நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 30, 2023

அன்ன லிங்கம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 13
திங்கட்கிழமை

தஞ்சை ஸ்ரீ பெருவுடையார்
அன்னாபிஷேகத்திற்காக
சிவ பக்தர்களால் 
1,000 கிலோ பச்சரிசியும் 900 கிலோ 
காய் கனிகளும் வழங்கப்பட்டன..

பக்தர்கள் வழங்கிய அரிசியை சோறாக்கி பெருவுடையார் திருமேனியில் சாற்றியதுடன் காய்கள் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு நிகழ்ந்த மகா தீப ஆராதனையை ஆயிரக்கணக்கான அடியார்கள் தரிசித்தனர்.. 

தொடர்ந்து லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும் கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப் பெற்றது..
 

மேலும் சில படங்கள்
 நன்றி
திரு. அகில்.
 
திருவலஞ்சுழி
ஸ்ரீ கபர்தீசர்திருக்கோடிகா
ஸ்ரீ கோடீஸ்வரர்திருவட்டத்துறை
ஸ்ரீ தீர்த்தபுரீஸ்வரர்
இல்லக விளக்கது
  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
  சோதி  உள்ளது
பல்லக விளக்கது
  பலரும் காண்பது
நல்லக விளக்கது
  நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

 1. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி ஜி..

   நீக்கு
 2. அன்னாபிஷேக படங்கள் நன்றாக இருக்கின்றது.

  சிவ சக்தி பாதம் பணிவோம் அருளை வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவ சக்தி பாதம் பணிவோம் ..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நீக்கு
 3. அனைத்து கோவில்கள் அன்னாபிஷேக படங்கள் அருமை. படங்கள் மூலம் தரிசனம் செய்து கொண்டேன். தொலைக்காட்சியில் நிறைய கோவில்கள் அன்னாபிஷேகம் நேரடி காட்சியாக பார்த்தேன்.
  எல்லோருக்கும் கொடுத்தது போக மீதி நீர் நிலைகளில் கரைக்கப்படும். அனைத்து ஜீவராசிகளும் பசியாறும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // எல்லோருக்கும் கொடுத்தது போக மீதி நீர் நிலைகளில் கரைக்கப்படும். அனைத்து ஜீவராசிகளும் பசியாறும்..//

   இந்த வருடம் ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கப்பட்ட காய்கறிகள் எங்களுக்குக் கிடைத்தன..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி தனபாலன்..

   நீக்கு
 5. பிரசாதம் உங்களுக்கும் கிடைத்தது சிறப்பு.  ஓம் நமச்சிவாய...

  பதிலளிநீக்கு
 6. ஓம் நம சிவாய..

  அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

  நன்றி ஸ்ரீராம்..

  பதிலளிநீக்கு
 7. பிரசாதம் கிடைத்தது சிறப்பு. மதுரையில் இருந்த காலங்களில் சுந்தரேசர் சந்நிதிக்கு நேர் எதிரே கீழே உட்கார்ந்து கொண்டு அன்னாபிஷேகம் பார்த்த நினைவுகள் வந்தன. அனைத்துப் படங்களும் சிறப்பு. பெருவுடையார் கோயில் அன்னாபிஷேக வீடியோ எனக்கும் வந்திருக்கு. மிக அருமை.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..