நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 19, 2023

சக்தி லீலை 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 2
வியாழக்கிழமை

மங்களகரமான
நவராத்திரியின்
ஐந்தாம் நாள்


அன்னமும் சொர்ணமும் அன்புடன் ரட்சி..

கந்த சஷ்டி கவசத்தில் நம் எல்லோருக்கும் பழக்கமான சொற்றொடர்..

.சோற்றுப் பருக்கை ஒவ்வொன்றும் சிவ ஸ்வரூபம்.. 

சீவன் சிவலிங்கம் என்பார் திருமூலர்..

சோற்றை சிவமாகப் பாவித்து உண்பவர்க்கே சீவன் சிவலிங்கம் என கைகூடி வரும்.. 

மற்றவர்க்கு அல்ல!..

இப்படியான 
சிவ ஸ்வரூபமாகிய சோற்றை அம்பிகையே முன் வந்து அளிக்கின்றாள் எனில் - அடியார்க்கு வேறென்ன வேண்டும்!..

அடுத்த வேளை சோற்றுக்காக கஷ்டப்படும் ஏழையாயினும் - நோயில்லாமல் இருக்க வேண்டும்.. 

நோய்களுள் முதன்மையானது பசிப்பிணி..

பசிப்பிணி நீக்குவதற்காக - அடியார் ஒருவருக்கு உலவாக்கிழி வழங்கப்பட்ட தலம் திருச்சோற்றுத்துறை..


இறைவன்
ஓதவனேஸ்வரர்
அம்பிகை
அன்னபூரணி

இறையருள் சோறு வழங்கியதாக
பல்வேறு தலங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் முக்கியமாக இரண்டு தலங்கள்..

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு திரு அண்ணாமலையில் நம சிவாயர் என்ற மகான் வாழ்ந்திருந்தார்.. அவர் திருக்கோயிலுக்குப் பின்புறம் மலையில் குகைக்குள் இருந்ததால் குகை நம சிவாயர் எனப்பட்டார்.. 

இவர் தமது சீடராகிய நமசிவாய மூர்த்தி என்பவரின் மெய்யறிவு கண்டு வியந்து பாராட்டி - தில்லைத் திருச்சிற்றம்பலத்திற்குச் சென்று அங்கே தொண்டு செய்யும்படி பணித்தார்..

அவ்விதமே - நமசிவாய மூர்த்தி - குரு நமசிவாயர் எனும் நாமகரணத்துடன் தில்லைக்குப் பயணித்தார்.. வழியில் - இரவாகிட பசி மேலிட்டது.. 

களைத்திருந்தாலும்
பக்தி மிகுத்த நெஞ்சில் இருந்து திருப்பாடல் ஒன்று பிறந்தது..


அண்ணா மலையார் அகத்துக் கினியாளே 
உண்ணா முலையே உமையாளே - நணணா 
நினைதோறும் போற்றிசெய நின்னடியார் உண்ண 
மனைதோறுஞ் சோறு கொண்டு வா.. 

களைப்பு எய்திய வேளையில் - அவரைத் தாங்கி அருள் புரிந்தாள் உண்ணாமுலையாள்.. 


அர்த்தஜாம பூஜையின் போது நிவேதனம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை தாம்பாளத்துடன் கொடுத்து மறைந்தாள்..

அதன் பிறகு பற்பல அற்புதங்களுடன் தில்லை சென்று சேர்ந்திட அங்கும் இவ்விதமே பிரார்த்தனை..

ஊன்பயிலுங் காயம் உலராமல் உன்றனது 
வான்பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் - தேன்பயிலும் 
சொல்லிய நல்லார் துதிக்கும் சிவகாம 
வல்லியே சோறு கொண்டு வா..

சிவகாமசுந்தரியால் சோறளிக்கப் பெற்ற - குரு நமசிவாயர்  தில்லையில் பல அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார்..

இவ்விதமே,
வள்ளல் பெருமான் சிறு வயதில் அண்ணனுக்கு பயந்து கொண்டு இரவுப் பொழுதில்  வீட்டின் திண்ணையில் படுத்து உறங்கியபோது  - பசியுடன் உறங்குகின்றான் பாலகன் என்றுஒற்றியூர் வார்குழலாள் வடிவுடைய நாயகி அன்னம் வழங்கி அருள் பாலித்திருக்கின்றாள்..

குரு நமசிவாயருக்கும் வள்ளல் பெருமானுக்கும் சோறு கொணர்ந்தளித்த அம்பிகை நம்மையும் காத்தருள்வாளாக..


அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் 
பொன்னம் பாலிக்கும் மேலும்  இப்பூமிசை 
என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற 
இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே.. 5/1/1
-: திருநாவுக்கரசர் :-


அன்னம் பாலிக்கும் அம்பிகையை
மஹாலக்ஷ்மி எனப் போற்றி  எளிய மனிதரைக்கு உதவி புரிந்து சிற்றுயிர்களை ஆதரித்து இயற்கை வளங்களை இயன்ற வரை காத்தலே எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கு நாம் செய்யும் தொண்டு..
**
ஓம் 
அன்னலக்ஷ்ம்யை நம:

ஓம் சக்தி ஓம்
ஓம் சிவாய 
 திருச்சிற்றம்பலம்
***

12 கருத்துகள்:

  1. அம்மா என்றால் அன்பு.  அம்மாவைத்தவிர யாரால் மகனின் பசியை அறிந்திட முடியும்?  நேரம் தவறாது அமுதூட்ட முடியும்?  அம்மையைச் சரணடைவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய நவராத்திரி பதிவும் அருமை. நிறைய விபரங்களுடன் கூடிய நல்ல பதிவு. ரசித்துப் படித்து அன்னையை வணங்கி, போற்றித் துதித்து கொண்டேன். அன்னையின் அருளின்றி நாம் இந்த உலகில் ஜீவித்திருப்பது ஏது?அனைவருக்கும் தனம், தானியம் தந்து பசி போக்கும் அன்னை மகாலக்ஷ்மியை துதிப்போம். 🙏🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தனம், தானியம் தந்து பசி போக்கும் அன்னை மகாலக்ஷ்மியை துதிப்போம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  3. அன்னபூரணி தாயின் அற்புதங்கள் கண்டு படித்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. //பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து// என்ற திருவாசக பாடல் நினைவுக்கு வந்தது.

    பதிவு அருமை.

    தாயுக்கு தான் தெரியும் குழந்தைக்கு எப்போது பசிக்கும், எவ்வளவு சாப்பிடும் என்று.
    அன்னையின் அரவணைப்பு அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். அன்னையை தொழுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையின் அரவணைப்பு அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  5. அன்னபூரணீயாக, சாகம்பரியாக விளங்கும் அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திப்போம். தன் கருவில் நம்மை வைத்துப் பாதுகாத்து வரும் அம்பிகைக்கு உகந்த நாட்களான இந்த நவராத்திரி தினங்கள் அனைவருக்கும் நன்மையே தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இந்த நவராத்திரி தினங்கள் அனைவருக்கும் நன்மையே தரட்டும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..