நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 04, 2023

கண்ணன் கோயில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 17
 புதன் கிழமை


தஞ்சை நகரில் - கரந்தை -  கருந்திட்டைக்குடி எனும் புராதன பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்..

என்றாலும், கரந்தை யாதவக் கண்ணன் என்று தான் பிரசித்தம்..

1755 ல் பெரியண்ண பிள்ளை என்பவரால் கட்டப்பட்ட இந்தக் கோயில் தெற்கு நோக்கியது..

அழகான கோபுரத்தைக் கடந்ததும் பலிபீடம் கொடிமரம் கருட மண்டபம்..

கொடிமரத்தின் மேற்குப் பக்கம் எழிலான ஸ்ரீ வேங்கடேசர் சுதை சிற்பம்.. 

அருகில் தோரண மண்டபத்தில் ஸ்ரீ விநாயகர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர்..

கோயிலை ஸ்தாபித்த பெரியண்ண பிள்ளை அவர்களுக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது..

மூலஸ்தானத்தில் ருக்மிணி சத்யபாமா உடனருளும் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி..

முன் மண்டபத்தில் நர்த்தன கிருஷ்ணன், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் திருமேனிகள் விளங்குகின்றன..

திருசுற்றில் துளசி மாடம்..

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடத்தப் பெறுகின்றது..

தஞ்சையின் மகா கருட சேவையிலும் நவநீத சேவையிலும் இந்தக் கோயிலின் பங்களிப்பும் உண்டு..

தஞ்சை நகரில் மேலராஜ வீதி
ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், சகா நாயக்கன் தெரு ஸ்ரீ பூலோக கிருஷ்ணன், மகர்நோன்புச் சாவடி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் எனவும் கோயில்கள்  விளங்குகின்றன..

கரந்தையில் -
நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்திருக்கும் கோயில் இது..













தர்மம் என்னும் தேரில் ஏறி
கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக்
கண்ணன் வந்தான்
-: கவியரசர் :-

க்ருஷ்ண க்ருஷ்ண
ஓம் ஹரி ஓம் 
***

13 கருத்துகள்:

  1. தஞ்சையில் இருந்த காலத்தில் உண்மையில் கரந்தை பக்கமே போனதில்லை.  ஒன்றிரண்டு சமயம் பஸ்ஸில் தாண்டிச் சென்றதோடு சரி..  கிருஷ்ணா தியேட்டருக்கு கரந்தை தாண்டிதான் செல்ல வேண்டுமோ...   நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய கிருஷ்ணா டாக்கீஸ் தஞ்சை நகரின் வடக்குப் பக்கத்தில் கரந்தைக்கு முன்னாலேயே இருந்தது..

      1982/83 ல் மழை நாளில் இடிந்து விழுந்து விட்டது..

      அதன் பிறகு... அவ்வளவு தான்..

      நீக்கு
  2. உள்ளே எடுத்த படங்கள் சரி,  தெருவில் கோவிலிலிருந்து சற்று தூரத்தில் கோவிலின் வெளிப்புற தோற்றம் தெரியும் வண்ணம் ஒரு படம் எடுத்து வெளியிட்டிருக்கலாமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்படி யோசித்திருக்கின்றேன்..

      கேட்பார் யாரும் இல்லாததால் கோயிலின் வாசலில்
      பக்கவாட்டு சுவர்களில் அரசியல் வியாதிகளின் விகார விளம்பரங்கள்.. இன்னும் பல அவலங்கள்..

      அவற்றைக் காட்சிப்படுத்த விரும்புவதில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. கரந்தை கண்ணன் கோவில் தரிசனம் செய்து கொண்டேன். தாளாத துயர் தீர்க்க கண்ணன் வர வேண்டும். இன்று நிறைய பேர், மனம், உடல் சோர்ந்து போய் இருக்கிறார்கள் அவர்களுக்கு கண்ணன் தரிசனம் ஆறுதல் தரட்டும்.

    பதிலளிநீக்கு
  4. /// கண்ணன் தரிசனம் ஆறுதல் தரட்டும்.///

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  5. தஞ்சைக் கோயில்கள் பற்றி மொத்தமாகத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போடுங்கள். இந்தக் கோயில் பற்றி எல்லாம் தெரியவே தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாக புத்தகமா...

      பார்க்கலாம் அக்கா..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  6. கோயிலும் கோயில் படங்களும், விவரங்களும் மிக நன்று துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  7. கரந்தை யாதவக் கண்ணன் கோவில் கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..