நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புரட்டாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரட்டாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 11, 2025

புரட்டாசி 4

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
நான்காம் 
சனிக்கிழமை


ஸ்ரீநிவாசா
 கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா
கோவிந்தா
பக்த வத்சல
கோவிந்தா
பரம தயாளா
கோவிந்தா..

கோவிந்தா ஹரி
கோவிந்தா
நந்த நந்தன
கோவிந்தா..
கோவிந்தா ஹரி
கோவிந்தா
பாப விமோசன
கோவிந்தா..


இன்றைய பாடல் 


 நன்றி இணையம்


ஸ்ரீ ஸ்ரீநிவாசாய மங்கலம்

ஓம் ஹரி ஓம்
நமோ வேங்கடேசாய
**

சனி, அக்டோபர் 04, 2025

புரட்டாசி 3

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
மூன்றாம் 
சனிக்கிழமை


இன்று
கோடிஹத்தி 
ஸ்ரீ ஸ்ரீ நிவாசப்பெருமாள் தரிசனம்..


வானமுட்டிப் பெருமாள் எனப்படுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்..
தாயார் ஸ்ரீ மகாலக்ஷ்மி..

நின்ற திருக்கோலத்தில்  சேவை சாதிக்கின்றார்..

பிப்பல மகரிஷிக்கு தரிசனம்.. அவர் பெயரால் தீர்த்தம்.. அருகில் காவிரிக் கரை.

அத்தி மரத்தில் தோன்றிய பெருமாள் - சங்கு, சக்கரம், கதை, வரத அபய ஹஸ்தங்களுடன் பதினாறு அடி உயரம் கொண்டு பிரமாண்டமாகக் காட்சி தருகின்றார்..
எனவே தான் 
வானமுட்டிப் பெருமாள் என, செல்லப்பெயர்..

தொன்மையான பெயர்  - கோடி ஹத்தி விமோசனப் பெருமாள் என்பதாகும்.. 

கோடி ஹத்தி என்ற திருப்பெயரே இன்றைக்கு கோழி குத்தி என்றாகி விட்டது..

மன்னன் ஒருவனின் குஷ்ட நோயைத் தீர்த்து அருளியதாக ஐதீகம்..

புராதன கோயில் முற்றிலும் சிதைந்து விட தஞ்சை மராட்டிய மன்னர் காலத்தில் கோயில் மீண்டும் உருவாகியிருக்கின்றது..

அத்தி மரத்தில் திருவடிவம்..
அத்தி மரத்தின் வேர்கள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகச் சொல்கின்றனர்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் இந்த கோயிலுக்கு மானியங்கள் அளித்து, திருக்கோயில் பணிகள் செய்ததற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன..
(நன்றி விக்கி)

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வானதிராஜபுரம் செல்லும் பேருந்துகள் கோயில் வழியாக செல்கின்றன..

கடந்த வருடங்களில்
மயிலாடுதுறைக்கு  
சில முறை
சென்றிருந்தும் இங்கு தரிசனம் செய்யும் பேறு 
இன்னமும் கிடைக்கவில்லை..

பெருமாளே சரணம் 
-::-

ஓம் ஹரி ஓம்
நமோ ஸ்ரீநிவாசாய
**

சனி, செப்டம்பர் 27, 2025

புரட்டாசி 2

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
இரண்டாம் 
சனிக்கிழமை


ஜெய ஜனார்த்தனா 
கிருஷ்ணா
ராதிகா பதே
ஜன விமோசனா
கிருஷ்ணா
ஜன்ம மோக்ஷனா

கமல லோசனா கிருஷ்ணா
கம்ச மர்த்தனா
த்வாரகா பதே கிருஷ்ணா
தீன ரக்ஷகா..


