே
அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்...

மஞ்சளிலே செய்யினும்
மண்ணினாலே செய்யினும்
ஐஞ்செழுத்து மந்திரத்தை
நெஞ்சில் கூட்டும் பிள்ளையார்...

கணபதி அக்ரஹாரம் - தஞ்சை
ஆறுமுக வேலனுக்கு 
அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும்
நீக்கி வைக்கும் பிள்ளையார்...

கலியுகத்து விந்தையைக்
காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே
இஷ்டம் போல சுற்றுவார்...

மெலட்டூர் - தஞ்சை 
மயிலாடுதுறை
பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்..
பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்..

கணபதி அக்ரஹாரம் - தஞ்சை
ஜய கணேச ஜய கணேச ஜய கணேச பாஹிமாம்
ஜய கணேச ஜய கணேச ஜய கணேச ரக்ஷமாம்...
* * *

ஓம் கம் கணபதயே நம:
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. அருமையான கேட்டு ரசித்த பாடல்களுடன் பிள்ளையார் பாட்டு அழகிய படங்களுடன் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. பிள்ளையார் பிள்ளையார் பாடி பரிசு பெற்று வந்தாள் என் பெண் பள்ளியில் சிறுவயதில். (இராண்டாவது பரிசு)
    பிள்ளையார் படங்கள் எல்லாம் அழகு.
    மரத்தடி சந்தனக்காப்பு பிள்ளையார் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும்
      மேலதிக செய்தியும் மகிழ்ச்சி..

      நன்றி.. நலம் வாழ்க..

      நீக்கு
  3. கபிலதேவ நாயனாரின் பாடலோடு இடுகை சிறப்பாக வந்துள்ளது.

    செய்கருமம் கைகூட்டும் - செய்யப்போகிற செயல் இடையூறு இல்லாமல் நிறைவேறச் செய்யும், ஆனை முகத்தானைத் தொழுது ஆரம்பித்தால். இதற்கு அர்த்தம், அப்படி இல்லை என்றால் செய்யப்போகும் கருமம் இடையூறு கொள்ள ஏதுவாகும் என்று.

    ஆமாம், இதன் தொடர்பான,

    வாக்குண்டாம்: நல்லமனம் உண்டாம்; மாமலராள்
    நோக்குண்டாம்; மேனி நுடங்காது -பூக்கொண்டு
    துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
    தப்பாமற் சார்வார் தமக்கு

    என்ற அவ்வையின் பாடலை விட்டுவிட்டீர்களே.

    இடுகை சிறப்பு. "பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்" பாடல் சிறுபிள்ளைகளைப் பாடச் சொல்லுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ. த.,

      கபிலதேவரின் பாடல் மங்கலம் மிக்கது...

      ஔவையார் அருளிய
      வாக்குண்டாம் பாடல் அடுத்த பதிவில்....

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான பாடல்.... படங்கள் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  5. கடைசியில் கொடுத்திருக்கும் பாடல் சீர்காழி சிவசிதம்பரம் பாடிய பாடல்... (பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்)

    விநாயகர் சதுர்த்திக்கு ஒரு முன்னோட்டம்! நன்று.

    பதிலளிநீக்கு
  6. துளசி: நல்ல பாடல்கள். படங்கள் அழகாக இருக்கின்றன. விநாயக சதுர்த்தி வருவதன் அடையாளம் தங்கள் பதிவில்! பிள்ளையார் பிள்ளையார் பாடல் கேட்டதுண்டு.

    கீதா: நல்ல எல்லாருக்குமான தோழரைப் பற்றி அழகான பதிவு. எனக்கு மிகவும் பிடித்தது இந்த வரிகள்...அந்தக் கை ஆனைமுகத்தானின் அழகு தும்பிக்கை மானிடர்க்கு அளித்திடும் நம்பிக்கை!! ஆமாம் எனவே காதலோடு தும்பிக்கையானை வணங்கிடுவோம்!!! நானும் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாடலைக் கேட்டதுண்டு அவரை வணங்கும் போதெல்லாம் நினைவுக்கு வருவதும் அஃதே. இப்போது கபிலரின் பாடலும் அந்த வரிகளும் நினைவில் பதித்துக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  7. பிள்ளையார், பிள்ளையார் பாடல் விரும்பிக் கேட்பதுண்டு....

    பதிலளிநீக்கு
  8. அருமையான பாடல் மற்றும் படங்கள்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..