நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 18, 2023

சக்தி லீலை 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி முதல் நாள்
புதன் கிழமை

மங்களகரமான
நவராத்திரியின்
நான்காம் நாள்..

சக்தி லீலை 4

காவிரியின் வடகரையில் பனை மரத்தினை தலவிருட்சமாகக் கொண்ட தலம் திருப்பனந்தாள்..

இறைவன் அருணஜடேசுவரர்.. 
அம்பிகை பிரஹந்நாயகி


ஒருசமயம் தாடகை எனும் இளம் பெண்ணின் பூஜையை ஏற்கும் பொருட்டு சிவலிங்கம் சற்றே சாய்ந்தது.. 

அதன் பின் எவ்வளவு முயன்றும் நேராக்க முடியவில்லை..

செய்தி அறிந்த கடவூரின் கலயன் என்பவர் கோயிலுக்கு வந்து பட்டு நூல் ஒன்றினை சிவலிங்க பாணத்தில் கட்டி விட்டு அதன் மறுமுனையைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு இழுக்க சிவலிங்க பாணம் நிமிர்ந்தது.. தகவல் அறிந்த அரசன் பெரும் பொருளை நல்கி சிறப்பித்தான்..

ஆயினும், அப்பொருளைக் கொண்டு திருமடம் அமைத்து  அடியார்களுக்கு அன்னம் வழங்கினார்..

சிவாலயங்களில் குங்கிலியத் தூபம் இட்டார்.. 

இவர் அமைத்ததே திரு ஐயாற்றில் குங்கிலியக் குண்டம்..

இவரது திருமடத்தில் ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும் அமுது செய்திருக்கின்றார்கள் என்றால் -
குங்கிலியக் கலயர் பெற்ற பேறு தான் என்னே!..

இருப்பினும் - தனது திருப்பணிகளால் மீண்டும் ஏழையானார்..

மிகவும் வறுமையுற்ற நிலையில் அவரது மனையாள் - வீட்டிற்கான அரிசி பருப்பு வாங்குவதற்காக தனது திருமாங்கல்யத்தைக் கழற்றிக் கொடுத்தாள்..

குங்கிலியக் கலயர் அரிசி பருப்பு வாங்காமல் மீண்டும் சிவாலயங்களுக்காக குங்கிலியம் வாங்கினார்..

கலயரின் செயல் கண்டு இரங்கிய 
எம்பெருமான் தன் பங்கினளை நோக்கினார்.. 

அந்த அளவில் அம்பிகையும் கடைக்கண் நோக்கினாள்.. 

அதுகண்டு பணிந்த குபேரன், சிவ கணங்களைக் கொண்டு 
நெல் அரிசி பருப்பு நெய் முதலான பல்வளங்களுடன் குங்கிலியக் கலய நாயனாரின் இல்லத்தை பொன் மணி ரத்தினங்களால் நிறைத்திட அம்பிகை அங்கே செல்வ மழை பொழிந்தாள்..

அன்பர் அங்கு இருப்ப நம்பர் 
அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத் 
தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும் 
பொருவில் பல்வளனும் பொங்க
மன்பெரும் செல்வமாக்கி 
வைத்தனன் மனையில் நீட..
-: சேக்கிழார் :-


இன்று நவராத்திரி விழாவின் நான்காம் நாள்..

நம் நாட்டில்
பெண்மையைப் போற்றி வணங்குகின்ற 
நவராத்திரி நாட்களில் இன்றும் நாளையும் நாளை மறுநாளும் ஜகன் மாதாவாகிய அம்பிகை
ஸ்ரீ மஹாலக்ஷ்மியாக வழிபடப்படுகின்றாள்..

இந்நாட்களில் மஹா லக்ஷ்மி  ஸ்தோத்திரம், அஷ்ட லக்ஷ்மி  ஸ்தோத்திரம்,  கனக தாரா  ஸ்தோத்திரம் முதலான ஞான நூல்களின் வழியாக ஸ்ரீ மஹாலக்ஷ்மியை சிந்தித்திருப்பது நலம் தரும்..

மஹா லக்ஷ்மியைப் போற்றி வணங்கி எளிய மனிதருக்கு உதவி புரிந்து சிற்றுயிர்களை ஆதரித்து இயற்கை வளங்களை இயன்ற வரை காத்தலே எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கு நாம் செய்யும் தொண்டு..


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுர பூஜிதே 
சங்க சக்ர கதா ஹஸ்தே  மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

மலரின் மேவு திருவே உன் மேல்
மையல் பொங்கி நின்றேன்
நிலவு செய்யும் முகமும் காண்பார்
நினைவழிக்கும் விழியும்
கலகலென்ற மொழியும் தெய்வக்
களி துலங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் கண்டுன்
இன்பம் வேண்டுகின்றேன்..
-: மகாகவி :-
*
 
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

ஓம் சக்தி ஓம் 

ஓம் சிவாய 
திருச்சிற்றம்பலம்
***

14 கருத்துகள்:

 1. வித்தியாசமான முறையில் நவராத்திரி பதிவுகளை வழங்கி வருகிறீர்கள்.  சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி. ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ஆஹா! பல வருடங்கள் முன்னர் போனோம். அங்கே மஹா சந்நிதானம் செய்த கோபூஜை, கஜ பூஜை எல்லாமும் பார்த்துப் படங்கள் எல்லாம் எடுத்துப் பதிவும் போட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக
   கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அக்கா..

   நீக்கு
 3. சிறப்பான நவராத்திரிப் பதிவுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி அக்கா..

   நீக்கு
 4. குங்கிலியக் கலய நாயனாரின் அதீத பக்தி சிலிர்க்க வைக்கும்.

  அம்பிகையை துதித்து வணங்குவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குங்கிலியக் கலய நாயனார் போற்றி..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு
 5. 3 நாட்கள் முன்னர் அனுப்பிய மெயில் பார்க்கலையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது தான் பார்த்தேன்..

   பதில் அனுப்பியுள்ளேன்..

   மகிழ்ச்சி..
   நன்றி அக்கா

   நீக்கு
 6. மிக அருமையான பதிவு.
  சேக்கிழார் பாடல், பாரதியார் பாடல்கள் பகிர்வு அருமை.
  குங்கிலியக்கலய நாயனார் வரலாறு பகிர்வும் படங்களும் அருமை.
  அம்பிகையை வணங்கி அவர் அருளை பெறுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   ஓம் சக்தி ஓம்

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..