இன்று
இனிய 
கிருஷ்ண கானம்


காணொளிக்கு நன்றி

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**

சனி, செப்டம்பர் 20, 2025

புரட்டாசி 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
முதல் சனிக்கிழமை


ராம ராம ராம ராம 
ராம நாம தாரகம்
ராம க்ருஷ்ண வாசுதேவ 
பக்தி முக்தி தாயகம்
ஜானகி மனோஹரம் 
சர்வ லோக நாயகம்
சங்கராதி சேவ்யமான 
திவ்ய நாம கீர்த்தனம்
**

இன்று
குழந்தைகளின்
ஸ்ரீ ராமநாம பஜன்


காணொளிக்கு நன்றி
ஜெய் ஸ்ரீராம்
ஓம் நம சிவாய
**

வியாழன், அக்டோபர் 17, 2024

தரிசனம் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 31
 வியாழக்கிழமை


தஞ்சை மாநகரின் ராஜ வீதிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கோயில்..

அறுநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமை உடையதாகும்..

ஸ்ரீதேவி பூதேவி உடன் விளங்க ஆஜானுபாகுவாய்த் திகழ்கின்றார் - ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்.. 

இக்கோயிலில் ஸ்ரீ களஞ்சிய லக்ஷ்மி சந்நிதி சிறப்புடையது..

வைகாசி திரு ஓணத்தில் கருட சேவை, தொடர்ந்து  வெண்ணெய்த் தாழி.. 

அடுத்து - புரட்டாசி.. நவராத்திரி..

மார்கழியில் 
வைகுந்த ஏகாதசி.. சொர்க்க வாசல் திறப்பு..

அனைத்து விசேஷங்களும் சிறப்புற நடைபெறுகின்றன..

இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் ஆயின் ஆட்டோ அல்லது தனி வாகனம் நல்லது..

 நன்றி விக்கி



தஞ்சை நகரின் சாபக்கேடுகளில் ஒன்று மா நகரின் ராஜ வீதிகளில் நகரப் பேருந்துகள் இயக்கப்படாதது.. 

1960 களில் 3 என்ற எண்ணுடைய நகரப் பேருந்து நகருக்குள் அரண்மனை வீதிகளில் சுற்றி வந்து கொண்டிருந்தது.. 

70 களுக்குப் பிறகு என்ன ஆயிற்றோ தெரியவில்லை..  இப்போது அப்படியான பேருந்து இல்லை..

தற்சமயம் இக்கோயிலுக்குச் செல்கின்ற வாய்ப்பு கிட்டவில்லை..

படங்கள்: நன்றி
விக்கி, தஞ்சையின் பெருமை..


விரைவில் இத் திருக்கோயிலுக்குச் சென்று படங்களைப் பதிவில் வழங்குதற்கு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசர் அருள் புரிவாராக..


ஓம் ஹரி ஓம் 

கோவிந்தோ கோவிந்த..
கோவிந்தோ கோவிந்த..
***

சனி, அக்டோபர் 05, 2024

தரிசனம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
மூன்றாவது 
சனிக்கிழமை



காணொளிக்கு  நன்றி


கண்ணறிகின்ற கதிர்மணி வண்ணா
காசினி காக்கும் கருணா மூர்த்தி
எண்ணரும் பிழைகள்
எல்லாம் இழைத்தேன்

கருதா நெறியில்
இருதாள் தொலைத்தேன்
விதிவழி நானும்
வினைப்பயிர் விளைத்தேன்

இளைத்தேன் களைத்தேன்
பிழைத்தேன் பிழைத்தேன்
பிழைதனில் நீங்கித்
தவித்தேன் துதித்தேன்

ஆனைக் கருளிய வரதா வருவாய் 
அடியனுக் கருளிட வருவாயே..


விண்ணவர் வேந்தே
வேங்கடத் தரசே
மண்ணவர் ஏத்தும் 
மாதவ மூர்த்தி
மடையன் கடையன் 
கொடியன் என்றே
நடை தடுமாறி 
நானிங்கு வந்தேன்
கடையன் எனினும்
காத்தருள் புரிவாய்
கரு மாமுகிலே 
காருண்ய மூர்த்தி..

ஓம் ஹரி ஓம்

கோவிந்தோ கோவிந்த
கோவிந்தோ கோவிந்த 
***

சனி, செப்டம்பர் 28, 2024

தரிசனம் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 12
இரண்டாம் சனிக்கிழமை

தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் இன்றைய தரிசனம்..

 நன்றி கூகிள்



இக்கோயில் தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனால் கட்டப்பட்டது. 

