நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 07, 2023

திருப்பாசுரம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 20
மூன்றாம் சனிக்கிழமை

இன்றைய
தரிசனம்
திரு சிறுபுலியூர்

கருடனுக்கும் ஆதிசேஷனுக்குமான 
செருக்கும் பகையும் நீங்கிய தலம்..


ஸ்ரீ ஸ்தல சயன பெருமாள்
ஸ்ரீ க்ருபா சமுத்திர பெருமாள்
திருமாமகள் நாச்சியார்நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் தென்முகமாக புஜங்க சயனத் திருக்கோலம்
வில்வ மரம்

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்

மயிலாடுதுறை - திருவாரூர்  சாலையில் கொல்லுமாங்குடி எனும் ஊரில் இருந்து இரண்டு கிமீ., தொலைவில் இக்கோயில் உள்ளது..
 

நந்தா நெடுநரகத்திடை  நணுகாவகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுதேத்தும் இடம் 
எறிநீர்ச்
செந்தாமரை மலரும்  சிறுபுலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை அடியாய்  உனதடியேற்கு அருள் புரியே.. 1632

முழுநீலமும் மலராம்பலும் அரவிந்தமும் விரவிக் கழுநீரொடு மடவார்அவர்  கண்வாய் முகம் மலரும்
செழுநீர்வயல் தழுவும்  சிறுபுலியூர்ச் சலசயனம்
தொழும்நீர் மை யதுஉடையாரடி தொழுவார் துயர்இலரே.. 1633

சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா எனக்குரையாய் இது மறை நான்கின்உளாயோ
தீயோம் புகை மறையோர்  சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ உனதுஅடியார் மனத்தாயோ  அறியேனே 1634

மைஆர் வரிநீல  மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உனகழலே  தொழுது எழுவேன்  கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும்  சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஐவாய் அரவுஅணைமேல்  உறை அமலா அருளாயே.. 1635

கருமாமுகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெருமால் வரை உருவா பிறஉருவா நினதுஉருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனது அடியே சரணாமே.. 1636
-: திருமங்கையாழ்வார் :-
நன்றி 
நாலாயிர திவ்யப்ரபந்தம்

ஓம் ஹரி ஓம்
***

11 கருத்துகள்:

 1. காலை தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 2. ஹரி ஓம் நாராயண... கோவில் படம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹரி ஓம்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. அறியாத கோவிலின் தரிசனமும், விபரமும் கிடைக்கப் பெற்றேன். கோபுர தரிசனம் சிறப்பு. ஸ்ரீ மன்நாராயணரை அடி பணிந்து வணங்கி அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
  நன்றி..

  ஓம் ஹரி ஓம்..

  பதிலளிநீக்கு
 5. திருமங்கையாழ்வார் திவ்யப்ரபந்தம் பாடலை பாடி பெருமாளை தரிசனம் செய்து கொண்டேன். சனிக்கிழமை புரட்டாசி தரிசனம் அருமை.

  பதிலளிநீக்கு
 6. சனிக்கிழமை புரட்டாசி தரிசனம் அருமை..

  தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
  நன்றி..

  பதிலளிநீக்கு
 7. திருமங்கையாழ்வார் பாசுரமும், கோயில் பற்றிய விவரங்களும் சிறப்பு.

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ஓம் நமோ நாராயணாய.

  தரிசித்து தோத்திரம் பாடி மகிழ்ந்தோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..