நேபாள மன்னரால் தஞ்சை மன்னருக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்ட சாளக் கிராமக் கல்லினால் ஆன கோதண்ட ராமர் சிலை கருவறையில்.. 
சௌந்தர்ய விமானம்...

கூடவே, சீதாதேவி, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் .. 











ஸ்ரீ கோயிலின் திருச்சுற்றில் ஸ்ரீ இராம காதை -அழகிய சித்திரங்களாகப் பொலிகின்றன..

ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் திருச்சுற்றின் வடபுறத்தில் தெற்கு முகமாகத் தனிச் சந்நிதியில் விளங்குகின்றார்..

புன்னை  மரம் தலவிருட்சம்..





 திருக்கோயிலுக்கு மன்னர் செய்தளித்த தேர் எங்கேயோ போய் விட்டது.. 

இப்போது தேர்நிலை மட்டுமே... 


தேர்நிலையைக் காப்பாற்றுவதற்காக அங்கே ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பிரதிஷ்டை செய்ய ப்பட்டுள்ளார்..

அனைவரும் தரிசிக்க வேண்டிய கோயில் புன்னை நல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்..

இக்கோயில் புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குப் பின் புறம் 250 மீ., தொலைவில் அமைந்துள்ளது..

ஸ்ரீ ராம ராம 
ஜெய ராம ராம

ஓம் ஹரி ஓம் 
***

சனி, செப்டம்பர் 21, 2024

தரிசனம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 
முதல் சனிக்கிழமை


நின்ற மா மருது இற்று வீழ  நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும்இணைத் தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட  கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே.. 1020



எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்  ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன்  திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1023



பாரும் நீர் எரி காற்றினோடு  ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற   பிறப்பிலி பெருகும் இடம் 
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1024
-: திருமங்கையாழ்வார் ;-

காணொளிக்கு  நன்றி

ஓம் ஹரி ஓம்
***

செவ்வாய், செப்டம்பர் 17, 2024

புரட்டாசி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி முதல் நாள்
செவ்வாய்க்கிழமை


புரட்டாசி

புரட்டாசி  தமிழ் காலக் கணக்கின்படி  ஆறாவது மாதம் ஆகும்.

புரட்டாசி முதல் நாள் (செப் 18)
பௌர்ணமி..

புரட்டாசி இரண்டாம் நாளில் இருந்து இயன்ற அளவிலான தான தர்மங்களுடன் மஹாளய பட்சம் ஆரம்பமாகின்றது..

புரட்டாசி 16 புதன்  (அக் 2) அன்று மஹாளய அமாவாசை..
ஆத்மார்த்தமாக முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களுக்கான நாள்.

மஹாளய அமாவாசையைத் தொடர்ந்து கலைமகள் திருவிழா ... 


புரட்டாசி 25 வெள்ளி  (அக் 11) அன்று சரஸ்வதி பூஜை.. மறுநாள் விஜயதசமி..

புரட்டாசி - ஜோதிடக் கணக்கில் கன்யா மாதம் எனப்படுவது.. கன்யா ராசிக்கு உரியவன் புதன்.. 

புதனுக்கு அதிபதி ஸ்ரீமந் நாராயணன்..  

பெருமாள் வழிபாட்டிற்கு உரிய சனிக்கிழமைகள் புரட்டாசியில் சிறப்புக்கு உள்ளாகின்றன..


அவரவர் குடும்ப வழக்கப்படி  பெருமாளுக்கு தளிகை சமர்ப்பித்து ஆராதனை செய்வதும் அன்னதானம் செய்வதும் பெரு மகிழ்ச்சிக்குரியவை..

இப்படியாக -  நன்மைகளை நிறைத்துக் கொண்டு வந்திருக்கின்றது புரட்டாசி..

எல்லாருக்கும் மங்கலம் என்று இருகரம் நீட்டி வரவேற்போம்..


நின்ற மாமருது இற்று வீழ  நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணைத் தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட  கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே.. 1020

எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்  ஒள்ளெயிற்றொடு
திண் திறல் அரியாயவன்  திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1023
-: திருமங்கையாழ்வார் :-
 ஓம் ஹரி ஓம்
**

சனி, அக்டோபர் 07, 2023

திருப்பாசுரம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 20
மூன்றாம் சனிக்கிழமை

இன்றைய
தரிசனம்
திரு சிறுபுலியூர்

கருடனுக்கும் ஆதிசேஷனுக்குமான 
செருக்கும் பகையும் நீங்கிய தலம்..


ஸ்ரீ ஸ்தல சயன பெருமாள்
ஸ்ரீ க்ருபா சமுத்திர பெருமாள்
திருமாமகள் நாச்சியார்



நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் தென்முகமாக புஜங்க சயனத் திருக்கோலம்
வில்வ மரம்

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்

மயிலாடுதுறை - திருவாரூர்  சாலையில் கொல்லுமாங்குடி எனும் ஊரில் இருந்து இரண்டு கிமீ., தொலைவில் இக்கோயில் உள்ளது..
 

நந்தா நெடுநரகத்திடை  நணுகாவகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுதேத்தும் இடம் 
எறிநீர்ச்
செந்தாமரை மலரும்  சிறுபுலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை அடியாய்  உனதடியேற்கு அருள் புரியே.. 1632

முழுநீலமும் மலராம்பலும் அரவிந்தமும் விரவிக் கழுநீரொடு மடவார்அவர்  கண்வாய் முகம் மலரும்
செழுநீர்வயல் தழுவும்  சிறுபுலியூர்ச் சலசயனம்
தொழும்நீர் மை யதுஉடையாரடி தொழுவார் துயர்இலரே.. 1633

சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா எனக்குரையாய் இது மறை நான்கின்உளாயோ
தீயோம் புகை மறையோர்  சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ உனதுஅடியார் மனத்தாயோ  அறியேனே 1634

மைஆர் வரிநீல  மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உனகழலே  தொழுது எழுவேன்  கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும்  சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஐவாய் அரவுஅணைமேல்  உறை அமலா அருளாயே.. 1635

கருமாமுகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெருமால் வரை உருவா பிறஉருவா நினதுஉருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனது அடியே சரணாமே.. 1636
-: திருமங்கையாழ்வார் :-
நன்றி 
நாலாயிர திவ்யப்ரபந்தம்

ஓம் ஹரி ஓம்
***

சனி, செப்டம்பர் 30, 2023

திருப்பாசுரம் 2

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 13
இரண்டாம் சனிக்கிழமை

திவ்யதேசம்
திருநறையூர்
நாச்சியார் கோயில்


ஸ்ரீ நறையூர்நம்பி வஞ்சுளவல்லி

ஹேம விமானத்தின் கீழ்
நின்ற திருக்கோலம்


ணிமுத்தா தீர்த்தம்
வகுளம் தல விருட்சம்


மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 
கல்கருடன் சிறப்பு


கலங்க முந்நீர் கடைந்து  அமுதம் கொண்டு  இமையோர் 
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலங்கொள் வாய்மை  அந்தணர் வாழும் நறையூரே.. 1488

முனையார் சீயம் ஆகி  அவுணன் முரண் மார்வம்
புனைவாள் உகிரால்  போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்
சினையார் தேமாஞ் செந் தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே.. 1489.   
 
ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் ஊர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து
நானப் புதலில் ஆமை ஒளிக்கும் நறையூரே..      1490.  
 
உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல்  பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்
பொறியார் மஞ்ஞை பூம்பொழில்தோறும் நடம் ஆட
நறுநாள் மலர்மேல்  வண்டு இசை பாடும் நறையூரே.. 1491.  

விடையேழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்
பெடையோடு அன்னம்  பெய்வளையார் தம் பின்சென்று
நடையோடு இயலி நாணி ஒளிக்கும் நறையூரே.. 1492

பகுவாய் வன்பேய்  கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான் ஊர்
நெகுவாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின்
நகுவாய் மலர்மேல்  அன்னம் உறங்கும் நறையூரே.. 1493.  
-: திருமங்கையாழ்வார் :-

 நன்றி 
நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
**

ஓம் ஹரி ஓம்
***